கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கண்ணன்

395 கதைகள் கிடைத்துள்ளன.

மோஹன்தாஸ் காந்தி

 

  (இதற்கு முந்தைய ‘வெள்ளைச் சிட்டை வியாபரம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). சந்திரன் தன்னை எப்போதாவது எதிர்பாராமல் தெருவில் நேருக்கு நேர் பார்த்துவிட்டால் மட்டும் சிவராமன் சின்னதாக அளவுடன் ஒரு சிரிப்பு சிரித்து வைப்பார். அதைச் சிரிப்பிலும் சேர்த்துக் கொள்ளலாம்; சிரிக்காததிலும் சேர்த்துக் கொள்ளலாம்! சந்திரனை தெருவில் பார்க்கிற போதெல்லாம் சிவராமனின் மனக்கண் அவரின் உள் கால்சட்டையின் பாக்கெட்களில் கவனமாக இருக்கும்! ஆரம்பத்தில் சந்திரனுக்கு சிவராமனின் குடும்பம் கொஞ்சம்கூட ஒட்டி உறவாடாமல் தள்ளியே


‘வெள்ளைச் சிட்டை’ வியாபாரம்

 

  (இதற்கு முந்தைய ‘ஜவஹர் எனும் நேரு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). சிவராமன் சிவராமன் என்ற பெயரில் திம்மராஜபுரத்தின் பட்டுத் தெருவில் கடலை எண்ணெய் வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருத்தர் இருந்தார். அவருக்கு ‘ரோட்ரி’யில் கடலை எண்ணெய் ஆட்டி விற்பதுதான் தொழில். எண்ணெய் ஆட்டுகிற ரோட்ரி கூட அவருக்குச் சொந்தமானதில்லை. தாயாதிக்காரர் ஒருத்தருக்குச் சொந்தமான ரோட்ரியில்தான் சிவராமன் வாடகை கொடுத்து ஆட்டிக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் ஒரு பேபி எக்ஸ்பெல்லர் சொந்தமாக வாங்கி மாட்டியே


ஜவஹர் எனும் நேரு

 

  (இதற்கு முந்தைய ‘பெயர்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). ‘ஐயோ அம்மா” என்று ஜவஹர் போடுகிற கூச்சலும் காதைப் பிளக்கும். அந்த நிமிடம் உயிரே போகப்போகிற மாதிரிதான் இருக்கும் அவன் போடுகிற கூச்சல். ஆனால் ஜவஹரின் எல்லா கூச்சலும் அந்த ஒரு நாளைக்குத்தான். மறுநாள் அவனைப் பார்த்தால் அத்தனை அடி உதை வாங்கிய அடையாளம் அவனுடைய முகத்தில் கொஞ்சம்கூடத் தெரியாது. மனசு நிறைந்த ஒரு சிரிப்புதான் அவன் முகத்தில் பொங்கி வடிந்து கொண்டிருக்கும்.


பெயர்கள்

 

  நம் அனைவருடைய பெயர்களும் நம்மைக் கேட்காமலே நம் பெற்றோர்களால் நமக்கு வைக்கப்பட்டு விடுகின்றன. நம்மில் சிலருக்கு நம்முடைய பெயரையே பிடிப்பதில்லை. பின் என்ன? குஞ்சிதபாதம்; பாவாடைசாமி என்று பெயர்கள் வைத்தால் நமக்கு எப்படிப் பிடிக்கும் ? நம்மைக் கூப்பிடுபவர்கள் வேண்டுமென்றே அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ‘எலே குஞ்சு’ ‘எலே பாவாடை’ என்று கூப்பிட்டால் நாம் என்ன செய்ய முடியும்? நான் படித்து வளர்ந்து வயசுக்கு வந்தபோது இருந்த ஊர் திம்மராஜபுரம். திம்மராஜபுரத்தில் பிறக்கும் குழைந்தைகளுக்கு இந்திய


உழைப்பு

 

  “இப்பக்கூட ஒரு பிரச்னையும் இல்லை… அவளை மறந்துட்டு வரச்சொல்லுங்க. நான் பழசையெல்லாம் மறந்துட்டு சந்தோஷமா அவரோட குடித்தனம் நடத்துறேன். ஆனால் நானும் அவளும் சேர்ந்து வாழறதோ; இல்லை அவங்க உறவை நான் ஒத்துக்கொண்டு போறதோ கண்டிப்பாக நடக்காத விஷயம் மிஸ்டர் விஜய்.” “நீங்க ஒத்துப் போகாட்டா, உங்களை அவர் விவாகரத்து பண்ணவும் தயாராக இருக்கார். அத நீங்க நெனச்சுப் பார்த்தீங்களா மேடம்?” மாலினி இகழ்ச்சியாய் சிரித்தாள். “என்னை பயமுறுத்திப் பார்க்கிறீங்களா விஜய்? நான் அவரைப் பிரியறேன்னு