கதையாசிரியர் தொகுப்பு: எழில் வரதன்

34 கதைகள் கிடைத்துள்ளன.

வயிறுள்ளவன் நாய்களுக்கஞ்சேல்

 

  மழை நீரோடு கலந்து சாக்கடையில் இருந்து வெளியேறிய கருந்திரவம் ரோட்டுப் பள்ளத்தில் தேங்கி, கிழக்கிருந்து மேற்கு கருவாடு ஏற்றிச் செல்லும் லாரியினால் உயிர்ப்பிக்கப்பட்டு, சாரலாய் அவன் மேல் அடித்தது. குண்டும் குழியுமான ஆரோக்கிய தேசிய நெடுஞ்சாலையில் நீள்போக்கில் பயணப்படும் சாதாரண பாதசாரிகளுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் சாதாரன அதோ கதிதான் அவனுக்கு ஏற்பட்டது. இது இரவு நேரம். நல்ல நேரங்களிலேயே காணாமல் போகும் அரசு மின்சாரம் ராகுகால எமகண்டங்களில் இயற்கை அல்லது செயற்கை மரணங்களுக்கு தப்பிவிட முடியாது.


வனதேவதை

 

  கையில் எடுக்துக் கொடுக்கச் சொல்லி மகள் அடம் பிடிக்கும் போதெல்லாம் மனைவி பயப்பட்டு கூவினாள், என் மகள் கையில் பிடித்துக்கொடு என்று கேட்டது ஒரு எலிக்குஞ்சை. காண்டாமிருகத்தையல்ல, மிஞ்சியிருந்தால் அந்த எலி ஒரு அங்குலம் இருக்கும், கரப்பான் பூச்சியைக் கண்டால்கூட காட்டுப் புலியை பார்த்ததுபோல் பயப்பட அவளால்தான் முடியும், “தொடாத,,, தொடாத,,, கடிக்கும, சனியனை கீழே விடு,,,” என்று கத்தினாள், என் மனைவியே. அது உயிர், உன்னைப் போல் என்னைப் போல் அதுவும் ஒரு உயிர்,


நீரடிசொர்க்கம்

 

  ஒரு நிமிச நேரம் எனக்காக ஒதுக்கமாட்டிங்களா? நான் என்ன சொல்லறேன்னு கேட்டுட்டுதான் போங்களேன். அப்படி என்ன உங்களுக்கு நஷ்டம். நான் சொல்றத கேக்க போறதில. ஒரே நிமிசம். ஏங்க நமக்கு ஆண்டவன் ஒரே வாயும் ரெண்டு காதும் ஏன் படைச்சான்னு உங்களுக்குத்தான் நல்லா தெரியுமே… தெரியாதா? சொல்லறேன். அடுத்தவங்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. மனசு கனத்துப்போய் மனுசங்க பித்துபிடிச்சி அலையறாங்க. பிரச்சனை பாரம் தாங்க முடியாம இருக்காங்க. அந்த பாரத்தை மனசுக்குள்ள வச்சி புழுங்கப் புழுங்க


சலங்கை அதிரும் ஒன்பதாம் திசை

 

  காலையில் எழுந்தவுடன் எவர்முகத்திலும் விழிக்கும் முன் கடிகாரத்தை பார்ப்பது என் வழக்கம். சிலர் கைய சுடச்சுட தேய்த்து ரேகை பார்ப்பார்கள். சிலர் எழுந்ததும் கேடு கெட்ட முகத்தில் விழித்தால் அன்றைக்கு பூராவும் நல்லதே நடக்காது என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். அது மூட நம்பிக்கை என்பது எனக்கும் தெரியும். ஆனால் நான் கடிகாரத்தை பார்ப்பது இன்னும் எத்தனை நேரம் நாம் தூங்கலாம் என்பதை பார்த்துவிட்டு ஒரு அரை மணி நேரம் நிம்மதியாக தூங்கலாமே அதற்காகத்தான். காலையில் எழுந்ததும் கடிகாரத்தை


கடிகாரம் நிற்பதற்கு ஒரு வினாடி முன்பு

 

  ஓரறிவு உயிர்கள், ஈரறிவு உயிர்கள், ஐந்தறிவு உயிர்கள் தெரிகிறது. நாம் ஆறறிவு உயிர்கள். ஐம்புலன்கள் தெரிகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி. ஐம்புலனால் அறியப்படுவது ஐந்தறிவு. ஆறாம் அறிவு எது பகுத்தறிவா? அதென்ன பகுத்ததறிவு அதற்கான புலன் எங்கே இருக்கிறது? அறிவா? அறிவும் புலனும் ஒன்றா? இப்படியாக ஒரு கூட்டம் கோயில் பஜனை மடத்தில் உட்கார்ந்து வெகு நேரம் வாதாடிக் கொண்டிருக்கும். இந்த சர்ச்சையில் அநேகமாக குட்டிப்பையனும் மணியும்தான் கதாநாயகர்களாக இருப்பார்கள். ஐம்புலனும் ஐந்தறிவும்