கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கண்ணன்

395 கதைகள் கிடைத்துள்ளன.

மனைவியே குடும்பம்

 

  முதலிரவு அறை. கட்டிலில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் அமுதா. கதவு திறக்கப்பட சட்டென்று கண்களை துடைத்துக் கொண்டாள். அவளுடைய கணவன் பெருமாள் அருகில் வந்து அமர்ந்தான். “இன்னும் அழுதுகிட்டுதான் இருக்கியா அமுதா? என் மேல உனக்கு இன்னமும் நம்பிக்கை வரல… அப்படித்தானே?” “அப்படீல்லாம் இல்லீங்க மாமா…” பெருமாள் அவள் கண்ணீரைத் துடைத்தான். பின்பு ஆதரவாய் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். “இங்க இருக்கிற யாருக்குமே என்னைய பிடிக்கலையே மாமா… அப்புறம் எதுக்காக எல்லாரையும் எதுத்துக்கிட்டு எனக்கு தாலியை


அப்பா அப்பாதான்

 

  “அம்மா, ரொம்ப வெயிலா இருக்கு. இந்தப் பதை பதைக்கிற வெயில்ல உன்னால இப்ப பாங்க் வர முடியுமாம்மா?” எழுபது வயது அம்மாவை அக்கறையோடு கேட்டார் பரந்தாமன். “பரவாயில்லைடா… நான் வரேன். சீக்கிரமா பாங்க் வேலையை முடிச்சுட்டு ஆத்துக்கு திரும்பி வந்துடலாம்…” “மறக்காம லாக்கர் கீயை எடுத்துக்கோ.. அப்பாக்கும் உனக்கும் பாங்க் லாக்கர் ஜாயின்ட் அக்கவுண்ட்ல இருக்கு….” அம்மா எடுத்துக் கொண்டதும், ஒரு ஆட்டோ பிடித்து இருவரும் கிளம்பினர். பரந்தாமன் பேங்க் மானேஜரைப் பார்த்து அவரிடம், தன்னுடைய


தகாத உறவுகள்

 

  கிரஹப்பிரவேசம் முடிந்து சென்னை நங்கநல்லூரில் உள்ள புது வீட்டிற்கு குடியேறியதும் மல்லிகாவுக்கு அதிகமான வேலைப்பளுவால் மிகுந்த ஆயாசமாக இருந்தது. முதலில் ஒரு நல்ல வேலைக்காரியை வீட்டோடு அமைத்துக்கொள்ளத் துடித்தாள். பல பேரிடம் சொல்லி வைத்தாள். மல்லிகா ஒரு சீரியல் பைத்தியம். மாலை ஆறு மணியிலிருந்து தொடர்ந்து சீரியல்களில் லயிக்கும் மல்லிகாவுக்கு, புது வீட்டில் ஒரு வேலைக்காரி அமையும் வரை எல்லா வேலைகளையும் அவளே செய்வது கஷ்டமாக இருந்தது. நான்கு படுக்கையறைகள் கொண்ட அந்தப் பெரிய வீட்டில்


சைவம்

 

  “கல்யாணத்துக்கு அப்புறமும் வாரக் கடைசியில் வீட்டிற்கு இந்த மாதிரி அர்த்த ராத்திரில குடிச்சுட்டு வராதடா…. உருப்படறதுக்கு வழியைப்பாரு..” “இல்லப்பா கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பா எல்லாத்தையும் விட்டுடுவேன்.” “நான் உன்னை மாதிரி சின்ன வயசுல இருக்கும்போது குடிப்பது என்கிறது மிகப்பெரிய அசிங்கம்….கேவலமான விஷயம். ஆனா இப்ப எல்லாமே தலைகீழா மாறிடுத்து. போததற்கு நாம இருப்பது பெங்களூர் வேற…உன்னோட ஐடி கம்பெனியிலேயே கெட்டுகெதர், பார்ட்டின்னு காரணம் வச்சிண்டு குடிக்கிறீங்க. கேட்டா சோஷியல் ஸ்டாட்டஸ் என்ற சப்பைக்கட்டு…” “……………………” “அதத்


சாப்பாட்டுக் காதல்

 

  அனுபமாவுக்கு இருபது வயது. எம்பிஏ படித்துக் கொண்டிருக்கிறாள். பார்ப்பதற்கு முகம் மட்டும் லட்சணம். ஆனால் உடம்பு வாளிப்பாக, புஷ்டியாக இருக்கும். எப்போதும் எதையாவது தின்றுகொண்டே இருப்பாள். அவளது வாய் அசைந்து கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஆறு முறையாவது சாப்பிடுவாள். அது தவிர நொறுக்குத் தீனிகள் தனி. சுருங்கச் சொன்னால் சரியான தீனிப் பண்டாரம். “ஏண்டி அனு, இப்படி நாக்கை வளர்த்து வச்சிருக்கியே… இருபது வயசிலேயே இப்படி இருந்தியான்னா போகப் போக இன்னும்