கதையாசிரியர் தொகுப்பு: இரா.முருகன்

22 கதைகள் கிடைத்துள்ளன.

கிடங்கு

 

 ‘எறங்குடா’ அண்ணாச்சி காரை நிறுத்தினார். இருட்டு. எந்த இடம் என்று புரியவில்லை. முன்னால் ஏதோ பெரிய கட்டடம். அங்கேயும் விளக்கு எதுவும் தெரியக் காணோம். ‘அண்ணாச்சி, இது என்ன இடம்? சோமு கண்ணைக் கசக்கியபடி கேட்டான். அவன் தூங்கப் போனதே நடு ராத்திரிக்கு அப்புறம் தான். தினமும் அதுதான் வாடிக்கை. நாயக்கரின் ராத்திரி மட்டன் ஸ்டாலில் மல்லிகைப் பூ இட்லி வியாபாரம் முடிகிற நேரம் அது. ‘ரொம்ப கெறங்குதாடா? எனக்காக ஒரு நாள் பொறுத்துக்க.. தனியா ஆசுபத்திரிக்குப்


வினைத்தொகை

 

 கிடக்க வேண்டியிருக்கிறது. பகலும், இரவும் படுக்கையில்தான் வாசம். வந்தபடிக்கே நோயில் விழுந்தாகி விட்டது. அம்மை. கொப்பளிப்பான் என்று பெயர் சொன்னார்கள். மாதுளம் பழத்தை உரித்து உடலெங்கும் ஒட்டவைத்தது போல் சின்னச் சின்னக் கொப்பளங்கள். நாலுநாள் கண்ணைக் கூடத் திறக்க முடியாமல் இமை மேலும் முத்துகள். உலகம் படுக்கையறையோடு சுருங்கி இன்றைக்குப் பத்து நாள். ரயில் பயணத்தையும் சேர்த்துப் பம்பாயிலிருந்து கிளம்பி பனிரெண்டு நாள். ‘ஊருக்குப் போகணும்.. ‘ ‘போய்க்கோ. ‘ ‘இல்லே ..எப்பத் திரும்ப வரணும்னு ..


ஸ்டவ்

 

 ஆறுமுகம் வாத்தியார் வீட்டில்தான் இது ஆரம்பித்தது. அவங்க வீட்டம்மா மீன் கழுவிய தண்ணீரையும் செதிலையும் கொட்டக் கொல்லைக் கதவைத் திறந்தபோது கழுநீர் எடுக்கத் தகரக் குடத்தோடு பங்காரம்மா உள்ளே நுழைந்தாள். உங்க எருமைக் கன்னுக்குட்டி இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்திடும். வாத்தியார் வீட்டம்மா சொன்னாள். பங்காரம்மா மாடு வளர்க்கிறாள். நாலும் எருமை. ஒரு பசு கூட கிடையாது. எருமைப்பால் தான் வேண்டும் என்று டாக்கடைக்காரர்கள் கேட்கிறார்கள். டாக்கடைக்கு ஊற்றியதுபோக அவ்வப்போது ஆழாக்குப் பாலை தெருவில் முறை


ஆழ்வார்

 

 அந்த முன்னிரவுச் சூழ்நிலை கொஞ்சம் அபத்தமாக இருந்தது. குண்டும் குழியுமாகக் கிடந்த தெருவில் பள்ளத்தில் இறங்கிய சைக்கிள் செயின் கழன்று போய் மாட்டிக் கொண்டிருந்தவன் யாரையென்று இல்லாமல் திட்டிக் கொண்டு நடுத் தெருவில் குனிந்து உட்கார்ந்திருந்தான். எதிரே பழைய கட்டிடம். கீழ்ப்பகுதியில் எல்லாம் கடைகள். ஒரு மாவு மெஷினும் உண்டு. கடைகளை அடைத்துவிட்டுக் கிளம்பிப் போயிருக்க, மாவு மெஷினிலிருந்து ஏதோ கரகரவென்று பொடியாகப் பிளாஸ்டிக் வாளியில் சுமந்து கொண்டுவந்து தெருவில் கொட்டி, நான்கைந்து பேர் கர்மசிரத்தையாகக் கையளைந்து


வாயு

 

 1 குளோரியா அம்மாள் அறைக்குள் நுழைந்தபோது நீளமான மேசைக்குப் பின்னால் நாலு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அதில் மூன்று பேர் சூட் அணிந்த கனவான்கள். தலைக்கு பழுப்புச் சாயம் ஏற்றிக் கொண்ட, வயது மதிப்பிட முடியாத ஸ்தூல சரீரம் கொண்ட ஒரு பெண்ணும் உண்டு. அந்தப் பெண்ணின் கோல்ட் ப்ரேம் மூக்குக் கண்ணாடியும், கழுத்தில் வைரப்பதக்கம் தொங்கும் மாலையும் குளோரியா அம்மாளை யோசிக்க வைத்தன. சரியான இடத்துக்குத்தானா வந்திருக்கிறேன் ? என்ன வேண்டும் ? எதிர்பார்த்ததுபோல் அந்தப் பெண்தான்