கதையாசிரியர் தொகுப்பு: உஷா அன்பரசு

51 கதைகள் கிடைத்துள்ளன.

கண் திறந்தது

 

  ” ஏ பொன்னி.. மட மடன்னு கலவை போடு… இப்படி மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி? மணலை இன்னும் கொஞ்சம் கலக்கணும்…..” அவள் கையிலிருந்து சம்மட்டியை வேண்டுமென்றே உரசியபடி பிடுங்கி சலித்த மணலை அள்ளி கொட்டிவிட்டு பின்னால் நின்று அவள் இடுப்பை வெறித்து பார்த்து கொண்டிருந்த மேஸ்திரி நல்லக்கண்ணுவின் மீது ஆத்திரமாய் வந்தது பொன்னிக்கு. ” பேருதான் நல்லக்கண்ணு… பார்வை எல்லாம் நொள்ளை’ என மனதுக்குள் முனகிக்கொண்டாள். ச்சே.. கட்டினவன் ஒழுங்கா இல்லாம குடிச்சிட்டு திரியறதால வேலைக்குன்னு


காலத்தின் கண்ணாடி…!

 

  ” காயத்ரி என் கல்யாணத்துக்கு அவசியம் வரனும்..” அலுவலகத்தில் புதிதாய் வேலைக்கு சேர்ந்த ராகவி இன்விடேஷன் வைத்திருந்தாள். பத்திரிக்கையை பிரித்ததும் … ராஜா வெட்ஸ் ராகவி என்ற எழுத்துக்கள் மின்னியது. ‘ராஜா’ என்ற பெயரை பார்த்ததும் தான் காதலித்த ராஜாவை கல்லூரியின் கடைசி நாளன்று சந்தித்து பேசியது காயத்திரிக்கு நினைவலைகளாக இழுத்து கொண்டு வந்தது. ” இப்படியே.. அஞ்சு நிமிஷமா என் முகத்தையே பார்த்திட்டிருந்தா… என்ன அர்த்தம்…ஏதாவது பேசுங்க….” ” அதில்ல…. ரொம்ப நேரம் உத்து


சிறந்த அன்னை…

 

  என்னை நீரஜின் பள்ளியில் அழைத்திருந்தார்கள். நீரஜ் பள்ளியில் எல்லாவற்றிலும் சூப்பர் ஸ்டார். அதனால் சிறந்த அன்னையாக பள்ளியில் என்னை சிறப்பிக்க போகிறார்களாம்… அன்னையர் தினத்தை பற்றி சில வார்த்தைகள் பேச வேண்டும். என்ன பேசலாம்… அன்னையர் தினத்தை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். வேலைக்காரி கமலா வந்தாள்..” அம்மா துணி எல்லாம் எடுத்து வச்சாச்சா…? “ கேட்டுக் கொண்டே பக்கெட்டில் உள்ள துணிகளை பரக்க பரக்க துவைத்தாள். துணிகளை மொட்டை மாடியில் காய வைத்து விட்டு கிச்சனுக்குள்


வீடு

 

  “சண்முகம்.. நாம் வந்து இருபது நிமிடம் ஆச்சி.. இப்படியே பேசாம இருந்தா எப்படி…?” – கேட்ட கேசவமூர்த்தி கவலையோடு பார்த்தார். இருவரும் ஒன்றாகவே பணி புரிந்தவர்கள்.ஓய்வு பெற்ற பிறகும் நல்ல நண்பர்களாக இருப்பவர்கள்.ஒருவர்க்கு தெரியாமல் இன்னொருவர் குடும்பத்தில் எதுவும் நடந்ததில்லை.தினமும் யாராவது ஒருவர் வீட்டில் சந்திப்பு இருக்கும்.சில சமயம் இப்படி காந்தி பூங்காவிற்கும் வருவதுண்டு. பூங்காவில் செடிகளை கத்தரித்து கொண்டிருந்த முனிசாமி ” வணக்கம் சாமி” என்றார் கேசவனை பார்த்து.பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாயை எடுத்து அவரிடம்


தோப்பில் தனிமரம்

 

  “ விஜி .. நம்ம பத்மாவதி பெரியம்மா ரொம்ப படுத்து கிடக்குது..ஒரு தடவை வந்து பார்த்துட்டு போ” அம்மா போன் பண்ணியதும் எனக்குள் திக்கென்றது நான் பெரியம்மாவை பார்த்து ரொம்ப நாட்களாயிற்று.விடுமுறை நாட்களில் வீட்டு வேலைகளே சரியாக இருக்கும்.போன மாதம் அம்மா வீட்டிற்கு சென்ற போது தெருமுனையில் இருக்கும் பெரியம்மாவின் வீட்டிற்கு போக டைம் இல்லாமல் ஓடி வந்து விட்டேன். “ என்னங்க நீங்க வர்றிங்களா..?” “ நீ மட்டும் போய் வா.. எனக்கு நிறைய