கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.அகஸ்தியர்

9 கதைகள் கிடைத்துள்ளன.

பெற்ற தாயும் பிறந்த நாடும்

 

 ‘சீவன் போகமுன்னம் பிள்ளையள் வந்து தாயின்ர கண்ணில முழிக்குங்களெண்டு நான் நம்பேல’ – இவள் பாவி என்ன, எடுத்தாப்போல ‘சகுனி’ போலச் சொல்றாள் ‘அது பாவம் மனிசி, பெத்ததுகளைக் கடைசியாப் பாத்திட்டுக் கண்மூடவெண்டு கொட்டுக்க சீவனை வைச்சுக் கொண்டு படுற பாட்டைக் கண்குடுத்துப் பார்க்க கறுமமாக் கிடக்கு’ கள்ளி, மனிசியில் உருகுமாப் போல சும்மா சாட்டுக்கு மாய வித்தை காட்டுறாள். ‘அது சரி, தந்தி எப்ப குடுத்ததாக்கும்?’ ‘வேளையோட குடுத்திருப்பினம் தானே?’ ‘அக்காள்….. வாய் புளிக்குது. உந்த


தனி ஒருவனுக்கு…

 

 “..தோலிருக்கச் சுளை வாங்கிகளின் தத் துவச்சிருஸ்டியான “சுரண்டல் வித்தை” என்னும் நித்திய தரித்திர நாராயண னின் ஆசீர்வாதம், தின்ற வயிறு பாதி தின்னாத வயிறு மீதியாக “அநித்தியம்” என்ற இந்தப் பூலோக வாழ்க் கையில் அந்த இரண்டு ஜீவன்களும் உழன்று கிடந்தன.” – எஸ். அகஸ்தியர் “களவெடுப்பியோ ?” “இல்லை” “பொய் சொல்லுவியோ?” “சொல்லேல” “அடுத்தவீடு போவியோ?” “போகேல்ல” “கூடுவாரத்துகளோட திரிவியோ?” “இல்ல, திரியல்ல” செப்பமான சம்பல் அடி. பொடியன் மிதிபட்ட நாக்கிளிப் புழவாட்டம் சுருண்டு கீழே


கடல் அலைகள் குமுறுகின்றன!

 

 செக்கல் பொழுது. ஊருக்கு தெற்கேயுள்ள கடலோரச் சுடுகாடும் உறைந்துவிட்டது, கடல் அம்மாறு போட்டுக்கொண்டிருந்தது. கிராமத்து வயல் எல்லைகளில் நாய்கள் கடல் உறுமிபோல் ஊளையிட்டுக் கேட்டது. மேகத்திரைகள் கொண்டல் பக்க வாட்டாகக் கவிந்து மேற்கு வானம் ஒரே கணவாய் மை நிறமடித்துத் தெரிகிறது. வானத்தில் இடி முழக்கம் மின்னி அதிர்கிறது. செவ்வானம் நிறமழிந்து எங்கும் கருமை கூட்டும் அந்தகாரம். கொண்டலடியோடு பெய்த மழையும் வீசிய சுழற்காற்றும் இன்னும் ஓயவில்லை. ‘த்சூ, என்ன குளிரப்பா?’ என்று மண்டா ஏறிய திருக்கைபோல்


எரிசரம்

 

 திருமணமாகி ஒரு நாள் கழிந்துவிட்டது. மலர்மணிக்கு இப்பவும் அந்த அந்த நினைவு நெஞ்சை அறுத்து வருகிறது. அதை நினைக்கிறபோது அவள் தேகம் குலுங்கித் தவளைச் சதையாட்டம் நுளுந்திற்று. நெஞ்சில் மின்னல் அடிக்கிற ஒரு திடுக்காட்டம். அதை எப்படிப் புரட்டினாலும் மனசு அதுக்கு ஒப்புதில்லை. முகத்தில் தடவிய பூசல் மா பூஞ்சாணம் பிடித்த விறுத்தத்தில் தெரிகிறது. கண்ணாடி எதிரே நின்று தன்னைப் பார்த்ததும் தனக்கே முகம் சுழித்துக் கொண்டாள். அப்படிச் சுழித்ததை நினைக்க, சடலத்தை நாணம் எகிறிக் குருகிற்று.


தவிப்பு

 

 ‘…. இன்றைய மேடுபள்ள வாழ்வில் ஏழைகள் வாழ்க்கையின் எதிரிகளுடன் மாத்திரமல்ல, தங்கள் உடல்களில் தோன்றுகிற இயற்கை உணர்ச்சிகளுடனும் போராடவேண்டியிருக்கிறது. அதுவும் ஏழையின் தலையில் ஒரு தியாக வேள்வியாகிவிட்டது’ ‘விடியமுதல் வெளியே போன துரையப்பன், மதியமாகும்போது கழுத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு வந்து திண்ணையில் சரிந்தான். ‘இண்டைக்கும் அடிப்பிலே உலை ஏறாதுபோல கிடக்கே’ உள்ளம் வெதும்ப, சின்னத்தங்கம் அவனைப் பார்த்தான். அவன் இவளையும், இவள் அவனையும் பார்த்துக்கொண்டிருக்க, குழந்தைகள் ‘வழக்கம் போலவே’ ஒப்பாரிவைக்கத் தொடங்கிவிட்டன: ‘ஆச்சி பசிக்’குதணை. சோறு தாணை’ சின்னத்தங்கம்