கதையாசிரியர் தொகுப்பு: உஷா அன்பரசு

51 கதைகள் கிடைத்துள்ளன.

நினைவெல்லாம் நீயே ஆனாய்…

 

 “இனியா, நீதான் எத்தனையோ கதை எழுதறியே… என் அப்பாவை பத்தி ஒரு கதை எழுதேன்… ப்ளீஸ் பா….” “ நீ நினைக்கறதை நீயே எழுதினா நல்லாருக்குமே சூர்யா…?” “ இல்லப்பா… எனக்கு எழுதல்லாம் வராது…. என் எண்ணத்துக்கு நீ உயிர் குடுத்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்…” கடற்கரை மணலில் ‘அப்பா’..என்று எழுதி கொண்டே உற்று பார்த்து கொண்டிருந்த சூர்யாவை வியப்புடன் பார்த்தவள், “ சூர்யா உனக்கு அப்பான்னா அவ்வளவு பிடிக்குமா?” “ ஏன் இப்படி கேட்கிற …


பிரம்மாக்கள்

 

 லேசாக தூறல் ஆரம்பித்தது.மழை பிடிக்கும் முன் ஸ்கூலுக்கு சென்று விடலாம் என்று பஸ்ஸை விட்டு இறங்கியதும் வேகமாக அடியெடுத்து வைத்தேன். அவசரம் புரியாமல் செருப்பு வார் அறுந்து காலை இழுத்தது.இந்த ஊருக்கு ஆறு வருடம் கழித்து இப்போதுதான் வருகிறேன். சுற்றி முற்றி பார்க்கிறேன்… செருப்பு கடை எதுவும் கண்ணில் தென்படவில்லை. தூரத்தில் ரோட்டோரம் குடையை விரித்து கடை போட்டு அறுந்த செறுப்புகளை ஒருவன் தைத்துக்கொண்டிருந்தான். சமாளித்து நடந்து, “ஏம்ப்பா… இந்த செருப்பை கொஞ்சம் தைச்சிடுப்பா… ஸ்கூலுக்கு நேரமாகுது…”


மௌன மொழிகள்

 

 பரபரப்பான வேலைகளிடையே சைலண்ட் மோடிலிருந்து மொபைல் கிர்..கிர்ரென்று அதிரவும் எடுத்த மித்ரா, ஹலோ… ஹலோ.. மித்ராவா ? நான் உங்க வாசகன் பேசறேன்.. இந்த வாரம் சலங்கையில் நீங்க எழுதியிருந்த மன ஓசை சிறுகதை நல்லாயிருந்தது…எதேச்சையாத்தான் படிக்க முடிஞ்சது…” “ ரொம்ப நன்றிங்க… உங்க பேர்?” “ என் பேர் பிரஷாந்த்…. சேலத்திலர்ந்து பேசறேன்…! “ பேரை கேட்டதும்…. ஆச்சர்யமாகிப்போனவள், “ பிரஷாந்த் நீங்களா? நான் நினைச்சே பார்க்கலை… எப்படி இருக்கீங்க…? ரொம்ப நாளாச்சி இல்ல …


அழகான கனவுகள்…..!

 

 “ ஏங்க காலையில் என்ன அவளோட அரட்டை…? இந்த கீரையை கொஞ்சம் நறுக்கலாமில்ல… இந்த வீட்ல எல்லாத்துக்கும் நானேதான்….” என் கூப்பாடு எதுவும் அவர்களை சலனப்படுத்தவில்லை.. அவள் நேற்று கண்ட கனவின் பயங்கரத்தை சொல்லி கொண்டிருந்தாள்…” ப்பா… நேத்து ஒரு பயங்க்கர கனவுப்பா…. இப்படித்தான் தொடங்குவாள். எனக்கு தெரியும் என்னிடம் சொல்ல வரமாட்டாள். “ போடி காலையில் எத்தன வேலை இருக்கு… கனவாம்… கனவு அதெல்லாம் அப்பறம் கேட்கிறேன்… போய் ஸ்கூல் வொர்க் எல்லாம் முடி..” என்று


பணம் காய்ச்சி மரம்…

 

 அப்பா போய் பத்து நாட்களாகிவிட்டதை நம்பவே முடியவில்லை. எனக்கு அப்பா என்பதை விட நண்பனாகத்தான் நிறைய தெரியும். சரவணனுக்கு அப்படி இல்லை…. அப்பா வாத்தியாராய் இருந்த பள்ளியிலே நாங்கள் இருவரும் படித்தோம். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் அப்பாவிடம் சொல்வார்கள்” சார் உங்க சின்ன பிள்ளை சிவா பரவாயில்லை… படிப்பில கெட்டி ஆனா பெரியவன் சரவணன் ஏன் இப்படி இருக்கான்? “ கேட்கும் போது அப்பா பதில் சொல்ல முடியாமல் உடைந்து போய் விடுவார். சரவணனுக்கு எத்தனையோ நல்லவிதமாய்

Sirukathaigal

FREE
VIEW