கதையாசிரியர் தொகுப்பு: இந்திரா பார்த்தசாரதி

7 கதைகள் கிடைத்துள்ளன.

சர்ப்ப யாகம்!

 

 பூஜை அறையில் எப்பொழுதும் மங்கலான மஞ்சள் ஒளி இருந்துகொண்டே இருக்கும். சுதா, காலையில் அவ்வறைக் கதவைத் திறந்தபோது, மஞ்சள் ஒளி வழக்கத்தைவிட, சற்றுக் கூடுதலாக இருப்பதுபோல் அவளுக்குப்பட்டது. ஸ்வாமிப் படங்களுக்குப் பின்னால் ஜன்னல். வீட்டுக்கு வெளியேயிருந்த மரத்தின் இலைகள் காற்றில் உறைந்த நிலையில் இருப்பனபோல் அசையாமல் நிற்பன போல் தெரிந்தன. அறை உயிர்பெற்று எழுவதுபோல் அவளுக்குத் தோன்றிற்று. “சுரேஷ் இன்று பெல்ட் போட்டுக் கொள்ளவில்லையா? அலுவலகத்துக்குச் சீக்கிரம் போகவேண்டுமென்று நேற்றிரவு படுக்கும்போது முன் சொன்னான். புறப்பட்டுப் போய்விட்டானா?


முடியாத கதை!

 

 ‘தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்!’ இது எதில் வருகிறது? சண்முகத்துக்கு அப்போது நினைவுக்கு வரவில்லை. அவன் கண்ணெதிரே அவன் எழுதிய 700 பக்க நாவல் அக்னிக்கு உணவாவதை அவன் பார்த்துக்கொண்டு நின்றான். அவனே எரிந்துகொண்டு இருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. இந்த அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அதோ, அங்கே எரியும் ஒவ்வோர் எழுத்தும் அவன் உதிரத்தில் பிறந்தது. அவனுக்கே சொந்தமானது. அவனுக்கே மட்டும் புரியக்கூடிய புனிதமான அந்தரங்கம். இலக்கிய உலகம் அவன் எழுத்தைப் புரிந்துகொள்ள


தொலைவு

 

 ஜன்பத் போக்குவரத்துத் தீவு. பச்சை ஒளி தந்த அநுமதியில் அதுவரையில் சிலையாய் நின்ற ராட்சஸ பஸ்கள் சீறிக்கொண்டு புறப்பட்டன. “அப்பா, அதோ ஸ்கூட்டர்…” என்று கூவியவாறே வாசுவின் பாதுகாப்பிலிருந்து விடுவித்துக்கொண்டு சிவப்பு ஒளியையும் பாரா மல் வீதியின் குறுக்கே ஓடினாள் கமலி. “கமலி!” என்று கத்தினான் வாசு. அவள் ஏமாற்றத்துடன் திரும்பிப் பார்த்தாள். வாசு அவள் கையைப் பற்றி வேகமாகப் பின்னால் இழுத்துக்கொண்டு வந்தான். “வாக்’னு வந்தப்புறந்தான் போகணும்னு நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? வயது ஏழாச்சு.


குருதட்சணை!

 

 அது பசுபதிக்குப் பிடித்தமான ‘பேன்ட்’. தமிழில் என்ன சொல்வார்கள் ‘பேன்ட்’டுக்கு? ‘இகந்த வட்டுடை’ என்று மணிமேகலையில் வருகிறது. ‘இகந்த’ என்றால், ‘தொளதொள’ என்றிருப்பது. பைஜாமாவாக இருக்கலாம். அப்படியென்றால், வட்டுடை என்பது பேன்ட்டைக் குறிக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழர்கள் பேன்ட் போட்டுக்கொண்டு இருப்பார்களா என்று பசுபதி ஒரு கணம் யோசித்தார். வட்டுடை என்றால் யாருக்குப் புரியப்போகிறது? கால்சட்டை என்பதே சரி! இப்போதைய பிரச்னை, அவருக்கு மிகவும் பிடித்த மெரூன் நிற கால்சட்டையில், அதை இடுப்பில் நிறுத்தி வைப்பதற்கு


எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!

 

 வாசல் கதவைத் தட்டிவிட்டுப் போய்விட்டான் எமன். நாடகத்துக்கு முதல் விசிலா? டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்… ‘‘இவ்வளவு பெரிய அட்டாக்… நீங்கள் தப்பிச்சது மிராக்கிள்தான்!’’ தப்பித்தது எதற்காக என்று யோசித்தார் நடேசன். உலகத்தில் நடப்பன அனைத்துக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று சிலர் சிலர் சொல்கிறார்கள்; யதேச்சையாக அமைகின்ற ஒற்றுமையை வைத்துக்கொண்டு, அதைக் காரணம் என்று குழப்பிக்கொள்வது முட்டாள் தனம் என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள். காரணம் இருக்கிறது என்று நம்பினால், தப்பித்தது அவர் இருப்புக்கு ஓர் அர்த்தம் கற்பித்து,