கதையாசிரியர் தொகுப்பு: இரா.சடகோபன்

39 கதைகள் கிடைத்துள்ளன.

சொல்லியிருந்தால் சாவு வந்திருக்காதா?

 

  தனது வீட்டின் படுக்கையறையில் கட்டிலில் சுகந்தி கால்களை விறைத்து நீட்டியபடி மல்லாந்து படுத்து முகட்டு வளையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அண்மைக்காலமாக அவள் வாழ்வில் என்னவெல்லாமோ நிகழ்ந்துவிட்டன. அவளது அன்புக் கணவன் ஆனந்தன் அப்படியொரு பாறாங்கல்லைத் தூக்கித் தன் தலையில் போடுவான் என்று ஒருபோதும் கனவு கண்டிருக்கவில்லை. கொஞ்சக் காலமாகவே அவள் அனுபவித்துவரும் அந்தப் பெருந்துன்பத்தை அவள் யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொண்டிருந்தாள். குறிப்பாக, அந்த விடயம் தன் கணவனுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் அவள்


அம்மாவின் கட்டளைகள்

 

  எனக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறக்கும் வரை நான் என் அம்மாவைப் பற்றி தவறாகவே புரிந்து கொண்டிருந்தேன். அதுவரை அவரை நான் இந்த உலகத்திலேயே இருந்த மிகக் கொடுமையான அம்மா என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது என் குழந்தைகளை நான் வளர்க்க முற்படும் போதுதான் தெரிகிறது என அம்மா எவ்வளவு உயர்ந்த உள்ளம் கொண்டிருந்தார் என்பது. எங்கள் அப்பா எங்களையெல்லாம் தவிக்க விட்டு விட்டு சிறு வயதிலேயே இறந்து போனபோது குடும்பத்தின் முழுச்சுமையையும் என்


அக்கா என்றால் அம்மா

 

  இன்று என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். நான் எனது மருத்துவப் பட்டப் படிப்பை படித்து முடித்து எம்.பி.பி.எஸ். பட்டத்தை பெற்றுக்கொள்ளும் நான் பட்டம் பெறுவதை பார்த்து பெருமையடையவும் அதன் பின் என்னை வாழ்த்திக் குதூகலமடையவும் என் பெற்றோரும் என் தம்பியும் வந்திருந்தார்கள். ஆனால் இதனால் எல்லாம் என்னால் சந்தோசம் அடைய முடியவில்லை. அதற்குக் காரணம் அந்த உன்னத நிலையை நான் அடையக் காரணமாக இருந்த என் அக்கா இன்று என்னுடன் இல்லை. எனக்கு அம்மா


கறுத்த கொழுப்பான் மரத்தடியில்…

 

  சிவநேசன் நேசையா தன் வீட்டு வாசல் முற்றத்தில் கறுத்தக் கொழும்பான் மரத்துக்கு அடியில் போடப்பட்டிருந்த அந்த சிமெண்ட் பெஞ்சியில் அமர்ந்து கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தார் . பத்து வருடங்களுக்கு முதல் அவுஸ்ரேலிய நாட்டுக்கு சென்று குடியேறிவிட்ட அவரது மகனும் மகளும் அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டனர் . அவர்களுக்கு அங்கே வேலையும் வீடும் கூட கிடைத்துவிட்டது. அங்கே அவர்களுக்கு திருமணமும் நடந்து பேரப்பிள்ளைகளும் பிறந்துவிட்டனர் . அவரது மனைவி காலமாகி சில வருடங்கள் ஓடி மறைந்து


அவனுக்கு இனிக் கனவுகளும் கூட வராது…

 

  அந்த ஆஸ்பத்திரி அந்த வாட்டு அதன் சுற்றுப்புற சூழ்நிலைகள் எல்லாமே மௌனமாக இருந்தன. ஜன்னலுக் கருகில் சுவரோரமாக போடப்பட்டிருந்த ஒரு கட்டிலில் சுமார் பதினெட்டு, பத்தொன்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் கண்ணயர்ந்தபடி படுத்திருந்தான். அவன் கண்கள் மூடப்பட்டுக் கிடந்த போதும் ஏனிந்த வாழ்க்கை என்பது போல் அவன் முகம் மிக ஆழமான சோகத்தில் மூழ்கிப் போயிருந்தது போல் தான் தோன்றியது. அவனது முகம் மட்டும் சோகத்தைப் பறைசாற்றவில்லை. அவனைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவன்