கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கண்ணன்

395 கதைகள் கிடைத்துள்ளன.

கோணல் பார்வை

 

  (இதற்கு முந்தைய ‘சுயநலக் குணம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) சமையல்காரர் சிவக்குமார் உள்ளே போய் பாலக்காடு கிளம்புவதற்காக ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தார். சபரிநாதனுக்கு இது ஒரு புது எரிச்சல். காலையில் எழுந்ததும் இனி அவர்தான் கையில் கரண்டியைப் பிடிக்கணும். அவசரத்திற்கு எத்தனையோ நாட்கள் சபரிநாதனின் கை கரண்டி பிடித்த கைதான். ஆனால் இப்போது அதுவும் ஒரு சோதனை போல அவர் மனசை வெறுப்பேத்தியது. பாசுரம் சொல்லச் சுத்தமாக மறந்து போய்விட்டது. ‘சும்மா


சுயநலக் குணம்

 

  (இதற்கு முந்தைய ‘ஸம்ஸ்கிருதத் தனிப்பாடல்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதன் தன்னையே மிகவும் நொந்து கொண்டார். இப்படியா ஒரு கூறுகெட்ட கோட்டிக்காரியிடம் போய் உளறித் தொலைவேன் என்று தன்னையே ஏசிக்கொண்டார். இனி அவருக்கு ரொம்ப வேண்டியவர்கள் என்று யாராவது மாற்றி மாற்றி வந்து தயங்கித் தயங்கியாவது இரண்டாம் கல்யாணம் என்று நாங்கள் கேள்விப்பட்டது நிஜம்தானா என்று சபரிநாதனைக் கேட்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்வது? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை


ஸம்ஸ்க்ருதத் தனிப்பாடல்

 

  (இதற்கு முந்தைய ‘தவிப்பு’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) “ஏட்டி, வாசல்ல நின்னுட்டு என்னலா செய்யுத.?” வீட்டுக்குள் இருந்து காந்திமதியின் அம்மையின் குரல் கேட்டது. “சட்டியும் பானையும் செய்யுறேன்.. வந்து பாரு!” அடுப்புத் தீயில் எறிந்த மிளகாய் வத்தல் மாதிரி காந்திமதி சுள்ளென்று வெடித்தாள். “என்னதான் இருக்கோ அந்த வாசல்ல பொழுதுக்கும்…” திருப்பி பட்டாணி வெடி உள்ளே இருந்து! “பொழுதுக்கும் வீட்டுக்குள்ளேயே கெடந்து உசிரைவிட முடியாது என்னால” வெகுதூரம் போய்விட்ட சபரிநாதனின் காதுவரைக்கும்


தவிப்பு

 

  (இதற்கு முந்தைய என்னுடைய ‘தனிமை’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) கோபத்துடன் செருப்பை மாட்டிக்கொண்டு சபரிநாதன் தெருவில் இறங்கி நடந்தார். காந்திமதி அவளுடைய வீட்டுத் திண்ணையில் தூணை மார்போடு கட்டியபடி நின்று கொண்டிருந்தாள். கடலின் அலை வேகமாகப் பின் வாங்குவது போல, சபரிநாதனின் கோபமும் காந்திமதியைப் பார்த்ததும் கொஞ்சம் உள்வாங்கியது. டப்பா கட்டு கட்டிய வேட்டியை மெதுவாக கீழே இறக்கிவிட்டார். இது காந்திமதிக்கு சபரிநாதன் காட்டுகிற மெளன மரியாதை! இருவரின் பார்வையும் வழக்கம்போல்


பிரிவு

 

  அது சென்னையில் ஒரு ஐடி கம்பெனி. காலை மீட்டிங் முடிந்து தன்னுடைய இருக்கைக்கு வந்து லேப்டாப்பைத் திறந்தான் ஸ்ரீவத்சன். மனைவி ரோகிணியிடமிருந்து தமிழில் ஒரு நீண்ட ஈ மெயில் வந்திருந்தது. அவசரமாகப் படித்தான். அன்புள்ள ஸ்ரீவத்சன், நான் என்னுடைய பிறந்த வீட்டிற்கு வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் என்ன, ஏதுன்னு வம்பு பேச ஆரம்பிச்சுட்டா. ரொம்ப நாளைக்கு விஷயத்தைப் என்னால் பொத்தி வைக்கவும் முடியாது. மிகவும் நன்றாக யோசித்தேன். என்னால் இனி