கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கண்ணன்

395 கதைகள் கிடைத்துள்ளன.

நாச்சியப்பனின் உரை

 

  (இதற்கு முந்தைய ‘அரட்டைக் கச்சேரி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). ஒருநாள் விடுமுறையின் காரணமாக சென்னையில் இருந்து திம்மராஜபுரத்தில் என் வீட்டிற்குப் போயிருந்தேன். என் வீட்டிற்கு அடுத்த வீடுதான் நாச்சியப்பன் வீடு. ஆனால் ஒரு சின்ன சந்து மாதிரி இடையே போய் அதன் கடைசியில் அமைந்திருக்கும் அவருடைய வீடு. என் சித்திக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச தொடர்புகூட எனக்கு அவரிடம் கிடையாது. திம்மராஜபுரம் போனால் ராத்திரிகளில் என் வீட்டின் பால்கனியில் நான் படுத்துத்


அரட்டைக் கச்சேரி

 

  (இதற்கு முந்தைய ‘முட்டைக் கோழி’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). நாட்டு மருந்து நாச்சியப்பன் எதிலுமே ரொம்ப ‘அத்தாரிட்டியான ஆள்’. அடாவடியான மனுஷன். சகலவிதமான நோய்களையும் தீர்க்கிற மாதிரியான பல்வேறு நாட்டு மருந்துச் சரக்குகள் அவரிடம் கிடைக்கும் என்கிற மாதிரி எல்லா தினுசான மனிதப் பிரச்சினைகளுக்கும் அவரிடம் உடனடியாக நல்ல யோசனைகள் கிடைக்கும். எதற்கும் யாருக்கும் பயப்பட மாட்டார். கொஞ்சம் அடிதடியில் இறங்கவும் யோசிக்க மாட்டார்; அப்படி இரண்டொரு தடவைகள் அடிதடியில் இறங்கிய


முட்டைக் கோழி

 

  (இதற்கு முந்தைய ‘குண்டாஞ்சட்டி மனைவிகள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). ராஜாராமனோ திருப்பித் திருப்பி அவனுடைய கட்சியையே பேசிக் கொண்டிருந்தான். ஒரு வாரம் வரைக்கும் விஷயம் இப்படியே முடிவில்லாமலேயே போய்க் கொண்டிருந்தது. இப்படி இருக்கையில், அங்கு எர்ணாகுளத்தில் வேணுகோபால் திம்மராஜ புரத்தில்இருந்து ஒரு தகவலையும் காணோமே; விஷயம் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறதே என்கிற கவலையில் தீவிர யோசனை செய்து கொண்டிருந்தார். அவருக்கு ராஜாராமனை விட்டுவிட மனசே இல்லை. எப்படியும் அவனை அவரின்


குண்டாஞ்சட்டி மனைவிகள்

 

  (இதற்கு முந்தைய ‘கருப்பட்டிச் சிப்பம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) அடுத்த திருப்பதி உண்டியல் கோழிக்கோட்டில் வைக்கலாம் என்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்திப் பார்த்துவிட்டு, வேணுகோபால் திம்மராஜபுரம் வந்து இறங்கினார். மூன்றாவது மகளுக்கு எந்த டாக்டருக்குப் படித்த பையனைப் பார்த்து மடக்கலாம் என்பதற்கும் அவர் கருத்துக் கணிப்பை மனதிற்குள் நடத்திப் பார்த்திருந்தார். அவரின் கருத்துக் கணிப்பில் மிக அதிகமான வாக்குகள் பெற்று மிகப்பெரிய உயரத்தில் இருந்தது, என் கமலா சித்தியின் மகன்


கருப்பட்டிச் சிப்பம்

 

  (இதற்கு முந்தைய ‘கமலா சித்தி’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). ஐந்து மகள்களில் முதல் இரண்டு மகள்களுக்கு கல்யாணத்தை அடுத்தடுத்து முடித்துவிட்ட வேணுகோபால், மூன்றாவது மகளின் கல்யாண விஷயமாகத்தான் திம்மராஜபுரத்திற்கு வந்து இறங்கி இருந்தார். எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர் இல்லை என்றால் பாலக்காடு பக்கம் இல்லாத மாப்பிள்ளைகளா எங்கேயோ திருநெல்வேலியில் இருக்கும் திம்மராஜபுரம் என்ற புழுதிக்காட்டில் கிடைத்துவிடப் போகிறான்? ஆமாம் என்பதுதான் திம்மராஜபுர சமூகத்தினரின் ஒட்டு மொத்த பதில். அவர்களால் எதை மாற்றினாலும்