கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கண்ணன்

395 கதைகள் கிடைத்துள்ளன.

இறுதி உரை

 

  (இதற்கு முந்தைய ‘இறுதி நாட்கள்’ சிறுகதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) ஒருசில உறவினர்கள் மச்சக்காளையை ஒருமுறை சென்னை அடையாறில் இருக்கும் புற்றுநோய் ஹாஸ்பிடலுக்கு அழைத்துக் கொண்டுபோய் காட்டிவிட்டு வரலாமே என்று யோசனை சொன்னார்கள். புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாந்தா பற்றி மிகவும் சிலாகித்துப் பேசினார்கள். மச்சக்காளை சட்டென்று தன் கண்களை ஆசையுடன் விரித்துக்கொண்டார். மூழ்கிப்போக இருந்தவருக்கு பிடித்துக்கொள்ள ஒர் துரும்பு கிடைத்தாற்போல இருந்தது. அவரைப் பொறுத்தவரை ‘தீர்க்காயுசு’ எதுவும் தேவை கிடையாது! சில


இறுதி நாட்கள்

 

  (இதற்கு முந்தைய ‘புற்றுநோய்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) ஐம்பது வயதாகியும் மண்டையில் ஒரு முடிகூட உதிரவில்லை என்பதில் மச்சக்காளைக்கு ரொம்பப் பெரிய பெருமை உண்டு. அதைப் பார்க்கும் அவரின் வயது ஒத்த நிறைய பேருக்கு மச்சக்காளையின் மேல் பொறாமை வரும். அப்படி ஒரு அடர்த்தியான தலைமுடி அவருக்கு. இந்த ‘கீமோதெரபி’க்குப் பிறகு நிலைமை வேறு. கொத்து கொத்தாக முடி அப்படி அப்படியே அவரின் கையோடு வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து அரண்டுபோய்


புற்றுநோய்

 

  (இதற்கு முந்தைய ‘பாம்ப்ரெட்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) மச்சக்காளை கட்டுப்படுத்த முடியாமல் சில நிமிடங்களுக்குள் வாய்க்குள் இருந்தும். மூக்கின் வழியாகவும் ரத்தம் வந்துகொண்டே இருந்ததில், பயத்தில் அதைத்தொடர்ந்து சாப்பிட்டதெல்லாம் பேதியாகிவிட்டது. உடனே அவர் டாக்டரிடம் செல்வதற்குள் அவர் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு கிளம்பிச்சென்று விட்டார். எரிச்சலோடு திரும்பி வந்துவிட்டார் மச்சக்காளை. டாக்டர் ஜெயராமன் மறுபடியும் சாயந்திரம் ஐந்து மணிக்குத்தான் ‘கிளினிக்’ வருவார். தலையைத் தொங்கப் போட்டவாறு வீட்டில் காத்துக்கொண்டிருந்தார். கோழிக் குழம்பு சாப்பிட்ட


பாம்ப்ரெட்

 

  (இதற்கு முந்தைய ‘அதிர்ச்சி வைத்தியம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) கோமதி கணவர் மச்சக்காளையின் தீவிர பக்தை. தாய்க்குப் பின் தாரம் என்கின்ற பாணியில் சொன்னால் மணாளனுக்குப் பின்தான் மகன்! ஆனால் இதெல்லாம் சம்சுதீன் கடைக்குப்போய் இனிமேல் பீடி வாங்கிக்கொண்டு வரமாட்டேன் என்று கதிரேசன் சொல்வதற்கு முன்னால் வரைதான்! அதற்குப் பிறகு கோமதியின் கதையிலும் திருப்பம். இந்தக் கோமதி என்று இல்லை; எல்லா கோமதிகளுக்குமே புருஷன்மார்களிடம் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பயம் மன


அதிர்ச்சி வைத்தியம்

 

  (இதற்கு முந்தைய ‘பீடி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) மச்சக்காளையும் கதிரேசனும் சில நொடிகளுக்கு ஒருத்தரை ஒருத்தர் விசித்திரமான மெளனத்தோடு நோக்கிக் கொண்டிருந்தார்கள். மச்சக்காளை மட்டும் எதோ மாதிரியான சந்தேகத்தோடு மகனைப் பார்த்தார். பின் “உன்னை வாங்கிட்டு வரச்சொல்லாம வேற யாரை வாங்கச் சொல்ற?” என்று கனத்த குரலில் கேட்டார். கதிரேசன் அவரையே பார்த்தானே தவிர பதில் எதுவும் சொல்லவில்லை. கோபத்தில் அவனுக்கு மூச்சு வாங்கியது. “பதில் சொல்லாம சும்மா நின்னா என்னாலே