கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கண்ணன்

395 கதைகள் கிடைத்துள்ளன.

ஆலமரத்தின் அடியில்

 

  இரவு மணி பத்தரை. பெங்களூர் நகரம் உடம்பை வருடும் குளிரில் மெல்ல உறங்க ஆரம்பித்திருந்தது. தூக்கம் வராது கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான் திவாகர். வாசலில் எவரோ கார் கதவை அடித்துச் சாத்தும் சத்தத்தை தொடர்ந்து வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தான். வெளியே முகத்தில் ஏராளமான பதட்டத்துடன் குமார் நின்றிருந்தான். பெங்களூரின் இரவுக் குளிரிலும் வியர்த்தான். “திவா, நான் இப்ப மிகப் பெரிய ஆபத்துல மாட்டியிருக்கேன்… ஒரு கொலை பண்ணிட்டேன்.


வேட்கை

 

  இரவு எட்டு மணி. மைசூர் – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூர் கன்டோன்மெண்ட் ஸ்டேஷன் வந்து நின்றது. ஏ.ஸி ரிசர்வேஷன் பெட்டியைத் தேடி ஏறி இடம் பார்த்து அமர்ந்து கொண்டேன். நாளை காலை ஆறு மணிக்கு கும்பகோணத்தில் இறங்க வேண்டும். என்னுடைய இந்தப் பயணம் எனக்கே விசித்திரமாக இருக்கிறது. நாளை பதினோரு மணிக்கு கும்பகோணம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ‘தற்போதைய தமிழ்ச் சிறுகதை இலக்கியம்’ பற்றி மாணவிகளிடையே நான் பேச வேண்டும். அதைத் தொடர்ந்து


ஹர்ஷிதா எனும் அழகி

 

  இரவு எட்டு மணி. பாம்பே ரயில்வே ஸ்டேஷன். அகமதாபாத் செல்ல வேண்டிய குஜராத் மெயில் முதல் பிளாட்பரத்தில் வந்து நிற்பதற்கு இன்னமும் இரண்டு மணி நேரங்கள் இருந்தன. அகமதாபாத் செல்வதற்காக அன்று மதியம்தான் தாதர் எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து பம்பாய் வந்திருந்தான் பாலாஜி. சென்னையில் ஒரு இண்டர்வியூவிற்கு சென்றவன் கையோடு வேலைக்கான ஆர்டரையும் வாங்கிய உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தான். ‘நாளை முதல் காரியமாக இந்த அகமதாபாத் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஒரு மாத நோட்டீஸ் பிரியடில்


காலம் கெடவில்லை

 

  “வாசல்ல எதுக்குடி மசமசன்னு நிக்கற, சந்தியவன வேளையாறது… போய் சாமிக்கு விளக்கேத்துடி. வயசுக்கு வந்த பொண்ணு, காலங்கெட்டுக் கிடக்கறது தெரியாம, இப்படி போறவங்க வர்றவங்களையெல்லாம் பார்த்துக்கிட்டு வாசல்ல நிக்கலாமா?” மங்களம் பாட்டி, தன் மகன் வயிற்றுப் பேத்தி லலிதாவை விரட்டிக் கொண்டிருந்தாள். லலிதாவுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. தான் வாசலில் நிற்பதை அனுமதிக்காத பாட்டி, அலுவலகத்திற்குச் சென்று தன்னை சம்பாதிக்க அனுப்புவது மட்டும் எப்படி? மாதா மாதம் சுளையாக வரும் சம்பளத்திற்காகவா என எண்ணிக் கொண்டாள்.


தூக்கம்

 

  இரவு ஒன்பது மணி. பெங்களூர் சிட்டி ரயில்வே ஸ்டேஷன். மைசூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு தயாராக நின்றது. ரகுராமன் அவசர அவசரமாக எஸ்-6 ரிசர்வ்டு பெட்டியில் ஏறி அமர்ந்தான். கரூரில் உள்ள ரகுராமனின் அக்கா பெண்ணுக்கு நாளை காலை பத்து மணிக்கு நிச்சயதார்த்தம். பெண்ணுக்கு மாமா என்கிற முறையில் இவன் கண்டிப்பாக கரூர் போக வேண்டிய நிர்ப்பந்தம். ரயில் கரூரை அடையும்போது விடிகாலை நான்கு மணியாகிவிடும். தான் தூங்கிவிடாது கரூரில் தவறாது இறங்கியாக வேண்டுமே என்கிற