கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கண்ணன்

395 கதைகள் கிடைத்துள்ளன.

டெய்லர் சிவன்பிள்ளை

 

  (இதற்கு முந்தைய ‘கொசுத்தொல்லை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). மொத்தம் ஐந்து கொசுவலைகள் தைக்க வேண்டும். டெய்லர் சிவன்பிள்ளை எங்களுடைய படுக்கை அறைகளை நேரில் வந்து பார்த்து அளவெடுத்து ஒரு பெரிய பேப்பரில் குறித்து எடுத்துப் போயிருந்தார். வீட்டில் நானும் என் தம்பி தங்கைகளும் அப்பா எப்போது மதுரையில் இருந்து திரும்பி வருவார் என ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தோம். கொசுவலை என்ற பெயரை கேள்விப் பட்டிருந்தோமே தவிர, அது எப்படி இருக்கும் என்பது


கொசுத்தொல்லை

 

  கொசுத்தொல்லை அறுபது வருஷத்துக்கு முன்பும் இருந்தது. இன்று இருப்பதற்கு அப்போது இருந்த கொசுத்தொல்லை ஒன்றுமே இல்லை. ஆனால் அறுபது வருடத்திற்கு முன்னால் அந்தக் கொசுக்கடியே மிகவும் கஷ்டமாக இருந்தது. பொதுவாக மத்தியான நேரங்களில் கொசுக்கடி இருக்காது. சாயந்திரம் ஆனதும் கொஞ்சம் கொஞ்சமாக கொசுக்கள் வரத்தொடங்கி விடும். ராத்திரியாகும் போது அவற்றின் எண்ணிக்கை அதிகமாகும். நிம்மதியாகத் தூங்க முடியாதபடி கை, கால், முகம் எல்லாம் கடித்துத் தொல்லை தரும். ஆனால் அறுபது வருடத்திற்கு முன்பு கொசுக் கடியையோ


சுவர்கள்

 

  சென்னை இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் எல்லாம் முடிந்து ரோஹித்தும் ஒரே மகன், இளம் மனைவி மாயாவுடன் வெளியே வந்தபோது மணி காலை பத்து. சென்னை வெயில் சுட்டெரித்தது. நங்கநல்லூருக்கு கால் டாக்ஸி புக் செய்துவிட்டு ரோஹித் அப்பாவை தொடர்புகொள்ள முயற்சி செய்தான். அப்பாவின் மொபைல் ஒலித்தபடியே இருந்ததே தவிர, அவர் அதை எடுக்கவில்லை. ‘சரி இன்னும் பதினைந்து நிமிடங்களில் வீட்டுக்குத்தானே போகப் போகிறோம்’ என்று மனதை சமாதானம் செய்துகொண்டான். நங்கநல்லூர் அபார்ட்மென்டை அடைந்து லக்கேஜ்களை


கொரோனா சோகங்கள்

 

  ராமரத்னம் மிகவும் மனமுடைந்து போனார். ஒரே மகள் சித்ராவின் சீமந்தக் கல்யாணம் நின்று போனது. பத்திரிகை அடித்து சிலருக்கு அழைப்பும் விட்டாயிற்று. இப்போது அவளின் சீமந்தக் கல்யாணத்தை நடத்துவதற்கு இனி சந்தர்ப்பமே கிடையாது என்றால் அவருக்கு எப்படி இருக்கும்? கொடுத்தது போக மிச்சம் இருந்த சீமந்தப் பத்திரிக்கைகளை வெறித்துப் பார்த்தார். இனி அவரால் என்னதான் செய்ய முடியும்? அவர் மனைவி கமலா, “நம்ம கையில எதுவுமே இல்லைங்க… எல்லாம் பகவத் சங்கல்பம்” என்றாள். இந்த வருடம்


கொரோனா விதிகள்

 

  ‘தஸ்புஸ்தான்’ நாட்டு அதிபர் ‘மஜீல்’ ஆளுயரக் கண்ணாடி முன் நின்றுகொண்டு தன்னுடைய புஷ்டியான மீசையை வாஞ்சையுடன் நீவி விட்டுக்கொண்டார். முகத்துக்கு மெலிதாக பவுடர் அடித்துக் கொண்டார். அவர் இன்று காலை பத்து மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு ‘கொரோனா’ பற்றிய விழுப்புணர்வை ஏற்படுத்தப் போகிறார். கொரோனா தொடங்கிய முதல் அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும்; பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும்தான் அவரது ஆதர்ஷ தொலைக்காட்சி புருஷர்கள். ஆனால்