கதையாசிரியர் தொகுப்பு: இலங்கையர்கோன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

மேனகை

 

 வாலிப வயதின் கனவுகள் நிறைந்த ‘மனக்காதல் ஆயின் விஸ்வாமித்திரர் மனிதர்களின் மத்தியில் வாழ்வதை விடுத்து கொடிய கானகத்தை நாடி வந்திருக்க வேண்டியதில்லை. ஆயிரம் மோகினிகளின் மத்தியிலேயே கனவு கண்டபடி காலத்தைக் கடத்தி விட்டிருக்கலாம். ஆனால் அவர் வாலிபப் பருவத்தைக் கடந்து பல்லாண்டுகளாய் விட்டன. அவரை வருத்தியது இளமையின் மனக்காதல் அன்று. நடுத்தர வயதின் மனக்கலப்பற்ற கொடிய உடல் வேட்கை. தசையின் பிடுங்கள்… சகலத்தையும் துறந்த சர்வவேத விற்பன்னரும் மகாமேதையுமான அவரால் பெண்ணாசை ஒன்றை மட்டும் துறக்க முடியவில்லை.


சக்கரவாகம்

 

 “வேலுப்பிள்ளை, நாடி நல்லாய் விழுந்து போச்சு. வயதுமோ பின்னிட்ட வயது; இன்னும் இரண்டு மணித்தியாலத்திற்குள் எல்லாம் முடிந்து போய்விடும். மனதைத் தேற்றிக்கொள்.” இந்தக் கொடிய தீர்ப்பைத் தன் இளம் வயதிற்கு உரிய யோசனை யின்மையோடு அநியாயமாக வீசிவிட்டு, அதன் விளைவைப் பார்க்க விரும்பாதவன் போல் வைத்தியன் சால்வையை உதறித் தோளிற் போட்டுக்கொண்டு வீட்டு வாசலைக் கடந்து வேகமாக நடந்தான். வேலுப்பிள்ளை அசந்துபோய்த் திண்ணையிற் சாய்ந்தான் …… மனத்தின் உந்துதல் இல்லாமலே அவனுடைய கை அருகில் கிடந்த காம்புச்