கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.கண்ணன்

395 கதைகள் கிடைத்துள்ளன.

சிலிர்ப்பு

 

  (இதற்கு முந்தைய ‘பெரிய டாக்டர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). ஆனால் அக்கம் பக்கத்திலுள்ள மாமிகள் எங்களை அழைத்து வைத்துக்கொண்டு வம்பு பேசுவார்கள். “ஏண்டி பசங்களா, உங்க அம்மா எங்கேடி?” என்று கேட்பார்கள். நாங்களும் அப்பாவியாக உள்குத்து புரியாமல், “அம்மா மானத்து ஆஸ்பத்திரியில் இருக்கா என்று ஆரம்பித்து அத்தையும் பாட்டியும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த கதைகளை எல்லாம் சீரியசாகச் சொல்லுவோம். அவர்களும் ரொம்ப அனுதாபத்துடன் கேட்டுக்கொண்டு “பாவம் குழந்தைகளுக்கு அம்மா செத்துப்போனது கூடத்


பெரிய டாக்டர்

 

  (இதற்கு முந்தைய ‘தேன்நிலா’ கடையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). எனக்கு அப்போது வயது பதினைந்தோ அல்லது பதினாறோ… ஒருநாள் நான் என்னுடைய அப்பா வழி பாட்டியைப் பார்க்க மீனம்பாக்கத்தில் இருக்கும் அவளுடைய வீட்டிற்குப் போயிருந்தேன். அப்போது சமையலறைக்குள் வந்து காபி போடுவதற்காக வைத்திருந்த பாலை திருட்டுத்தனமாக குடித்துவிட்டுப் போன ஒரு பூனையைப் பற்றி என்னிடம் அதை திட்டிக் கொண்டிருந்த பாட்டி திடீரென, “சிவாவிற்கு பூனைகளைப் பார்த்தாலே பிடிக்காது… அதுகளை கொஞ்சம் பக்கத்தில் பார்த்தாலே


தேன்நிலா

 

  என்னுடைய பெயர் சம்யுக்தா. வயது இருபத்திமூன்று. சொந்த ஊர் திம்மராஜபுரம். பாளையங்கோட்டையில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். வேலைக்கு செல்லும் ஆர்வம் இல்லை. என் பெற்றோருக்கு நான் இரண்டாவது கடைசிப் பெண் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டேன். நன்றாகச் சாப்பிடுவேன், தூங்குவேன், டிவி பார்ப்பேன். நல்ல தமிழ்ப் படங்கள் பார்ப்பேன். அக்காவுக்கு திருமணமாகிவிட்டது. அவளுடன்தான் சென்னையின் பாலவாக்கத்தில் இப்போது வாசம். பறவைகள், செடி கொடிகள், வளர்ப்புப் பிராணிகளிடம் அதிக அன்பு செலுத்துவேன். உடம்பைக் குறைக்க தினமும் வீட்டில் ட்ரட்மில்


தாதாக்கள்

 

  கோபாலன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் நினைத்ததற்கு நேர்மாறாக நடந்தது. தன்னைக் கண்டு, தன் வரவைக்கண்டு அச்சப்படும் வேதவல்லி, இன்று இத்தனை சாமர்த்தியமாய் காரியம் நிறைவேற்றி விட்டாளே என்று நினைத்தபோது அவன் கோபம் இரு மடங்காய் பெருகியது. கோபாலன் ஒரு ஐடி இஞ்சினியர். தனக்கு என்ன நேருமோ, தன்னைப் போலீஸார் கைது செய்வார்களோ, யாரைப் பிடித்து எப்படி இந்தப் பிரச்னையில் இருந்து வெளியே வருவது என்று யோசனையாய் எஸ்ஐக்கு எதிர்புறம் போடப்பட்டிருந்த நீள பெஞ்சில் உட்கார்ந்து


பகவத் சங்கல்பம்

 

  நவீன் அன்று சென்னையின் பாலவாக்கத்திலிருந்து ஓரகடம் போக வேண்டும். அங்கு பகல் பன்னிரண்டு மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங். சொந்தக் கார் இருந்தாலும் அதை சென்னையின் போக்குவரத்து நெரிசலில் ஓட்டிக்கொண்டு போய்வர அவனுக்கு விருப்பமில்லை. சொத சொதவென விட்டுவிட்டு மழை வேறு. அதனால் காலை ஒன்பது மணிக்கு ஒரு ஊபர் கார் புக் செய்துவிட்டு காத்திருந்தான். ஒன்பதேகால் மணிக்கு அவன் வீட்டின்முன் ஒரு வெள்ளைநிற ஏஸி மாருதி டிசையர் கார் வந்து நின்றது. நவீன் காரில்