கதையாசிரியர் தொகுப்பு: எழில் வரதன்

34 கதைகள் கிடைத்துள்ளன.

கழுதை சொப்பனத்தில் தபேலா வாசித்த கதை

 

  இசை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் ஒரு மனநல மருத்துவரை பார்க்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. நீங்கள் என்னை வித்தியாசமாய் பார்க்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லாதபடி ஆண்டவன் எனக்கு காதுகளை காதுகள் போலவும், கண்ணை கண் போலவும், ரத்தத்தை ரத்தம் போல சிவப்பாக இருக்கும்படியும் படைத்தான். என்றாலும், நான் ஒரு மருத்துவரை பார்க்க வேண்டியது தவிர்க்க முடியாத நிர்பந்தம் ஆகிவிட்டது. சாதாரண மனிதர்கள் போல தோற்றத்திலும், உள்ளுக்குள் நிறைய ஓட்டை உடைசலுடனும்


ஓடும் செம்பொன்னும்

 

  படுத்து புரளும் போது உடல்வலி அதிகமாக தெரிந்தது. கால் கெண்டைச் சதைகள், குதிகால்கள் நெருக்கிப் பிடித்தாற்ப்போல் வலித்தது. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் கடை மூடிவிட்டாலும் மறுநாளுக்காக மாவு அரைத்து காய் நறுக்கிவைத்து தயார் செய்ய வேண்டியிருக்கிறது. டேபிள், சேர்களை துடைத்து ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. ஓட்டல் கடை நடத்துவது மல்யுத்தம் செய்வதைவிட அதிக வலிதரும் விசயமாக இருந்தது அவனுக்கு. அவன் பரவாயில்லை. அவன் மனைவி இன்னும் பாத்திரங்களை வரட், வரட் என்று தேய்த்துக் கொண்டிருக்கிறாள். விரல்


புன்னகையால் நிரப்பப்படும் புரியாத வெற்றிடங்கள்

 

  என் அப்பா கொஞ்சம் சிக்கலானவர், சில சமயம் அதிசயமாய் தோற்றமளிப்பார். பல சமயம் கோமாளிபோல் தோற்றமளிப்பார், சில சமயம் பேக்குபோல் பேசுவார். பல சமயம் நம்மை பேக்குகளாக்கிவிடுவார். வெளிப்புறத் தோற்றம் சகிக்கும்படி இருக்காது. அவர் வார்த்தைகளின் அர்த்தங்கள் புரியும்படியும் இருக்காது ஏன் என்று துருவிக் கேட்டால். அந்த வார்த்தை அர்த்தத்தின் சொரூபங்கள் தாங்கும்படியும் இருக்காது, அவர் பேச்சு புதிரானது சில வேளை புரியும், பலவேளை புரியாது, நமக்கு புரியவில்லை என்பதற்காக எப்படியாவது புரிய வைத்துவிட வேண்டும்


ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு

 

  “அப்பா நானு…” என்ற குழந்தைக்கு முத்தம் தந்துவிட்டு “நான் ரொம்ப தூரம் போறேன்… இங்கயே இருடா” என்று சொல்லி செருப்பை மாட்டிக்கொண்டேன். குழந்தையின் பார்வையில் தங்கிய விரோதம் கலந்த விரக்தியை கவனித்தேன். இன்னொரு “அப்பா நானு…” என்றால் அறை விழும் என்பது அதற்கு நன்றாகத் தெரியும். ரெண்டரை வயதில்லையா? எனக்கு பாவமாய்போய் என் கால்கோடி பெறுமானமுள்ள முத்தமொன்றை வாரி வழங்கி, பக்கத்தில் நின்றிருந்த மனைவியை சினிமாவில் வருகிற புருசன் போல் அர்த்த புஷ்டியுடன் பார்த்தேன். சினிமா


காருண்யம் கட்டாய கடாட்சம்

 

  பாரதக் கதை படித்தவர்களுக்கு கர்ணன் என்றொரு மகா புருசனை தெரியாமல் இருக்காது, கர்ணனின் உறவுக்காரர்களை அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை, ஆனால் கர்ணனின் வாரிசுகளில் ஒருத்தியை எனக்குத் தெரியும் என்று நான் சொன்னால். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும், அது காலத்தின் கட்டாயம், கொக்கரக்கோ கொக்கரக்கோ எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆக இன்னும் ஓரிரு முத்தங்கள் மன்னிக்கவும், ஓரிரு நாட்கள் பாக்கி இருக்கின்றன இந்த நாளில் என் மனைவியைப் பற்றி கூறுவது சிலாக்கியமானதாக இருக்கும். கர்ணனின்