கதையாசிரியர் தொகுப்பு: எம்.எஸ்.ருக்மணி தேசிகன்

9 கதைகள் கிடைத்துள்ளன.

ஏழு குழந்தைகளையும் ஏன் கொன்றாள் கங்கை?

 

  சூரிய வம்சத்தில் தோன்றிய இக்ஷ்வாகுவின் மகன் மகாபிஷக். இவன், ஆயிரம் அசுவமேத யாகங்களை நடத்தியவன் ஆதலால், இந்திரனுக்கு நிகராக விளங்கினான். ஒரு முறை, பிரம்மலோகம் சென்றிருந்தான் மகாபிஷக். பிரம்மனின் சபையில் தேவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். கங்காதேவியும் இருந்தாள். அவளது மகிமையை எல்லோருக்கும் உணர்த்தும் விதம், ”பூலோக மாந்தர்களின் பாவங்களைப் போக்குபவள் இவள்” என்று புகழ்ந்தார் பிரம்மதேவன். அவையில் கூடியிருந்த அனைவரும் அவளை பெருமிதத்துடன் நோக்க… கங்கா தேவிக்கு, ‘தனக்கு நிகர் எவரும் இல்லை’ என்ற


ஊர்வசியின் சாப விமோசனம்!

 

  சந்திர குல அரசர்களில் ஒருவர் புதன். இவரின் மகன் புரூரவன்; சிறந்த குணவான். மக்களின் நம்பிக்கையையும் பெரியோர்களது ஆசியையும் பெற்றவன். ஒரு முறை, சாபத்தின் காரணமாக பூலோகத்தில் வசித்திருந்த ஊர்வசி எனும் தேவலோக மங்கை யைச் சந்தித்தான் புரூரவன். அவளின் பேரழகு புரூரவனைக் கவர்ந்தது. அவளிடம், ”உன்னை மணக்க விரும்புகிறேன்!” என்றான். ஊர்வசிக்கும் அதில் விருப்பம்தான். எனினும் மூன்று நிபந்தனைகள் விதித்தாள். ”மன்னா… நான் இரு ஆடுகளை என் குழந்தைகளாகக் கருதி வளர்க்கிறேன். அவை, எப்போதும்


கர்ணன் அவதரித்த கதை!

 

  சாகா வரம் வேண்டி கடும் தவம் இருந்தான் தானாசுரன் எனும் அரக்கன். அதன் பயனாக அவனுக்கு தரிசனம் தந்தார் சிவபெருமான். ”எந்தவொரு ஜீவாத்மாவும் மரணத்தைத் தவிர்க் கவே முடியாது. எனவே, வேறு வரம் கேள்!” என் றார் பரமேஸ்வரன். உடனே தானாசுரன், ”எந்த ஆயுதத்தாலும் மரணம் நிகழாத வகையில், ஆயிரம் குண்டலங் களுடன் உயிர்க் கவசம் ஒன்றும் தர வேண்டும். இவை, எனது உடலை விட்டு நீங்காத வரை மரணம் என்னை நெருங்கக் கூடாது!” என்று


துர்வாசர் சாபமும் கைகேயி வரமும்!

 

  துர்வாச முனிவரது நீண்ட பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது கேகய நாடு. தவம் செய்ய சிறந்ததோர் இடம் வேண்டி அலைந்த துர்வாசருக்கு, கேகயத்தின் அமைதியான சூழல் பிடித்துப் போனது. அங்கேயே தங்கி தவமியற்ற முடிவு செய்தார்! தவசீலரான துர்வாசரது வருகையை அறிந்த கேகய அரசன் அசுவபதி ஓடோடி வந்தான். துர்வாசரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். ”முனிவர் பெருமானே… தாங்கள் என் அரண்மனையை ஒட்டிய வனத்திலேயே தவம் மேற்கொள்ளலாம். உங்களது தேவைகளை என் மகள் கைகேயி உடன்