கதையாசிரியர் தொகுப்பு: என்.சி.மோகன்தாஸ்

1 கதை கிடைத்துள்ளன.

சுயம்வரம்

 

 ‘‘வந்திரா! முடிவாய் நீ என்னதான்சொல்கிறாய்?’’ _சீறினார் பாவணன். தந்தையின் சீற்றம் தன்னைத் தகர்த்துவிடமுடியாது என்று திமிரும் தேகம் வந்திராவுக்கு. அவர் அவளிடம் அபிப்ராயம் கேட்கவில்லை!ஒப்புக்கொள் _ அடிபணி என்று கட்டளையிடுகிறார். அவளால் அதற்கு ஒப்ப முடியவில்லை. ‘‘தந்தையே! எனது முடிவை எப்போதோ சொல்லிவிட்டேன். அதில் எந்த மாற்றமுமில்லை.தயவுசெய்து என்னை நிர்ப்பந்திக்காதீர்கள்!’’ சொல்லிவிட்டு வீட்டு முற்றம் இறங்கினாள். மரத்தில் செடி கொடிகள் பின்னிபிணைந்திருக்க,அவற்றில் அணில்கள் தாவின. அவள், கொலுசுகள் குலுங்கிக் குமுற ஓடிச் சென்று, பொய்கையை அடைந்தாள். தெளிந்த