Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

84 கதைகள் கிடைத்துள்ளன.

பயணிகள்

 

  லண்டன் 1999 ‘ஏப்ரல்மாதத்திலும் இப்படி ஒரு குளிரா?’ஜெனிபர்,அந்தப் பஸ்சின் கொண்டக்டர்,மேற்கண்டவாறு முணுமுணுத்துக்கொண்டு பஸ்சில் ஏறிய ஒரு முதிய ஆங்கிலப் பெண்ணுக்குக் கைகொடுத்து அவள் பஸ்சில் ஏற உதவி செய்தாள். அந்த ஆங்கிலேய மூதாட்டி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள்,அவளுக்கு எழுபது வயதாகவிருக்கலாம். சுருக்கம் விழுந்த முகத்தோற்றம். மழையோ குளிரோ,வீட்டுக்கு வெளியே போகும்போது,ஆங்கிலேயப் பெண்கள் எந்த வயதிலும்,தங்களை அலங்கரித்துக் கொள்ளத் தவற மாட்டார்கள். அந்த ஆங்கில மாதும் தனது தளர்ந்த முகத்திற்குத் தகுந்த விதத்தில் மேக் அப் போட்டிருந்தாள்.கையில்


எய்தவர் யார்

 

  ‘புது உலகம் எமை நோக்கி பிரசுரம்’- ஆடி 99 லண்டன்-97. ஜனட் மிகவும் ஒய்யாரமாக அமர்ந்திருந்து,கண்ணாடியிற் தன் அழகை ரசித்தபடி சிவப்பு லிப்ஸ்டிக்கைத் தன் இதழ்களுக்குப் பூசிக் கொண்டிருந்தாள் அவளின் செய்கை அவளது காதலன் பீட்டருக்கு எரிச்சலைத் தந்தது. கொஞ்சக் காலமாக அவள் தன்னை அளவுக்கு மீறி அலங்கரிப்பதாக அவனுக்குப் பட்டது. பீட்டர் தன்னைப் பார்க்கிறான் என்பதைக் கடைக் கண்ணால் எடைபோட்டபடி ஜனட் தன்வேலையைத் தொடர்ந்தாள்.அவளுக்கு இப்போது வயது இருபது. பதினெட்டுவயதிலேயே ஒரு குழந்தைக்குத் தாயாகி


ரவுண்ட் அப்

 

  சித்திரை 1985, இலங்கையின் கிழக்குக் கிராமம். சித்திரை மாதக் கொடும் வெயிலின் உக்கிரம் அதிகாலை என்பது மணிக்கே பிரதிபலித்தது. எங்கள் வீட்டுப் பெட்டைநாய் டெய்ஸி; தன் குட்டிகளுடன் வாழைமரத் தோட்டத்தில் நிழல் தேடியது.போனகிழமை,குஞ்சுகள் பொரித்த வெள்ளைக்கோழி,பல நிறங்கள் படைத்த தனது பத்துக் குஞ்சுகளுக்குக் கடமையுணர்வுடன் இரை தேடிக் கொண்டிருந்தது. இரவுகளில் யார் வீட்டுப் பரணிகளிலோ மீன் பொரியல் தேடித்திரிந்த களைப்பில்,எங்கள் வீட்டுக் கடுவன் பூனை குளிரான சிமேந்து விறாந்தையின் தரையில் சுருண்டு படுத்திருந்தது. வீட்டு மாமரத்தில்


அவள் வந்து நிற்கிளாம்!

 

  (யாழ்ப்பாணம் 1980) “அவள்” வந்து நிற்பதாக, அவன் காலையில் பள்ளிக் கூடத்துக்குப் போகும்போது மனைவி சொன்னாள். அறுந்த செருப்பை ஒரு விதமாக “அட்ஜஸ்ட்” பண்ணிப்போட்டவன்,அவள் அப்படிச் சொன்ன விடயத்தைக் கேட்ட அதிர்ச்சியில், ஒரேயடியாக செருப்பை அறுத்துவிட்டான். “சுசீலா உங்களைக் கேட்டாள், உங்கள் எழுத்து எப்படி இருக்கிறது என்று கேட்டாள்.”அழும் குழந்தைக்குப் பால் கொடுத்தபடி மனைவி சொல்கிறாள். ‘இன்னும் அவளுக்கு என்னை நினைவு இருக்கிறதா?’, தன் பரபரப்பை எக்காரணம் கொண்டும் மனைவி காணக்கூடாது என்ற தவிப்பு. அவன்