கதையாசிரியர் தொகுப்பு: எம்.தேவகுமார்

14 கதைகள் கிடைத்துள்ளன.

செக்மேட்

 

 சிறு வயது முதல் பரத்திற்கு சதுரங்கம்தான் எல்லாமே, அதற்கு காரணம் அவனது தந்தை. அந்த சதுரங்க அறுப்பதுநான்கு கட்டங்களுக்குள் தன் மொத்த வாழ்க்கையையும் கட்டமைத்தான் பரத். அதற்கேற்ப வெற்றிகள் அவனை கட்டிகொண்டன. பரத்தை ஒரு சதுரங்க வீரனாக மட்டுமே வளர்த்த அவன் தந்தையால், நாளடைவில் வாழ்வியல் எதார்த்தங்களை எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால் சதுரங்க திறமைகளை வாழ்வில் உட்படுத்திகொண்டாலே சிறக்க முடியும் என்பதே யதார்த்த உண்மை. வீரமாக முன்னேற, சமயத்தில் பதுங்க, தேவைகேற்ப பின்வாங்க, மேலும் ஒவ்வொரு நொடியும்


பந்தி

 

 முதல் பந்தியின் முதல் வரிசையில் நீண்ட நேரத்திற்கு முன்னரே அமர்ந்திருந்த அவனை யாரும் கண்டுகொள்ளாததை அவனும் கண்டுகொள்ளவில்லை. அந்த வாழை இலையின் வனப்பு அவன் வாய் திறந்தது.ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் இலையில் விழுவதை எந்த வரிசையுமின்றி, பாரபட்சமின்றி வயிற்றை நிரப்பி கொண்டிருந்தான். விருப்பமோ வெறுப்போ இன்றி அருகிருப்பதை ஆசையோடு ஏற்று உண்டுகொண்டிருந்தான். அருகில் அமர வைக்க பட்டவர்களும் அவனை தள்ளியே அருவருப்புடன் அமர்ந்தனர் சொந்தக்காரன், சாதிக்காரன், ஊர்க்காரன் ஒவ்வொருத்தனும் ஏனையோரை ஏவிகொண்டிருந்தனர். “இலை போடல, சோறு போடல,


காதலுக்காக

 

 “கல்யாணம்” என்ற வார்த்தையை கேட்டவுடன் விசித்ராவுக்கு, தனது அக்கா காதலித்து ஓடி போக இருந்ததை கண்டறிந்து, வலுகட்டாயமாக அவளை தங்கள் தாய்மாமனுக்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்து, மேலும் திருமணத்தன்று அவள் காதலுருடன் ஓடிப்போக மணமேடையில் தேவையில்லாமல் நிற்கதியாக நின்ற தன் தாய்மாமனின் குடும்பத்திற்கும் தன் குடும்பத்திற்கும் வந்த பிரச்சனையில் சொந்தமே பிளவு பட்டதுதான் ஞாபகம் வந்தது. விசித்ராவுக்கு கல்லூரி படிப்பு முடியபோகும்தருவாயில் அவளது குடும்பம் பொறுப்பாக கல்யாணத்திற்கு தயாராக வேலையில் இறங்கியது.குறிப்பாக அவள் தந்தை சம்பந்தமூர்த்தி


குற்றபரம்பரை

 

 இந்த காதலர்களும், கல்லூரியில் பட்டம் வாங்கினார்களோ இல்லையோ, காதலில் தேர்ந்துவிட்டனர். ஆனால் இரு குடும்பத்திற்கும் எந்த பொருத்தமும் இல்ல, நெறைய வேறுபாடுகள் கிராமம் நகரம், சாதி, ஜாதகம், பொருளாதாரமென ராக்கெட் விட்டாலும் எட்டாது, பொருந்தாது. ஆனால் வேறு யாருக்கும், எந்த காதலர்களுக்கும் இல்லாத ஒரு பொருத்தம் ஒன்று இவர்களுக்குள் இருந்தது. அதுதான் பெயர் பொருத்தம். இருவரின் பெயரும் சத்யாதான். இருப்பினும் இருவரும் தயங்கி தயங்கியே மூன்று வருடம் ஆகிவிட்டது. ஆனால் “இனி முடியாது சொல்லியே ஆகா வேண்டுமென”


கொரானா நெகடிவ்

 

 எனக்கு ஒரு விசித்திர நோய் இருக்கு. அது என்னன்னா ரொம்ப பரிச்சயமற்ற ஆனால் எங்கோ பார்த்த நினைவு இருக்குற சில மனிதர்களை சந்திக்கும்போது அவர்கள் ஏற்கனவே இறந்தவர்களாக தோன்றுவது. அது ஏனோ சமீபத்தில் அந்த எண்ணம் அதிகமாகி கொண்டே போகிறது. இதை முதலில் வெளிப்படையாக அருகிருப்பரிடம் நேரடியாக கேட்டு தெரிந்துகொள்வேன். ஆனால் போக போக அது ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. அதனால் இப்போதெல்லாம் நான் கேட்பதில்லை. ஒரு வித சந்தேக உணர்வுடன்தான் பயணிக்கிறேன். இதற்கு முக்கிய காரணமாக


கண்டேன் பேயை

 

 பேய் அப்படின்னாலே எல்லாருக்குமே பயம் ஆனா அது எனக்கு பிசினஸ். ஆமா நான் பேயா வச்சுதான் பணம் சம்பதிக்கிறேன் . அதுக்காக நான் பேயை புதுசா உருவாக்கி பயமுறுத்தி அப்டிஎல்லாம் இல்ல அதெல்லாம் பழைய ஸ்டைல். நான் சம்பாதிக்க தேவையான பயத்தை இன்வெஸ்ட் பண்ணி வச்சிருக்க நீங்க ஒவ்வொருத்தரும் என் பாட்னர்தான். இந்த நவீன காலத்திலும் பேயையும் என்னையும் வாழ வைக்குற கஸ்டமர் இருக்குற வரைக்கும் என் காட்ல பணபேய் மழைதான். அதுக்காக பேய்யல்லாம் என் பிரண்டும்


ஓடு

 

 நான் ஓடிகிட்டு இருக்கேன்?, யார் இவங்கல்லாம்? ஏன் என்னை துரத்துறாங்க? சும்மா துரத்துனா கூட பரவால்ல ஏழெட்டு பேர் கையிலும் பட்டா கத்தி, வீச்சு அருவா? நான் சினிமாலதான் இதல்லாம் பாத்துருக்கேன், அந்தளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்? நீங்க நினைக்கிற மாதிரி நான் மெமரி லாஸ் பெசண்டு இல்ல, ஆனாலும் எனக்கு எதுமே விளங்கல?. ஊருக்குள்ளேயே ஓடி இருந்தாலும் எங்கயாச்சும் மறையலாம்., இல்ல, யாராச்சும் காப்பாத்துவாங்க, இப்டி வெட்ட வெளி புழுதி வயகாட்டுல ஓடிட்டு இருக்கேன்,


கால் கிலோ

 

 அதிகாலையிலேயே அந்த ஆலமர, ஆட்டிறைச்சி கடை கூடிவிடும் ஞாயிற்றுகிழமைகளில், அந்த சிறிய கிராமத்திற்கு இதற்க்காகவே சுற்றியுள்ள நகரங்களில் இருந்துகூட வாடிக்கையாளர்கள் வருவார்கள். அங்குதான் கலப்படமில்லாத, ஊறல்போடத இயற்கை எடையுடன் ஆட்டு கறி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்னும் கிராமத்தார்கள் திறன்பட ஏமாற்ற கற்றுக்கொள்ளவில்லையென நினைக்கும் நகரத்தார்களின் அறியாமைகூட அதற்கு காரணமாக இருக்கலாம். அன்றுவரை சில்லறை வாங்ககூட அந்த கடைக்கு ஒதுங்காத, அதே கிராமத்தை சேர்ந்த ஜான், அன்று முதல் ஆளாக நின்றான். ஆனால் மழைகாலமானதால் அன்று சற்று


நேர்முகத் தேர்வு

 

 அடிப்படை தேவைகளுக்கே அன்றாடம் அல்லல்படும் குடும்ப பின்னணியில் மூன்று அக்காக்களுக்கு கடைக்குட்டியாக, சர்வான்மா, முதற்முறையாக ஒரு நேர்முகத்தேர்வை எதிர்கொள்ள தயாராகிறான். வீட்டிலிருந்து நிறுவனம்வரும்வரை ஒலித்து கொண்டே இருந்தது அம்மா மற்றும் அக்காகளின் அறிவுரைகள் மற்றும் பொருளாதார குறைகள். அந்த MNC கம்பெனியில்நேர்முகத்தேர்வுக்கு காத்திருக்கும் மாணவர்கள் கூட்டம் சர்வான்மாவை களைப்படைய செய்தது. கிட்டத்தட்ட வரிசையின் கடைசியில் இருப்பினும், இயல்பாக முன்னால் இருப்பவரிடம் பேச முயன்றான்.“ஹலோ சார், உங்களுக்கு FIRST டைமா? அவன், ஒரு மாதிரி பார்த்துவிட்டு “ ஆமா,


அந்த நேர பேருந்து

 

  அந்த ஆலமர குளக்கரை பேருந்து நிலையம் , எங்கள் கிராமத்தின் பிடித்த பகுதிகளில் முக்கியமானது, மேலும் அவளால் அதி முக்கியத்துவம் பெற்றது, ஏனென்றால் அவளை நான் வேறெங்குமே கண்டதில்லை, காலையில் 8.30 மணியளவில் அந்த பேருந்து எங்கள் ஊரை கடக்கும் என்பதால் அந்த நேரம் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என பல்வேறு பயணிகளுக்கு தேவையான நேரம் என்பதால் எப்போதுமே கூட்டமாகத்தான் இருக்கும். எத்துனை நாளாக அவள் அங்கு பஸ் ஏறினாளோ எனக்கு தெரியாது, அன்று தான்