கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கண்ணன்

395 கதைகள் கிடைத்துள்ளன.

பீடி

 

  (இதற்கு முந்தைய ‘ஓசி பேப்பர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது ). பட்ட காலிலேயே படும் என்கிற மாதிரி ஏற்கனவே ஐயர் வீட்டில் ஓசி பேப்பர் வாங்கிக்கொண்டு வந்து தந்து கொண்டிருந்த கதிரேசனுக்கு, தகப்பனுக்கு பீடிக்கட்டு வாங்கிக் கொடுக்கிற வெட்கங்கெட்ட வேலையும் புதிதாக வந்து சேர்ந்துவிட்டது. ஒரேயொரு வித்தியாசம். ஓசி பேப்பர் வாங்கித்தரும் வேலை சாயந்திரம் பள்ளி விட்டு வந்ததும்; பீடிக்கட்டு வாங்கிக் கொடுக்கும் வேலை காலையில் பள்ளி போவதற்கு முன். இந்த


ஓசி பேப்பர்

 

  (இதற்கு முந்தைய ‘கஞ்சத்தனம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). மச்சக்காளையின் முன்னால் போய் சேலைத் தலைப்பை இழுத்து மூடிக்கொண்டு உட்கார்ந்தபோது, காசியின் பெண்டாட்டிக்கு கூச்சம் தாங்க முடியவில்லை. அதனால் கொஞ்ச நேரத்திற்கு அவளால் வாயைத்திறந்து பேசவே முடியவில்லை. அதற்காக எத்தனை நேரத்திற்குக் கூச்சப் பட்டுக்கொண்டே உட்கார்ந்திருப்பது? மச்சக்காளையும் அவர் பாட்டுக்கு வாயைத் திறக்காமல் – நல்லதாய்ப் போயிற்று என்கிற மாதிரி அவளைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார். யாரிடத்திலும் முதலில் வாயைத்திறந்து ‘என்ன விஷயம்?’ என்று


கஞ்சத்தனம்

 

  (இதற்கு முந்தைய ‘வட்டிப் பணம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). மச்சக்காளையிடம் வேற ஒரு சுபாவமும் பரவலாக வளர்ந்து விட்டிருந்தது. பூத்தும் மணம் பரப்பிக்கொண்டிருந்த அந்த சுபாவம், வடிகட்டின கஞ்சத்தனம்! மனசு வந்து யாருக்கும் மச்சக்காளை ஒரு பைசா தரமாட்டார். வீட்டில் அவருடைய பிள்ளைகளுக்கு, ஒருநாளும் நல்ல உடையணிந்து கொள்கிற மாதிரி எந்த விலை உயர்ந்த துணியும் வாங்கித் தரமாட்டார். இருப்பதிலேயே ரொம்ப மட்டமான விலை குறைச்சலான துணிதான் வாங்கித் தருவார். அவர்


வட்டிப் பணம்

 

  (இதற்கு முந்தைய ‘கடைக் கதைகள்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலை மச்சக்காளை வெறும் ‘ப்ராமிஸரி நோட்’ என்ற எழுத்து ஒப்பந்தத்தில் மட்டும் செய்து கொண்டிருக்கவில்லை. ஒருத்தர் வந்து மச்சக்காளையிடம் கொஞ்சம் குறைவான பணம் கடனாகக் கேட்டால், அவரிடமிருந்து தங்க நகைகள் ஈடாக வாங்கிவைத்துக்கொண்டு அந்த உத்திரவாதத்தின் பேரில்தான் மச்சக்காளை யாருக்கும் கடன் கொடுப்பார், கடன்கேட்டு வந்தவர் கொஞ்சம் பெரிய தொகையாகக் கேட்டால், அவரிடம் இருந்து வீட்டுப் பத்திரம்


கடைக் கதைகள்

 

  பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே கதிரேசனுடன் வகுப்பில் படித்த பல பையன்கள் அவரவர்களுடைய அப்பாக்களைப் பற்றி எதையாவது சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வார்கள். அதயெல்லாம் கேட்கும்போது கதிரேசனுக்கு மனதில் சோகமும் ஒருவித இழப்பு உணர்வும் வந்து கவிந்துகொள்ளும். அவனுடைய அப்பா மச்சக்காளை பற்றியும் அந்த மாதிரியெல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படி ஒரு விஷயமும் இல்லாமல் போய்விட்ட ஏமாற்றம் அந்த மாதிரி நேரங்களில் கதிரேசனின் மனதில் அதிகமாக வரும். அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கு எப்படியோ;