கதையாசிரியர் தொகுப்பு: இந்திரா பாலசுப்ரமணியன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

ஆண் பறவை

 

  ஹரிணி அன்று காலை கண் விழிக்கையில் முன் கூடத்து கடிகாரம் ஏழு முறை ஒலித்துவிட்டு ஓய்ந்திருந்தது. அவசரமாகப் படுக்கையறையைவிட்டு வெளியே வந்து, முன் கூடத்துக்கு விரைந்தாள். அங்கே மாமனார் இல்லை. வெளிவாசல் தெளித்து, கோலம் போடப்பட்டிருந்தது. “அடக் கடவுளே. சரோஜாவும் வந்தாச்சு வெளிக்கோலம் அவள் கைவண்ணம்தான். பாத்திரம் தேய்க்கப் போட வேண்டுமே! வந்தவள், ஒரு குரலாவது, கொடுக்கக் கூடாது. இன்றைக்குப் பார்த்து இப்படித் தூங்கிவிட்டேனே’ தனக்குள்ளே புலம்பியபடி வீட்டின் பின் பக்கம் விரைந்தாள். அங்கே வேலைக்காரப்


வசந்தத்தில் ஒரு நாள்

 

  தேவன், அந்த பூச்சூடும் வைபவத்தில் மூச்சுமுட்டுவதை உணர்ந்தான். மெல்ல தப்பித்து மாடி ஏறியபோது பாலூர் சித்தப்பா கூப்பிட்டார். “தேவா, உன் புஸ்தகம் வந்ததிலில் இருந்து இவளுக்கு உன்னை பார்க்கணுமாம்”. அவள் படியேறி வந்துகொண்டு இருந்தாள். நேர்வகிடு எடுத்து வாரப்பட்ட தலைப் பின்னல். மத்திய வயது. சட்டென எந்த சுவாரஸ்யமும் தோன்றாமல் அவன் புன்னகைத்தான். ஆனால் மேலேறி வந்ததும், அவனைப் பார்த்து புன்னகைத்ததும், படியில் கால் விட்டவாறு, கீழே இருந்து பார்ப்பவர்கள் கண்களுக்கு அவள் தெரிகிறமாதிரி அவள்


ஒரு பன்னீர் ரோஜாப்பூ

 

  கண்விழிக்கும்போதே சுப்புலட்சுமிக்கு தலை வெடித்துவிடும்போல வலித்தது. இரவு எந்த நினைவுடன் தூங்கினோம் என யோசிக்கும் நொடியில் ரகு நினைவில் தோன்றினான். அவன் நினைவு தோன்றியது என்று நினைப்பது அபத்தம், தூக்கத்திற்கும் விழிப்பிற்குமான இடைவெளியை கோர்ப்பதற்கான தாமத நொடிதான் அவனை மறந்தது. இல்லை என்றால் அவனை மறுப்பதேது? இன்றுடன் பத்து நாளாயிற்று தொடர்பு கொண்டு. எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான், எந்தத் தகவலும் இல்லை. “அவன் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்று என்னை அதிகமாக வருத்திக் கொள்கிறேனா?” தன்னை


முத்தமீந்த மிடறுகள்

 

  “வுங்கம்மா ஒழுங்கா இருந்தாதானே நீ ஒழுங்கா இருப்ப?”. வார்த்தைகளின் அமிலம் தன்னை தாண்டி செல்வதை, வலி வுணரமுடியா எல்லையில் நிற்பதை, ‘விஷ்ணுவா சொன்னான்?’ என்று தான் கல்லை போல் ஆகிவிட்டதை வுதறி எழுந்தாள் கிருஷ்ணா. மனம் நிறைந்த கூடலில், தன்னை அமிழ்த்திகொண்டு போகும்போது, எதையாவது பிடித்துக் கொள்ள வேண்டும்போன்ற, எடையற்று மிதக்கும், தாங்கமுடியா வெடித்தலில், அவனை கெட்ட வார்த்தை சொல்லி அழைக்கவேண்டும் போல இருந்தது. அந்த வார்த்தை அவனை காயப்படுத்தி இருக்கவேண்டும். கிருஷ்ணா ஆடைகளை நிதானமாக


ஈஸ்வர வடிவு

 

  கருணாவின் மரணம் தனக்குள் எந்தவித அதிர்வையும் ஏற்படுத்தாததை அவன் யோசித்தான். போகவேண்டுமா என்றிருந்தது. சித்திக்கு எதிர்வீடு. முப்பத்தி இரண்டு வருடங்களுக்குப் பின் சித்தியை பார்க்க வேண்டுமா என்றிருந்தது. அம்மா, பூக்குட்டியை பிரசவித்தபோது அவனுக்கு பத்து வயது. அவள் அவனை தள்ளி தள்ளி விட்டாள். சித்திதான் அவளை ஏற்றெடுத்துக்கொண்டாள். அம்மாவின் மீதான பால்வாசனை ஏக்கம் கொள்ளவைத்தது. அவள் சுடுசொல் சொல்லாமல் இருந்தால் போதும் என்று இருந்தது. சித்தி கல்யாணம் செய்துகொண்டு அந்த ஊருக்கே வந்து விட்டது ஆறுதலாக