கதையாசிரியர் தொகுப்பு: எழில் வரதன்

34 கதைகள் கிடைத்துள்ளன.

பாதாள நந்தி

 

  சிறுமிக்கும் குமரிக்குமான வித்தியாசங்களை அவளிடமிருந்து மெல்லச் செதுக்கிக் குறைத்துக் கொண்டிருந்தது காலம். காலத்தின் இரவில் கனவு கண்டு புரண்டாள் புஷ்பா. கனவில் படுபாதாளமாய் ஆழ்ந்திருந்தது ஒரு கிணறு. அதன் நீர் சாந்தின் பிசுபிசுப்பில் தளும்பிக் கிடக்க, அதில் மெல்ல நீந்திக் கிடந்தன இரு மீன்கள். குளித்துத் துவட்டும்போது வெற்றுடம்பின் எடுப்பை வியக்காது எடுப்பின் மச்சத்தை ஒருத்தி தொட்டு வியப்பதுபோலவே அவள் மின்னும் மீன் குறித்து வியக்காமல் நீரின் நிறம் குறித்து வியந்தாள். வியப்பு அவளின் உதட்டையும்


கிஷான்னு ஒரு காதல் கிறுக்கனும், அருணானு ஒரு காதல் கிறுக்கியும்

 

  கல்யாணத்திற்குப் பின் எனக்குப் பிடித்தமான, நினைவில் நீங்காமல் நிற்கும் இடங்களாக இருப்பது மூன்று. ஒன்று, என் கணவர் உடம்பெல்லாம் நெகுநெகுவென எண்ணை பூசிக்கொண்டு, உச்சி வெயிலில் வழுக்கி விழுந்த இடமான மொட்டை மாடி. இரண்டாவது, அதே கணவர் வலது கை கட்டை விரலை கத்தியில் அறுத்துக்கொண்டு அடுப்பங்கரை ஏகலைவனாக ரத்தம் சொட்டச் சொட்ட நின்ற சமையற்கட்டு. மூன்றாவது, கல்யாண சரிகைப் பட்டு வேட்டி முழுவதும் ரங்கோலிப் பவுடர் பூசிக்கொண்டு முகமெல்லாம் சாயத்தோடு அவர் நின்ற எங்கள்


உருகும் கிரிம், ஒழுகும் கனவு

 

  எட்டாவது மட்டுமே படித்த ஏழைப்பட்ட கிராமத்து கறுத்த இளைஞன் ஒருவன் எப்படியாவது நகரும் நகர்சார்ந்து இடத்திற்கு வந்து, ஒரு கோடிஸ்வரன் ஆகவே முடியாது என்று யாராவது நிச்சயமாய் சொன்னார்களானால் இப்பொழுதே ஏலாந்தூர் பஸ்டாப்பில் ஒரு கனவோடு பஸ் ஏறும் அந்தப் பையனை நிறுத்திவிட வேண்டியதுதான். நிச்சயமாய் சொல்வதென்றால், இப்பொழுது இருக்கும் கோடீஸ்வரர்களில் யாருமே ஏழையாகப் பிறக்கவில்லை, அவர்கள் பிறவிப் பணக்காரர்கள்தான், அவர்கள் கிராமத்தல் இருந்து வந்தவர்கள் கிடையாது, பூர்வீகமே நகரம்தான், எட்டாவது படித்தவர்கள் இல்லை எல்லோருமே


யாரும் பார்க்காத பொழுது தெரியும் அவன்

 

  ஒருவனுக்குக் கோடி காசு இருக்கலாம்; கொஞ்சும் குழந்தை இருக்கலாம்; பிடித்தமான மனைவியோ, காதலியோ இருக்கலாம்; வாழ்க்கையில் விரும்பியது கிடைக்கலாம். ஆனால், உறக்கமற்ற இரவுக்காரனுக்கு நிம்மதி இருக்காது. தலையில் புண் வந்த மிருகம் போல அவதிப்பட வேண்டியதுதான். படுத்த பத்தாம் விநாடி குறட்டை ஒலியால் வீட்டைப் பெயர்க்கும் இவன், இன்றுதான் உறக்கமற்றுப் புரண்டான். அடிக்கடி பீரோவைத் திறந்து, அந்த பத்தாயிரம் ரூபாய் இருக்கிறதா என்று பார்த்தான். மீண்டும் முள் படுக்கையில் படுத்துக்கொண்டான். ‘‘தூங்காம அடிக்கடி எங்கே எழுந்து