கதையாசிரியர் தொகுப்பு: இமையம்

20 கதைகள் கிடைத்துள்ளன.

நறுமணம்

 

  கைக்கடிக்காரத்தைப் பார்த்தான் கதிரேசன். மணி மாலை 5:10. 20 அடி தூரத்தில், முக்கோணத் தாங்கியில் பொருத்தப்பட்ட தியோட லைட்டின் வழியே, விருத்தாசலத்தைச் சுற்றிச்செல்லும் புறவழிச்சாலைக்கான வரைபடத்தையும், அதற்கான நிலத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தனைப் பார்த்தான். பிறகு, நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துவிட்டு மேற்கில் பார்த்தான். சூரியன் நல்ல வெளிச்சத்தோடு இருந்தது. பக்கத்தில் இருந்த நெல் வயலைப் பார்த்தான். புழுக்களைக் கொத்தித் தின்றுகொண்டிருந்தன கொக்குகள். ‘இந்த பாயின்ட்டோடு நிறுத்திடலாமா சார்?’ எனக் கேட்டான். ஆனந்தனிடம் இருந்து எந்தப் பதிலும்


ஆஃபர்

 

  தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சேகரிடம், ‘எங்க ஸ்கூல்ல நேத்து ஒரு சின்னப் பிரச்னை…’ எனச் சொல்லிக்கொண்டே வந்து தரையில் உட்கார்ந்தாள் கோமதி. ‘ஹெச்.எம்-க்கும் உனக்குமா?’ ‘சீச்சீ… அந்த ஆளு ஒரு மண்ணாந்த. ஸ்கூல்ல என்ன நடக்குதுன்னே அவருக்குத் தெரியாது. வருவார்; தூங்குவார்; சாயங்காலம் வீட்டுக்குப் போய்டுவார். அதுக்குத்தான் அறுபதாயிரம் சம்பளம்.’ ‘பசங்க யாரையாவது அடிச்சுட்டியா, ரத்தக்காயம் எதுவும் ஆகிருச்சா?’ ‘என்னைப் பேசவிடுங்க. இல்லாட்டி டி.வி-யைப் பாருங்க. குறுக்கக் குறுக்கப் பேசிக்கிட்டு…’ – கோமதி முறைத்தாள். அப்போதும் தொலைக்காட்சியில்


ஆகாசத்தின் உத்தரவு

 

  சிமென்ட் மேடையில் ஒரு குதிரையின் மீது கிழக்கு பார்த்த நிலையில் முனியசாமி மாதிரி கொடூரத் தோற்றத்தில் ஒரு சாமி உட்கார்ந்து இருந்தது. சாமி சிலைக்கு முன் எந்த அவசரமும் இல்லாமல் கருத்த நிறமுடைய ஓர் ஆள் கும்பிட்டுக் கொண்டிருந்தான். நடந்து வந்த களைப்பால் வழிந்த வியர்வை யைக்கூடத் துடைக்க வில்லை. கீழே வைத்திருந்த பையில் இருந்து செய்தித்தாள் ஒன்றை எடுத்து, தரையில் விரித்துப்போட்டான். பையில் இருந்த பொரிகடலை பொட்டலத்தை எடுத்துப் பிரித்துவைத்தான். ஒரு சீப்பு வாழைப்பழத்தை


அரசுப் பள்ளியில் ஒரு நாள்

 

  “ரொம்பக் கத்தாத..!” – ஷாலினி சொன்னதை, வள்ளி காதில் வாங்கிக்கொள்ளாமல் வேகமாக வகுப்பறைக்குள் நுழைந்தாள். ஷாலினி தயக்கத்துடன் வாசலிலேயே நின்றுவிட்டாள். ‘இந்தியக் குடிமகனின் கடமைகளும் உரிமைகளும்’ என்று கரும்பலகையில் எழுதிக்கொண்டிருந்த பொன்னம்பலத்திடம், ”எங்க பொண்ண ரெண்டு நாளா எதுக்கு வெளிய போனு துரத்திவுடுறீங்க?’ – வள்ளி கேட்டாள். ”நீங்க யாரு.. வகுப்பு நடக்கும்போது திடுதிப்புனு உள்ள வரலாமா? ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்தா என்னா?” என பொன்னம்பலம் கேட்டதைக் காதில் வாங்காத வள்ளி, ”எதுக்காக எம்


பேமிலி

 

  செல்ஃபோனில் செய்தி வந்ததற்கான சத்தம் கேட்டது. “இது ஒரு தொல்ல. சம்பந்தம் இல்லாம செய்தி போடுவானுவோ. அது ஆஃபர், இது ஆஃபர்ன்னு” என்று சொல்லி அலுத்துக்கொண்டே சோபா மீது கிடந்த செல்போனை எடுத்து செய்தியைப் படித்தாள் சங்கீதா. “இன்றிரவு ஆஸ்திரேலியா போகிறேன். பெட்டியை தயார் செய்யவும்’ என்று பாஸ்கர் அனுப்பியிருந்த செய்தியைப் படித்ததுமே அவளுடைய முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது. உற்சாகமாக உடனே போன் போட்டாள். “ஹலோ. நாந்தான் பேசுறன். ஆஸ்திரேலியா போறீங்கன்னு செய்தி போட்டு இருக்கீங்களே