கதையாசிரியர் தொகுப்பு: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

97 கதைகள் கிடைத்துள்ளன.

ஏழையின் பாதை

 

 ஊதல் காற்று உடம்பைத் துளைத்தெடுத்தது. தன்னுடைய ஒரே ஒரு போர்வையை-அது வீட்டில் படுக்கும்போதும், வெளியில் போகும்போதும் பாவிக்கும் ஒரே போர்வையை மூடிக்கொண்டு முருகன் நடந்தான். கிரவலும் களியும் கலந்த ரோட்டில் விரைவாக நடப்பது சிரமமாகவிருந்தது. தூறிக்கொண்டிருப்பது சாதாரண தூறல்தான்.எனினும்,நேற்றுவரை பெய்தது பெருமழை. அதனால் பாதையெல்லாம் சதக் சதக் என்றிருக்கிறது. அவசர தேவைக்கு,இந்த ரோட்டால் யாரும் டாக்சி கொண்டுவருவார்களா? முருகனுக்கு ஒரு பழைய சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. போன வருடமும் இப்படித்தான் பெருமழை பெய்தது. பக்கத்து வீட்டுப் பரமுவின்


முதலிரவுக்கு அடுத்தநாள்

 

 (வாசர்களின் கவனத்திற்கு, கதையில் சில பகுதிகள் 18+ வயதிற்கு மேற்பட்டவர்க்கு மட்டுமே) பாவம் அந்த மாடு! சூடு தாங்காமல் அலறிக்கொண்டிருக்கிறது.அதன் கால்களைக் கட்டி,மாடு அசையமுடியாமற் பண்ணியிருக்கிறார்களா? அல்லது,கழுத்தில் கயிறு மாட்டி,மரத்துடன் பிணைத்திருக்கிறார்களா? அந்த மாட்டுக்குச் சொந்தக்காரர்,தன் உரிமையின் பிரதிபலிப்பை நிலை நாட்ட வாயில்லாப் பிராணிக்குக் குறி போட்டுக்கொண்டிருக்கிறார். குறிபோடப்படும் மாட்டின் வேதனையைப் புரிந்ததோ இல்லையோ மற்ற மாடுகள் வைக்கோலை மென்றபடி இந்தக் கோரக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.அவைகளிற் பெரும்பாலானவை அப்படியான சடங்குகளுக்கு முகம் கொடுத்தவை.. ‘இப்படித்தான் உங்கள்


அட்டைப்பட முகங்கள்

 

 அரவிந்தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டழுதான்.’யாழ்ப்பாணத்தில் இன்னுமொருதரம் குண்டுவீச்சு. தேவாலயம் தரைமட்டம், இருபது முப்பது தமிழ் மக்கள் இறந்திருக்கலாம்’.இலங்கைப் பத்திரிகையை வாசித்ததும் அடக்க முடியாத சோகம் அழுகையாக மாற தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து அவன் அழுகிறான். தேவாலயத்துக்கு அருகிலிருந்த குடும்பத்தை அவனுக்குத் தெரியும். அங்கு குடிவாழ்ந்த ‘தேவசகாயம் மாஸ்டரும் அவரின் குடும்பமும்,இறந்த போன தமிழர்களில் சிலராக இருக்கக்கூடாது’. அவன் தனக்குள்ப் பிரார்த்தித்துக் கொள்கிறான்.அவனின் நினைவு தெரிந்த நாள் முதல் நெருங்கிப் பழகிய குடும்பம் அது. அந்தக்


இன்னுமொரு கிளி

 

 மார்லின் பேக்கர் தூரத்தில் வருவதைக் கண்டதும்.எனக்கு எதோ செய்கிறது. வழக்கப்போல் ,’ஹலோ,குட்மோர்னிங்’ சொல்லி விட்டுப ;போகத்தான் நினைக்கிறேன். நீண்ட நாளாக அவளைச் சந்திக்கவில்லை. எங்களின் திடிர் சந்திப்பு தயக்கத்தைத் தருகிறது. அவள் நெருங்;கி வந்ததும் அவள் முகத்தை மிக அருகில் கண்டபோது,’ஹலோ மார்லின் ஹவ் ஆர் யு’ என்று கேட்கத்தான் தோன்றியது.அவளும் நானும் ஒரு காலத்தில் மிகவும் நெருங்கிய சினேகிதிகள்.இன்று இருவரும் அன்னியர்கள்போல் பழகவேண்டிய நிர்ப்பந்தம். ஐந்து வருடங்களுக்குமுன் அவள் எங்கள் ஆபிசுக்கு வந்தபோது, அவளது குரலில்


பரசுராமன்

 

 ‘அப்படி என்ன யோசனை?’ பெரியம்மா தன் இடுப்பில் கைவைத்தபடி,அவளது தங்கையின் மகளான வைஷ்ணவிக்கு முன்னால் நின்று கேட்டுக் கெர்ணடிருக்கிறாள்.வைஷ்ணவியின் மறுமொழி, பெரியம்மா எதிர்பார்ப்பதுபோல் இருக்கவேண்டும் என்று அவள் நினைக்கிறாள்; என்பதைப் பெரியம்மாவின்,குரல், முகபாவம்,என்பன பிரதிபலிக்கின்றன. வைஷ்ணவிக்கு,அவளின் பெரியம்மா ஒரு அன்னியமாகத் தெரிகிறாள். வைஷ்ணவியின் தாயின் மரணம் உறவினர்களை மிகவும் நெருக்கமாக்கிட்டதாகவும், அவர்களிற் பெரும்பாலோர் வைஷ்ணவி சொல்லப்போகும் பதிலில் தங்களின் மானம் மரியாதை கவுரவம் அத்தனையும் தங்கியிருப்பதாகக் கருதுவது வைஷ்ணவிக்குத் தெரியாததல்ல. சொந்தங்கள் என்பவர்கள், ஒருமனிதனால் தேர்ந்தெடுக்கப்படாத உறவின்


அக்காவின் காதலன்

 

 அதிகாலை ஐந்து மணி. வீட்டுக் கதவைத் கதவை யாரோ படபடவென்று தட்டிய சப்தம் பவானியைப் படுக்கையிலிருந்து துள்ளியெழப் பண்ணியது. பக்கத்திலிருந்த அலாம்குளொக்கில் மஞ்சள் நிறத்தில் நேரம் ஐந்து மணியென்று காட்டியது. அவளுக்கு ஆத்திரம் வந்தது. யாராயிருக்கும் இந்த நேரத்தில் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாகக் கதவைத் தட்டுவது (இடிப்பது)?. பக்கத்தில் படுத்திருந்த கணவர் உலகம் தலைகீழானாலும் அது தெரியாமல் குறட்டைவிடுபவர்;, அவரும் பட படவென கதவு தட்டுப்படும் ஆரவாரத்தில்.பவானி சட்டென்று துடித்தெழுந்ததின் அதிர்ச்சியில் கண்விழித்து,’ என்ன.. என்ன நடக்கிறது?’ என்று


இரட்டைத் தத்துவங்கள்

 

 லண்டன் 1991 “எனக்காக இவ்வளவு சிரமம் எடுத்ததற்கு நன்றி” டொக்டர் ரமேஷ் பட்டேலின் குரலில் நன்றிபடர்ந்தது. “இந்த நாட்டில் கறுப்பு டொக்டர்களாக வேலை செய்கிறோம். எங்களில் எப்போது என்ன பிழை பிடிப்போம் என்று பார்த்திருக்கிறார்கள் இந்த வெள்ளையர்கள். அவர்களை எதிர்நோக்க நாங்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்பது என் கருத்து” டொக்டர் கார்த்திகேயன், டொக்டர் ரமேஷ் பட்டேலுக்கு மறுமொழி சொன்னான். இருவரும் அவர்களின் தலைமை டொக்டரின் அறையிலிருந்து போய்க்கொண்டிருந்தார்கள். கார்த்திகேயன் இலங்கையைச் சேர்ந்த தமிழ் டொக்டர். ரமேஷ்


சின்னச் சின்ன ஆசை

 

 மிஸ்டர் ஜெரமி ஹமில்டன் வரண்டு கிடந்த தனது உதடுகளைத் நாக்காற் தடவிக் கொண்டார்.தனது இருதயம் அளவுக்கு மீறித்துடிப்பதாக அவருக்கொரு பிரமை. அது உண்மையாகவுமிருக்கலாம். மனம் எங்கேயோ பாய்ந்து கொண்டிருக்கத் தனக்கு முனனாற் கிடக்கும் மாணவர்களின் நோட்ஸ்களை அவர் கண்கள் நோட்டம் விட்டன.அந்த டிப்பார்ட்மென்டின் மூன்றாம் வருட மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் அவை. அவர் அவைகளைப் படிக்கவேண்டும் அபிப்பிராயங்கள் எழுதவேண்டும்.இந்தக் கட்டுரைகளில் இவற்றை எழுதிய மாணவர்களின் எதிர்காலம் தங்கியிருக்கின்றன. ‘மைதிலியின் எதிர்காலம் உங்கள் கைகளிற்தானிருக்கிறது’ கொஞ்ச நேரத்திற்கு முன்


மாமி

 

 1980. யாரோ கதவைத் தட்டுகிறார்கள். இந்த நேரம் வருவது ஒன்று பால்க்காரனானவிருக்கும் அல்லது எதையோ விற்கவரும் சேல்ஸ் மனிதர்களாகவிருக்கும். கொஞ்ச நேரத்திற்கு முன் தபாற்காரன் தந்து விட்டுப் போன- ஊரிலிருந்து வந்த கடிதம் எனது கையிலிருக்கிறது. பெற்றோர், உற்றார், ஊரிற் தெரிந்தவர்கள், என்ற அடிப்படையில் பழைய நினைவுகளை, புதிய ஏக்கங்களைக் கொண்டுவரும் கடிதங்கள். இப்போது வந்த கடிதம் எனது கையிலிருக்கிறது. இரண்டு மூன்று கிழமைக்கொருதரம், அல்லது இலங்கைப் பிரச்சினையால் இரண்டு மாதங்களுக்கு ஒருதரம் நான் பிறந்த மண்ணிலிருந்து


சிந்தியாவும் சிவசங்கரும்

 

 சிவசங்கர் அவளுக்காகக் காத்திருக்கிறான். தன்னைச் சுற்றிய உலகை மறந்து அவளுக்காகக் காத்திருக்கிறான். கடந்த சில நாட்களாக மழை அடிக்கடி பெய்கிறது.அத்துடன் மார்கழிமாதக்குளிர், அவன் அணிந்திருக்கும் உடைகளைத் தாண்டி அவன் எலும்புகளில் உறைகிறது. அவன் தனது கைகளைக்குளிரிலிருந்து பாதுகாக்கத் தன் ஜக்கட் பாக்கட்டுகளுக்குள் புதைத்துக்கொண்டான். அவளைப் பற்றிய அவனின் நினைவுகளைப் புதைத்துக்கொள்ள அவனின் உலகத்தில் எந்த இடமுமில்லை. அவளைச் சந்தித்த நாளிலிருந்து அவள் அந்த இடத்துக்கு வருவதற்;கு நேரம் தவறியதை அவன் அறியான். அவன் அவளைச் சந்தித்த நாளிலிருந்து