கதையாசிரியர் தொகுப்பு: எம்.எஸ்.கமலா

1 கதை கிடைத்துள்ளன.

கார்த்திகைச் சீர்

 

  ஆடி வெள்ளிக்கிழமை – கடைசி வெள்ளிக்கிழமை. லட்சுமி தன் படுக்கை அறையிலிருக்கும் லட்சுமி, சரஸ்வதி படங்களுக்கு, ஆடையும் ஆபரணங்களும் அதியற்புதமாய்த் தைத்து, கை வேலைப்பாட்டுடன் சோபிக்கும் படங்களுக்கு புஷ்ப ஹாரங்களையும் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் முகம் நிஷ்களங்கமாய்ப் பிரகாசித்துக் கொண்டு இருந்தது. புக்ககம் வந்து இரண்டு மாதகாலமாகிறது. ஆடிக்கு அழைத்துச் சென்று அன்று காலைதான் அழைத்து வந்து விட்டான் அவள் சகோதரன். கணவன் ஆபீசிலிருந்து வருவதற்கு முன் தன் வேலைகளை எல்லாம் செய்துவிட்டுத் தயாராய் இருக்க எண்ணிச்