கதையாசிரியர் தொகுப்பு: எழில் வரதன்

34 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு மாணவன் ஃபெயிலாகிறான்!

 

  துருப்பிடித்த சைக்கிளில் போய்க்கொண்டு இருந்த குமாரப்பன், ஆலமரத்தடி ஆஞ்சநேயரைப் பார்த்ததும் இரண்டு கையெடுத்துக் கும்பிட்டான். போகிற காரியம் கூமுட்டையாகப் போகாமல் கொய்யாப் பழமாக வேண்டும் என்பதுதான் அவன் வேண்டுதல். சாமி கும்பிடும்போதே சைக்கிளுக்குக் குறுக்காக வந்து, அவனைக் குப்புறத் தள்ளப்பார்த்த குருட்டு நாயைக் கெட்ட சகுனமாக நினைக்கவில்லை அவன். குடித்துவிட்டு வந்திருந்த தன் அப்பன் குப்பைக் குழியில் விழுந்திருந்ததைப் பாதி வழியில் பார்த்ததும்தான் பதறினான். போகிற காரியம் நாசமாகத்தான் போகும் என்று அப்போதே அவனுக்குத் தெரிந்துபோனது.


ஒரு ஜூஸ் பாட்டிலும் ஏழு வாய்களும்

 

  ஆகாஷ், தூக்க மாத்திரை நான்கு போட்டுக்கொண்டான். தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகமாக வைத்தான். கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டான். சொறி நாய் போல சிரித்துப் பார்த்தான். பாதியில் நிறுத்தி, அழ முயற்சித் தான். விளக்கை அணைத்துவிட்டு, பறக்கிற கொசுக்கள் எத்தனை என்று எண்ணினான். என்ன கோணங்கித்தனம் செய்தாலும், அவனுக்குத் தூக்கம் வரவில்லை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி ஒன்று அவனைப் பாடாய்ப்படுத்தியது. ‘குடும்பம் என்பதற்கு அர்த்தம் என்ன?’ இந்தக் கேள்விக்கு அவனால் அதிகபட்சமாக டி.வி. ரிமோட்டைச் சுவரில் அடித்து


ஒரு ஜோடி செருப்பு தேடி…

 

  காலில் முள் குத்தியிருக்கிறது, கல் குத்தியிருக்கிறது, துருப்பிடித்த ஆணி, குதிரை லாடம் எல்லாம் குத்தியிருக்கிறது. பிறந்ததில் இருந்து செருப்பே இல்லாமல் நடக்கிற பாட்டப் பனுக்கு, அவையெல்லாம் ஒருபொருட்டாகவே இருந்ததில்லை. ஆனால் இன்று, மனுஷனாகப் பிறந்து வெறும் காலில் நடப்பதைவிட ஒரு எருமையாகப் பிறந்திருந்தால், குறைந்தபட்சம் செருப்பு வாங்கும் தொந்தரவாவது இல்லாமல் இருந்திருக்குமே என்று நினைத்தான். பாட்டப்பன் ஒரு கல்யாணத்துக்காக அவசரமாகப் போய்க்கொண்டு இருந்தான். எந்தக் கல்யாண மண்டபம் என்று சரியாகத் தெரியவில்லை. ஊரில் இருப்பதே மூன்று


ஓடிய நதிக்கரையின் பூக்கள்!

 

  நான் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியனாக வேலை செய்து, ஒரு வருடத்துக்கு முன் ஓய்வுபெற்றவன். தாமதக் கல்யாணம் செய்து, ஒரு பெண்ணைப் பெற்றெடுத்து, மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவளுக்கும் கல்யாணம் செய்துவைத்தேன். பெயர் தர்ஷணா. இப்போது புருஷனோடு சந்தோஷமாக இருக்கிறாள். எனக்கென்று இனி ஒரு கடமையும் கவலையும் வாழ்க்கையில் கிடையாது. ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வில்லாமல் உழைப்பதால், மகள் வீட்டுக்குப் போய் ஒரு பத்து நாள் ஓய்வு எடுக்கலாம் என நானும் என் மனைவியும்பயணப்பட்டோம். மகள்


வைத்தியனின் கடைசி எருமை

 

  ஆங்கார ரூபத்துடன் ஓங்காரமாய் நின்று, கோரைப்பல் நடுவே ரத்த நிற நாக்கு வெளித்தள்ள, ஆயுதங் களுடன் விழி உருட்டி நின்ற ஓங்காளியம்மன், சின்ன கண்ணாடிச் சட்டத்துக்குள் அழகாக நின்றாள். ஓங்காளியம்மன் முன் மண்டியிட்டு வேண்டிக் கொண்டு இருந்த கறுத்த நிறத்துக்காரனின் பெயர் ஓங்காளியப்பன். அவனுடைய பாட்டி பெயரும் ஓங்காளியம்மாதான். இப்படி ஒரு குலதெய்வத்தின் கொடித் தடமாக வேரோடிக்கிடந்த ஓங்காளியப்பனுக்கு ஓங்காளியம்மா மேல் (பாட்டி ஓங்காளியம்மா இல்லை; சாமி ஓங்காளியம்மா) அப்படி ஒரு நம்பிக்கை! ஓங்காளியப்பன் வேண்டிக்கொண்