கதையாசிரியர் தொகுப்பு: என்.சொக்கன்

24 கதைகள் கிடைத்துள்ளன.

கிழக்கு

 

  அன்று அதிகாலையிலிருந்தே அவனுக்கு நேரம் சரியில்லை. தூக்கத்திலிருந்து விழிப்பதற்குமுன்பே ஒரு கெட்ட கனவு – யாரோ நான்கு முகம் தெரியாத அயோக்கியர்கள் அவனைத் துரத்தி, அவனுடைய கை, கால்களிலெல்லாம் சிறு ஊசி கொண்டு எண்ணற்ற துளைகள் செய்துவிட்டு, காணாமல் மறைந்துவிடுகிறார்கள். திடுக்கிட்டு விழித்துக்கொண்டவன், தன் அறையின் இதமான சூழலில்தான் ஓரளவு நிம்மதியடைந்தான். என்றாலும், அந்தக் கனவின் மிச்சம்போல, வயிற்றின் ஒரு மூலையில், பிடிவாதமாய் ஏதோ வலித்துக்கொண்டிருந்தது. சுவரோரமாய்ச் சரிந்தபடி தூங்கிக்கொண்டிருக்கும் சியாமளாவை ஒருமுறை பார்த்துவிட்டு, போர்வையை


உபதேசம்

 

  ‘எவன் உனக்கு வேலை கொடுப்பான் ?’, உள்ளே ஆத்திரம் பொங்கினாலும், அதை மறைத்துக்கொண்டு கொஞ்சம் கிண்டலாகதான் கேட்டார் அவளது அப்பா. ஒரு பெண்கள் விடுதியின் வரவேற்பறையில், கிருஷ்ணார்ஜுனர்களின் படம் எதற்கு என்று சபாபதிக்குப் புரியவில்லை. ஆனால், சுவரில் பாதிக்குமேல் அடைத்துக்கொண்டிருந்த அந்த ஓவியம் மிக அருமையாக இருந்தது. அதில் பல நுட்பமான உள்குறிப்புகள் பொதிந்திருப்பதாக அவருக்குத் தோன்றியது. அர்ஜுனனின் வில்லும், சில அம்புகளும் கீழே கிடக்கின்றன. அவன் தரையில் மண்டியிட்டுக் கை கூப்பியிருக்கிறான். அவன்முன்னே நிற்கும்


வீடு

 

  அவன் காலை விழித்தெழுந்தபோது அறைமுழுக்க தண்நீர் நிரம்பியிருந்தது, அவனும் பிற நண்பர்களும் படுத்திருந்த பாய்கள் நீரின்மேல் தெப்பம்போல் மிதந்தாடிக்கொண்டிருந்தன. அவன் எழுந்து உட்கார்ந்து கண்ணைக் கசக்கியதும் நிறைந்திருந்த நீரெல்லாம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டு எங்கோ ஓடி மறைய, அவர்கள் தரைக்கு வந்தார்கள். அவன் கண்கள் இன்னும் எரிந்துகொண்டிருந்தது. கண்ணாடியில் பார்த்தால் செக்கச் செவேலென்று சிவந்திருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். சீக்கிரமே படுத்துவிட்டாலும், ராத்திரி சரியாய்த் தூக்கமில்லை. எத்தனை மணிக்கு தூக்கம் வந்தது என்றே தெரியாதபடிக்கு யோசனைகளின், கற்பனைகளின் அவஸ்தை,


சல்யூட்

 

  நான் என் வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்ப, அவன் எப்போதும்போல் என்னை நெருங்கி, விறைப்பாய் ஒரு சல்யூட் வைத்தான். காரணமில்லாத அனிச்சையாய் என் தலை கவிழ்ந்துகொண்டது. இனம்புரியாத குற்றவுணர்ச்சி மனதினுள் நிரம்ப, கொஞ்சமும் நிமிர்ந்து பார்க்காமல் விறுவிறுவென்று உள்ளே நடந்தேன். இந்த ஹோட்டலில் சாப்பிடத் துவங்கிய நாள்முதலாகவே, இது அன்றாட நடவடிக்கையாகிவிட்டது – வண்டி நிறுத்துமிடத்தில் அந்த அவன் எனக்கு வணக்கம் போடுவதும், பதிலுக்குக் காசு எதிர்பார்ப்பதும், அதைத் தரமுடியாது என்று நான் பிடிவாதமாயிருப்பதும் ! இத்தனைக்கும்,


பூட்டு

 

  முதன்முதலாக நானொரு சாவிக் கொத்தைக் கையில் வாங்கியது, கல்லூரிக்குச் சென்றபிறகுதான். அதற்குமுன்பே சைக்கிள் சாவியொன்று என்வசமிருந்தது. என்றாலும், அது வெறும் சாவி மட்டுமே, சொல்லப்போனால், அதைவிட மீச்சிறியதானதொரு இரும்புத் துணுக்குதான். காந்தத்தைக் கண்டு இரும்பு நகர்வதுபோல, எப்படியோ அந்த உலோகத் துண்டுக்கு பயந்து எங்கள் சைக்கிள் திறந்துகொண்டிருந்தது. அப்பா, அம்மா இருவருமே வேலைக்குச் செல்கிறவர்கள்தான். ஆனால், எங்களோடிருந்த அத்தை எந்நேரமும் வீட்டில்தான் இருப்பார் என்பதால், நானும், என் தம்பியும் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோதுகூட, எங்களிடம் வீட்டுச் சாவியைத்