கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கண்ணன்

395 கதைகள் கிடைத்துள்ளன.

போன ஜென்மத்து மனைவி

 

  ******************* இது நம்முடைய சிறுகதைகள்.காமில் எனது இருநூறாவது சிறுகதை. இதுகாறும் என்னை ஆதரித்து என் கதைகளை நம் தளத்தில் ஏற்றிவரும் சிறுகதைகள்.காம் ஆசிரியர் குழுமத்திற்கு என் நன்றிகள். எஸ்.கண்ணன். ******************* சேர்ந்தாற்போல் மூன்று நாட்கள் விடுமுறை வந்தது. அப்போது என்னுடன் சென்னையில் ஐடி கம்பெனியில் பணி புரியும் சிவா, தன் குல தெய்வமான வைத்தீஸ்வரன்கோவில் போகப் போவதாக என்னிடம் சொன்னான். நானும் கூட வருவதாகச் சொன்னேன். இருவரும் கிளம்பினோம். நானும் சிவாவும் கடந்த மூன்று வருடங்களாக


பாப்பம்மா

 

  அப்போது எனக்கு பதிமூன்று வயது. என்னுடைய தாத்தா கோடைக்கானலில் ஒரு பெரிய பங்களா வைத்திருந்தார். மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் பங்களாவுக்கு அடுத்தது எங்களுடையது. எல்லா விடுமுறை தினங்களிலும் நாங்கள் அலுக்காமல் கோடைக்கானல் கிளம்பிவிடுவோம். அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமாக கரைந்துவிடும். கோடைக்கானல் போகிற சமயங்களில் எங்க வீட்டு சமையல்காரர் சுப்பராமனும், அப்போது வீட்டில் எந்தப்பெண் வேலை செய்கிறாளோ அந்தப் பெண்ணையும் எங்களுடைய உதவிக்காக அழைத்துச் செல்வோம். அந்தச் சமயத்தில் பாப்பம்மா எங்கள் வீட்டில்


பிச்சைக்காரியின் சாபம்

 

  பகல் இரண்டுமணி. திருநெல்வேலி ஜங்க்ஷன் பஸ் நிலையம். வெய்யில் உக்கிரமாகத் தகித்தது. அந்த வெய்யிலிலும், சிவந்த நிறத்தில் முப்பத்திஎட்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பரட்டைத் தலையுடன், அழுக்கான உடைகளில் கைநீட்டி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். கிறுக்கச்சி மாதிரி நாக்கை வெளியில் நீட்டி அடிக்கடி பல்லை இளித்தாள். அவளைப் பார்த்து பலர் முகத்தைச் சுளித்தாலும், சில இளவட்டங்கள் பிச்சைக்காரியின் மதர்ப்பான உடம்பில் லயித்தனர். ஆனால் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு அவள் எப்படி அமோகமாக வாழ்ந்தாள்,


பைத்தியக்காரக் கல்யாணம்

 

  சென்னை பழவந்தாங்கல் ஸ்டேஷனை ஒட்டி ஒரு பெரிய வீடு. அதில் மனைவி மரகதம் மற்றும் மூன்று மகன்களுடன் கோதண்டராமன் வசித்து வருகிறார். முதல் இரண்டு மகன்களுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். அனைவரும் கூட்டுக் குடும்பத்தில் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். ஆனால் மூன்றாவது மகன் அனந்து என்கிற அனந்தராமனுக்கு வயது முப்பது ஆனாலும் அவனுக்குப் பெண் தேடத் தயங்கினார்கள். காரணம் அவன் ஒரு பைத்தியம். அனந்து பார்க்க ஆறு அடி உயரத்தில் திடகாத்திரமாக ஒரு குதிர்


வீட்டுப் பசி

 

  நம் எல்லோருக்குமே சில விஷயங்களில் நம்மையறியாமலேயே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அதே ஈர்ப்பு ஒரு காலகட்டத்தில் பைத்தியக்காரப் பசியாக மாறிவிடும். எந்தப் பசியும் தவறல்ல, அது அடுத்தவர்களைப் பாதிக்காத வரையில்… சிலருக்கு பக்திப் பசி; பலருக்கு பணப் பசி; பாலியல் பசி; குடிப் பசி; ரேஸ் பசி; சீட்டாட்டப் பசி; பதவிப் பசி என்று பல பசிகள். சில சந்தர்ப்பங்களில் இந்தப் பசியே நம்மைப் புசித்தும் விடும். என்னுடன் படித்த மாடசாமிக்கு சிறிய வயதிலேயே அகோர