கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கண்ணன்

395 கதைகள் கிடைத்துள்ளன.

ருத்ர காளி

 

  சிதம்பரநாதனுக்கு வயது அறுபத்தி ஒன்பது. இவ்வளவு வயதாகியும் அவரிடம் மாறாத ஒரே வீக்னெஸ் ‘பெண்கள்’. பதினான்கு வயதில் பெண்களைப் பற்றிய புரிதலுக்கான ஏக்கமும் ஆசையும் அரும்ப ஆரம்பித்த விருப்பங்கள் அவரிடம் இன்றுவரை அடங்கவே இல்லை. அப்படியே வளர்ந்துவிட்டார். பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சென்னையின் ஏஜி ஆபீஸில் ஒரு நல்ல வேலையில் அமர்ந்துவிட்டார். அதிலேயே அடுத்தடுத்து பரிட்சைகள் எழுதி சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் வரை உயர்ந்து பின்பு அதிலேயே ஓய்வும் பெற்றார். சிதம்பரநாதன் நல்ல குடும்பத்தைச்


மயில் வாஹணம்

 

  வாழ்வில் மிகச் சிலருக்குத்தான் அவர்கள் விரும்பியபடி, விரும்பியவுடன் இறப்பு என்பது எதிர் பார்த்தபடி நல்லவிதமாக அமையும். எதிர்பார்த்தபடி அவ்விதம் நம்முடைய இறப்பு சுமுகமாக அமைவது இறைவனின் சித்தம். அவ்விதம் இறப்பவர்கள் தன் வாழ்நாளில் ஏற்கனவே தொடர்ந்து பல நல்ல காரியங்களைச் செய்தவர்களாக இருப்பர். இந்தியாவில் அப்படி ஏகப்பட்ட மஹான்கள் மக்களுக்கு சேவைசெய்து மக்களுக்காக மட்டுமே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களின் இறப்பு முன்கூட்டியே தெரிந்துவிடும். அவ்விதம் நம்மிடையே வாழ்ந்து இறைவனை விரும்பியபடி போய்ச் சேர்ந்தது திருமுருக


மழையில் நனையும் பூனைகள்

 

  “இன்னும் ரெண்டு வாரத்திற்குள்ளே பணத்தை எண்ணிக் கீழே வைக்கலே, நீ, உன்னோட அம்மா அப்பா எல்லாரும் கம்பி எண்ண வேண்டியதுதான்” நான்கு பேர் சேர்ந்தார்போல் சத்தம் போட்டவுடன், மாதவி கலங்கிப்போனாள். நான்கே குடும்பங்கள் மட்டும் வசிக்கும் விதமாய் கட்டப்பட்டிருந்த ப்ளாட் என்றாலும், மற்ற மூன்று குடும்பங்களும் வந்து எட்டிப் பார்த்தபோது, துக்கமும், அவமானமும், கோபமும், இயலாமையும் சேர்ந்து அழுத்தியது. இருபத்தைந்து வயதுப் பெண்ணை நான்கு பேர் கதவைத் தட்டிக் கூப்பிட்டு இரண்டு வாரம் தவணை கொடுப்பதாய்


கொரோனா

 

  “டாக்டர், நான் ‘சையின்ஸ் டுடே’ எடிட்டர் தியாகு பேசறேன்… நாங்க கொரானா பத்தி விஞ்ஞான பூர்வமாக ஒரு கட்டுரை உங்களிடம் கேட்டிருந்தோம். ஆனால் நீங்கள் தத்துவார்த்தமாக ஒரு கட்டுரை எழுதி அனுப்பி விட்டீர்கள்… ஏன் டாக்டர்?” “இதுதான் இப்போதைய உண்மை தியாகு. உலகமே கொரானா பற்றி செய்வதறியாமல் திகைத்துப்போய் கிடக்கிறது. அதனால்தான் உண்மையை எழுதி அனுப்பினேன்… முடிந்தால் பப்ளிஷ் பண்ணுங்க, இல்லைன்னா வேண்டாம்…” டாக்டர் ஜெயராமன் மொபைலைத் துண்டித்தார். எடிட்டர் தியாகு மறுபடியும் ஒருமுறை டாக்டர்


மச்சக்காளையின் மரணம்

 

  (இதற்கு முந்தைய ‘இறுதி உரை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) மச்சக்காளை சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார். எங்கே ரயில் ஏறி என்ன செய்ய, கர்மம் தொலையாது காசிக்குப் போனாலும் என்கிற மாதிரி சென்னை சென்றாலும் புற்றுநோய் அவரைவிட்டு விலகுவேனா என்றது. விரட்டப்பட விரட்டப்பட மற்றொரு இடத்தில் உருவாகும் கரையான் புற்று போல், சுவாசப் பைகளில் மையம் கொண்டிருந்த அவருடைய புற்று கணையம், கல்லீரல் என அதன் ஆதிக்கத்தை விரிவு படுத்தியது. சென்னைக்கு கிளம்பிப்