கதையாசிரியர் தொகுப்பு: எழில் வரதன்

34 கதைகள் கிடைத்துள்ளன.

பிரம்ம சிருஷ்டியில் சுயசிம்மாசனம்

 

  காசு சம்பாதிப்பது கழுதைக் கொம்பாக இருக்கிறது என்று மணிமாறன் எல்லோரும் புலம்புவதைப் போல சத்தமில்லாமல் சுமாராகத்தான் புலம்பினான். அதற்கே வாசுதேவனுக்கு மிகக் கோபம் வந்து விட்டது. சுமாராக காது கேட்கும் அவருக்கு எப்படி கேட்டதோ அது. உலகத்து மொத்த சோம்பேறிகளையும் மொத்தமாகத் திட்டித் தீர்த்தார் அவர். மணிமாறன் வேலைக்குப் போகாமல் சோம்பேறியாக இருப்பதாக வாசுதேவன் குற்றம் சொல்கிறார். அதற்கு மணிமாறன் “எந்த வாலுள்ள நாலுகால் ஜீவன் எனக்கு வேலை தந்தது” என்று கேட்கிறான். இது வாசுதேவன்


சுருள் முடி

 

  சிக்கலான பிரச்சனையில் சிக்கிய பின் எதிர்கொண்டு அதனோடு மோதாமல் தப்பி ஓடுவதை கோழைத்தனம் என்று நான் கருதவில்லை; வீரமென்றே நினைக்கிறேன். உருண்டு வருவது பாறை என்று தெரிந்தும் கொம்பு உடைந்து ரத்தம் சொட்ட மோதிப் பார்ப்பது காட்டெருமைக்கு அழகல்ல. அதன் வீரம் சிங்கத்தின் வயிற்றில் இருக்கும் குடலை வெளியெடுப்பதில் இருக்கிறது. – சிங்கம் பார்க்காத ஒருத்தன். ஜாலாற்றின் கரைகளில் காடு போல வளர்ந்திருக்கும் நாணல் புதர்களுக்கு நடுவே தன் குழந்தை பருவத்தை கழித்தவன் பாபு. ஜாலாறு


கோரைக் கிழங்கு தேடும் பெருவனக் கொழுவன்

 

  கோரைக் கிழங்கை சுண்டு விரல் நகத்தால் ஏழு தலைமுறையாய் விடாது தேடும் கொழுவன் கதை பத்தாம் பருவத்தில் எனக்குச் சொல்லப்பட்டு என் ரத்தத்தின் நிறமாகி கலந்துவிட்டது. கதைகள் எப்பொழுதும் கதைகளாகவே இருப்பதில்லை. கதைக்குள் நிழலாக நடப்பவர்கள் திடுமென்று ஒருநாள் உயிர்பெற்று எழுந்து நம் நரம்போடு பின்னிப் பிணைந்து ரத்தமும் சதையுமாய் சரீரத்தோடு அய்க்கியமாகிவிடுவார்கள். அப்படித்தான் கதையில் கோரைக் கிழங்கு தோண்டிய கொழுவன் ஒருநாள் என்னோடு நிஜமாகவே ஒட்டிக்கொண்டு வீட்டுக்குள் என்னோடு நடமாடினான்; சண்டையிட்டான்; சிரித்தான்; கோபித்துக்கொண்டான்;


திருமங்கையின் கனவில் சில யுவன்கள்

 

  திருமங்கையின் கனவில் பெயர் தெரியாத யுவன்கள் சிலர் விசித்திர இசைக் கருவிகளோடு அழகான பாடல்களை பாடியபடி பூக்கள் உதிர நடந்து போனார்கள். அவர்களின் இசையும் முகமும் அவளுக்கு தித்தித்தது. அந்த தித்திப்போடு பகலை அவள் அலங்கரித்துக் கொண்டாள். அவளுக்கு கல்யாணப் பேச்செடுத்த கணத்தில் விசித்திர கருவிகள் பலவாகி கனவு விரிந்துகொண்டே இருந்தது. நெட்டுருவத்துடன் ஒருத்தன் சிறுமுத்தம் தந்து மறையும் போது எழுந்த விபரீத இசைக்கோர்வையில் வெட்கமுற்று இருந்தாள் திருமங்கை. திருமங்கையின் அப்பா திக்கெட்டும் தரகர்களை விட்டு


கண்ணீர்த் துளிகளும் கன்னிமார் ஒத்தடமும்

 

  என் திரண்ட அவயங்களில் கவரப்பட்ட அழகான நேர்த்தியான இளைஞர்கள் என் பின்னால் எனக்காக சுற்றித் திரிகிறார்கள். எடுப்பான உடையணிந்து என் சிரிப்பிற்காக ஒரு பொழுது செலவழித்து சில சேஉக்ஷடைகள் செய்து பார்க்கிறார்கள். லைப்ரரி புத்தகங்களின் சந்துகள் வழியே என் திருமுக தரிசனத்திற்காக நித்தம் தவம் கிடந்து சாகிறார்கள். பேருந்தின் படிகளில் நின்று ஜன்னலோரம் உட்கார்ந்திருக்கும் என் புடவையின் முந்தானை ஸ்பரிசத்திற்காக ஏங்கி தொங்கிப் பயணப்படுகிறார்கள். என் அழகைப் பற்றி மிகைப்பாடில்லாமல் எல்லா இளைஞனும் நாட்குறிப்பில் துண்டு