கதையாசிரியர் தொகுப்பு: என்.சொக்கன்

27 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவும், நடேசனும்

 

  ‘நடேசா, சௌக்கியமா இருக்கியா ? இங்க நானும், உங்கம்மா, தங்கைகளும் சௌக்கியம், நம்ம பட்டுக்கோட்டை பெரியப்பா ஒரு வாரமா இங்கே வந்து தங்கியிருந்துட்டு போன புதனுக்குதான் கிளம்பினாங்க, அவங்களும் உன்னை ரொம்ப விசாரிச்சதா சொல்லச் சொன்னாங்க, உன் சிநேகிதப்பய பரமசிவனுக்கு அடுத்த வாரம் கல்யாணமாம், அவங்க அப்பாவும், அம்மாவும் வந்து பத்திரிக்கை கொடுத்துட்டுப் போயிருக்காங்க, அவனும் நேத்தி சாயங்காலம் நேர்லவந்து உன்னை அவசியம் வரச்சொல்லி கடிதாசி எழுதணும்ன்னு என்னைக் கேட்டுகிட்டுப் போனான், அதனால நீ எவ்ளோ


எரிமலை வாசல் பூ

 

  உணவு இடைவேளைக்குச் சற்று முன்பாக அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது, ‘ஹலோ, நான் ரமேஷ் பேசறேன், மிஸ்டர் மகேஸ்வரன் இருக்காரா ?’ என்ற குரல் நிச்சயம் முன்பரிச்சயமானதாக இல்லை. ‘ஸ்பீக்கிங்’ என்றேன் சுருக்கமாய், இத்தனை உரிமையாய் பேசத் துவங்கும் அந்தக் குரலை இதற்குமுன் எங்கேயாவது கேட்டிருக்கிறேனா என்று அவசரமாய் நினைவடுக்குகளில் தேடிப்பார்த்தும் பலனில்லை. யாராய் இருக்கும் ? அந்தக் குறுகுறுப்பு ரொம்பவும் நீடிக்கவில்லை, என் குழப்பத்துக்கான பதில் அந்த ரமேஷிடமிருந்தே வந்தது, ‘வணக்கம் சார், என்னை


குண்டுப் பையன் கதை

 

  முதன்முதலாக என்னை ‘குண்டுப் பையா’ என்று அழைத்தவன் யார் என்று எனக்குத் துல்லியமாய் நினைவிருக்கிறது. அப்போது நான் மூன்றாம் வகுப்பிலோ, நான்காம் வகுப்பிலோ காலம் தள்ளிக்கொண்டிருந்தேன். சொற்ப ஆசிரியர்களே கொண்ட எங்கள் அரசுப் பள்ளியில் பெரும்பான்மை நேரங்கள் விளையாட்டுக் கல்விக்குதான் என்பது ஒரு எழுதப்படாத விதிமுறை, அதன்படி நாங்கள் ஒருவரையொருவர் ஓடிப் பிடித்துக்கொண்டும், மரமேறிக் கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டும் வருடங்களை விரட்டியபடியிருந்தோம். நீண்ட வகுப்பறைகளால் நிறைந்த எங்கள் பள்ளியின் தென்மேற்கு மூலையில், ஒரு தனித்த


இலைகள்

 

  பச்சைப்பசேலென்று செழித்துவளர்ந்த கொடிகளுக்குள் மறைந்துவிட்ட கணவனைப் பெரும் பீதியோடு பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்போதே அவன் உடலில் அங்குமிங்கும் சிறிய பச்சை இலைகள் தென்பட்டன, நாள்முழுக்க உடலைச்சுற்றி வளர்ந்த கொடிகளின் மிச்சங்களா அவை, அல்லது புதிய கொடியொன்று வளர்வதற்கான அடையாளமா என்று அவள் வழக்கம்போல் குழம்பிக்கொண்டிருக்கும்போது அவன் அவள் தந்த காப்பியைக் குடித்துவிட்டு அவனது வாசிக்கும் அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டான், அன்றைய செய்தித்தாளை முதல் பக்கத்திலிருந்து விரிவான அலசல் செய்தபோதும்கூட அவன் சாதாரணமாகவே இருந்தான்,


கனவான்களின் ஆட்டம்

 

  இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் எங்கள் ஏரியாவில் பலருக்குக் கிரிக்கெட் ஆர்வம் ஏற்பட்டதற்கு ஒரே காரணம், சச்சினோ, தோனியோ அல்ல, நிஷா! ’சேட்டுப் பொண்ணு’ என்று செல்லமாக அழைக்கப்படுகிற நிஷா, ஏதோ கல்லூரியில் என்னவோ படிக்கிறாள். மிஞ்சிய நேரத்தில் ஆர்வமாகக் கிரிக்கெட் வளர்க்கிறாள். நிஷா இங்கே வருவதற்கு முன்னால், எங்களுடைய ‘காந்தி பார்க்’கில் எந்த ஒரு விளையாட்டும் தனி ஆதிக்கம் செலுத்தவில்லை. ஒரு மூலையில் சிலர் ஸ்டம்ப் நட்டுப் பந்தை