கதையாசிரியர் தொகுப்பு: இரஜகை நிலவன்

20 கதைகள் கிடைத்துள்ளன.

மனதின் மடல்

 

 என்ன செய்வதென்றே தெரியவில்லை ரேவதிக்கு. வாசித்த கடிதத்தை கைப்பையினுள் வைத்து விட்டு, தன் கையிலே மருதாணி போட்டு விட்டு கைகழுவச் சென்ற தோழிகள் வரக் காத்திருந்தாள். விடிந்தால் அமெரிக்க மாப்பிள்ளை ஆனந்திற்கும் அவளுக்கும் நிச்சயதார்த்தம்…. இந்த நேரத்தில் ஆறு மாதமாக காணாமற்போன விஜய் திடீரென்று வந்து … எத்தனையோ சொல்லிவிட்டு… கையிலே ”என்னை… என் நிலைமையை விவரித்திருக்கிறேன். அலை பேசி… நண்பர்கள்… ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்று கோபப்படுவாய்… அந்த அளவிற்கு கோபப்படாவிட்டால் நீ… நீயாக இருக்க


வசந்தங்கள் வரும் நேரம்

 

 பொன் அந்தி மாலையும் தென்றல் காற்றை மெதுவாக பூமிக்கு அனுப்பி வெப்பம் குறைந்துள்ளதா என வேவுபார்த்து வர அனுப்பியது. ஆதவன் தன் வேலை நேரம் முடிந்து விட்டதென ‘டாட்டா’ காட்டி விட்டு பூமிக்குள் ஓடி ஒளிய முயற்சி செய்து கொண்டிருந்தது. தன்னருகே கதிரவன் வருவதாக கற்பனை செய்து நீல வானமும்மேகக் கூட்டங்களும் செம்மை படர்ந்த கன்னத்தோடு சொக்கி நின்றது. இன்னும் வீட்டிற்கு சரியன நேரத்தில் திரும்பி வராத மகனைத் தேடி எங்கே போவது என யோசித்துக் கொண்டிருந்தாள்


அந்த அரபிக் கடலோரம்…

 

 இந்துவை கொலை செய்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்து விட்டது.என்னைப் பலர் முன்னால் மூக்கை உடைத்தவளுக்கு சரியான பாடம் கற்பிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம். இதை நழுவ விட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் அமைவது கூட கஷ்டம். என்று மனதிற்குள் எண்ணிக்கொண்ட வினோத் சார் எனக்கு விசாகப்பட்டினம் கப்பலை பார்வையிட சர்வே பண்ண மிகுந்த சந்தோஷம் கூட. ஆனால் இதைப் பற்றி இந்துவிடம் ஒரு வார்த்தை பேசினால்… என்று தன் மேலதிகாரியிடம் வேண்டுமென்றே பற்ற வைத்தான். மிஸ்டர்


இது கடிதமல்ல…

 

 அன்புள்ள வசந்தனுக்கு, இருபது நாட்களாக யோசித்து இறுதியில் முடிவு செய்து இதை எழுதுகிறேன். மூன்று வாரங்களாக உன்னை சந்திப்பதைத் தவிர்த்து உன்னை இனியும் அலைய வைப்பது தகாது என்ற முடிவில்தான் இந்தக் கடிதத்தை… இல்லை.. பிரிவு மடலை உனக்கு எழுதுகிறேன். பிரிவு என்ற சொல்லை வாசிக்கும்போது உனக்குள் எவ்வளவு பெரிய எரிமலை வெடிக்கும் என்பது எனக்கு இப்போதே புரிகிறது. சில விஷயங்கள் கசப்பாக இருந்தாலும் மரிந்து குடிப்பதுபோல விழுங்கி விட வேண்டிய சூழ்நிலை வரும்போது மறுக்க முடியாமல்


நதி!

 

 டாக்டர் அருணா நாற்காலியில் அமர்ந்து மேஜையில் சாய்ந்து படுத்திருந்தாள். அவள் கண்களில் வழிந்தோடிக் கொண்டிருக்க, துடைக்கக் கூட விருப்பம் இல்லாமல் விம்மிக்கொண்டுந்தாள். அந்த அறைக்குள் வந்த கம்பவுண்டர் ஜேம்ஸ் “டாக்டர் அருணா உங்களை பெரிய டாக்டர் கூப்பிடுகிறார்” என்று சொல்லி விட்டுப் போனான். உடனடியாக எழுந்த அருணா முகத்தைத் துடைத்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாள். திருப்தி வராமல் முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து பெரிய டாக்டரை பார்க்கக் கிளம்பினாள். “என்ன அப்பா கூப்பிட்டீங்களாமே?” என்று பெரிய டாக்டர்


அந்த அரபிக் கடலோரம்…

 

 மும்பாய் இந்துவை கொலை செய்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்து விட்டது.என்னைப் பலர் முன்னால் மூக்கை உடைத்தவளுக்கு சரியான பாடம் கற்பிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம். இதை நழுவ விட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் அமைவது கூட கஷ்டம். என்று மனதிற்குள் எண்ணிக்கொண்ட வினோத் சார் எனக்கு விசாகப்பட்டினம் கப்பலை பார்வையிட சர்வே பண்ண மிகுந்த சந்தோஷம் கூட. ஆனால் இதைப் பற்றி இந்துவிடம் ஒரு வார்த்தை பேசினால்… என்று தன் மேலதிகாரியிடம் வேண்டுமென்றே பற்ர வைத்தான்.


தண்டனை

 

 பக்கத்து வீட்டு இளம்பெண் குறிஞ்சி இறந்து போனதாகச் செய்தி வந்த போது அடித்துக் கொண்டு ஓடினான் கணேசன். ஓலைக்குடிசையின் குறுக்குக் கம்பில் தூக்குப் போட்டு பிணமாகத் தொங்கினாள். அவளின் அம்மா “ஓ” வென்று அலறித் துடித்து அழுது கொண்டிருந்தாள். மரணித்து விட்ட போதும் குறிஞ்சியின் அதரங்கள் கணேசனைப் பார்த்துக் கேலியாகச் சிரிப்பது போல தோன்ரியது. உறவினர்கள் ஒவ்வொருவராய் வந்திகொண்டிருக்க, பெண்கள் குறிஞ்சி யின் தாயோடு சேர்ந்து ஓலமிட்டு அழ ஆரம்பித்தார்கள். “போலீஸுக்குத் தெரிந்தால் கண்டிப்பாக பிரச்சனை வரும்.


அமெரிக்கப் பறவை

 

 மதுமிதா அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். சென்னைக்கு வந்தவள் மாமா வீட்டுக்கு திருச்சி அருகிலுள்ள பால்குளம் கிராமத்திற்கு வந்திருந்தாள். அவள், அந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் காஞ்சனாவிற்கு எரிச்சலும், கோபமும் மிகுந்தது. ‘எப்போதும் சாந்தமும், சந்தோஷமும் நிறைந்திருக்கின்ற பெண் காஞ்சனா. ஏன் இப்படி மாறினாள்’ என்று குடும்பத்தினரிடையே ஒரு சிறிய சலசலப்புக் கூட ஏற்பட்டது. காஞ்சனாவின் வீட்டில் தங்கிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவளுடைய அத்தைப் பையன் கணேசன், மதுமிதா பால்குளத்திற்கு வந்ததிலிருந்து கல்லூரியைக் கூட மறந்து அமெரிக்காவிலிருந்து வந்திருந்த


கொஞ்சும் கனவுகளோடு நான்

 

 இரயில் ஓடிக் கொண்டிருக்கிறது… நான் இன்னும் பழைய கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிறேன். டில்லிக்கு வந்து ஏறக்குறைய பதினைந்து வருடங்களாகி விட்டன. திருமணத்திற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னாலே மத்திய அரசு நிறுவனத்தின் ஒரு பகுத்திக்கு நேரடியாக மானேஜராக பதவி பெற்று வந்தேன். இங்கேயே திருமணம் முடித்து கவிதா மற்றும் பீட்டர் ஆகிய குழந்தைகளோடு, இன்னும் அழகான மனைவி ஸ்டெல்லாவோடு ஊரை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறேன். ஊரிலே மாதா கோவில் திருவிழா ஜாலியாக இருக்கும் என்று நினைக்கும் போதே


மது மாது எது…?

 

 “அய்யய்யோ எவ்வளவு இரத்தம்? இது வேணும்னு நான் செய்ததில்லை. அய்யோ, இப்போது நான் என்ன செய்யப் போகிறேன்?” என்று கத்தினான் விஜய். கீதாவின் தலையிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அவள் கையை வைத்து இரத்தத்தைத் தடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். விஜய் எறிந்த கண்னாடி கிளாஸ் உடைந்து சிதறிக் கிடந்தது. “கீதா நீ ஏன் நான் குடித்துக் கொண்டிருக்கும் போது வந்து எனக்கு அட்வைஸ்செய்யவேண்டும், போய்விடு” என்றான். அவள் தலையில் வடியும் இரத்தத்தை நிறுத்த, தன் பையிலிருந்து கைத்துண்டை