கதையாசிரியர் தொகுப்பு: இரா.மு.மோதிரேகா

1 கதை கிடைத்துள்ளன.

அம்மா, நான் தோத்துப் போயிட்டேன்!

 

  பெங்களூர் மெட்ரோ ரயில் திட்ட வேலை நடப்பதால் அகண்ட எம்.ஜி.ரோடும் குறுகி, குக்கிராமப்பாதையைப் போலாயிற்று. வாகன ஒட்டுநர்களுக்கு, போக்குவரத்து உச்சவேளையில் இது ஒரு சாபக்கேடாகவே தோன்றியது. சரிதா அலுவலக அலுப்போடு என்றும் போல் இந்தத் தண்டனையை அனுபவித்து, வேலையிலிருந்து வீடு திரும்பினாள். அரைமணி நேரமாய் அம்மாவை எதிர்பார்த்து ஏமாந்த அவளது முதல் பையன் விட்டல், தன் அம்மா வீட்டில் நுழையும் போதே. அம்மா இங்கே பாரும்மா! இன்னைக்குக் கோபியோட பிறந்த நாள் விழாவுல ஒரு கேம்