கதையாசிரியர் தொகுப்பு: எழில் வரதன்

34 கதைகள் கிடைத்துள்ளன.

புதர் வீட்டில் யாரோ வசிக்கிறார்கள்

 

  நாதன் தான் வசிப்பதற்காக ஒரு நூதனமான வீட்டை வெகு காலம் தேடிக்கொண்டிருந்தான். அவன் ஏகத்திற்கும் வசதியுள்ள சம்பாதிக்கும் திறமைசாலி. அந்த ஒரு காரணத்திற்காகவே நூதன வீடு, நூதன பொருட்கள், நூதன பெண்கள் இப்படி எதையும் தேடும் அறுகதை பெற்றவன். (நாதன் தேடிய நூதனப் பெண் பிறகு வருவாள்) நாதன் தேடிய வீடுதான் நூதனமே ஒழிய நாதன் நூதனமான ஆள்; கிடையாது. பூதகணங்களால் கட்டப்படும் விசித்திர வேலைப்பாடுள்ள ஒரு வீட்டை அவன் தேடவில்லை. மாறாக மரங்கள் அற்ற


கண்ணீர் வெறுத்தவன் காலடியில் அழுகை

 

  புருஷன் வீட்டிற்கு வந்ததும், நிஜமாகவோ அல்லது சம்பிரதாயமாகவோ ஒரு பாட்டு அழுது தீர்க்கிறார்கள் படித்த, படிக்காத கூர்மதியுள்ள, மந்தபுத்தியுள்ள எல்லாப் பெண்களுமே. எதிர் வீட்டிற்கு வந்த மூன்றாம் பையனின் புது மனைவியும் அழுதாள். அது சம்பிரதாயமான அழுகையாகத்தான் தெரிந்தது. ‘அழாதடா…. அழாத கண்ணு எங்க இங்கதானே இருக்கேன். ஒரு வார்த்தை சொல்லு ஓடி வந்திடறேன்…’ சொன்னது அவள் அம்மாவாக இருக்கும். அம்மா, அழுத பெண்ணை தேற்றிக்கொண்டிருக்க பக்கத்தில் வாயில் துண்டு வைத்து அழுது அதே துண்டால்


பேய்க் காற்று

 

  மாம்பிஞ்சுகள் விடத் தொடங்கியிருந்தது காலம். மாங்காய்களை கூடை நிறைய எடுத்து வந்து துண்டாக்கி, உப்பும் மிளகாய்த்தூளும் போட்டு, சாப்பிட சுவையாக விற்பாள் மிட்டாய்க் கிழவி. மாங்காயின் புளிப்பு பிள்ளைகளின் நாக்கில் எச்சில் ஊறச் செய்யும். தமிழரசிதான் எப்பொழுதும் தின்பண்டம் வாங்க காசு கொண்டு வருவாள். அவளின் அப்பா பணக்காரர். ~பணக்காரர்| என்றால் என்னவென்று சுப்ரு கேட்டான். “பெட்டி நிறைய காசு வச்சிருக்கிறவங்க பணக்காரங்க…” என்று மருதன் சொன்னதும், “என் அப்பா பெட்டியில கூட நிறைய காசு


ஆகாய உசரம்

 

  நம்பமுடியாத கதை புளுகுபவள் என்று ஊரில் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்த நான் ஏழு தலைமுறைக்கு எவ்வளவு தேவைப்படுமோ அவ்வளவு அவமானப்பட்டுவிட்டேன். இனியும் அப்படி அவப்பெயர் எடுத்தால் எட்டாம் தலைமுறைக்கும் அவமானம் வந்துவிடும் என்பதால் ஒரு முடிவு எடுத்தேன். இனி சாப்பிடும் சாப்பாட்டில் கல் இருந்தாலும் இல்லாமல் போனாலும் சரி, நாலு பேருக்கு முன்பாக எதைச் சொன்னாலும் நம்பும்படி உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்பது என் முடிவு. அதன்படிதான் இப்பொழுது நம்பத்தகுந்த விதத்தில் நான் பேசியும் வருகிறேன்.


தொலைந்து போன பையனின் புத்தகப்பை

 

  மூச்சிரைக்க ஓடிவந்த நான்கைந்து பையன்கள் வீட்டுக் கதவை படபடவென்று தட்டினார்கள். அதட்டியபடியே ஒப்பனைகள் குறைந்த ஒரு பெண் கதவைத் திறந்தாள். அந்த பையன்களில் சற்றே குள்ளமானவன் ஒரு பையை அந்த பெண்மணியிடம் தந்தான். ‘என்னது?’ பெண்மணி சற்றே மிரட்டும் தொனியிலும் புரியாத மர்மத்துடனும் குள்ளப் பையனை கேட்டாள். ‘டீச்சர் தந்தாங்க… உங்க பையனோடது’ குள்ளமான பையன் இன்னமும் மூச்சு வாங்கிக் கொண்டே நிற்க, பின்பக்கமிருந்த உயரமான ஒல்லிப் பையன் பதில் சொன்னான். அவன் பையில் நிறைய