Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: ஆலந்தூர் மள்ளன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

பால்

 

  ஒரு வாரமாகவே எதிர்பார்த்திருந்த செய்திதான் என்றாலும் வந்தபோது அது என்னைக் கடுமையாகத்தான் தாக்கியது. அந்த மத்திய அரசு அலுவலகத்தின் மின்விசிறி சோம்பலாக காகிதத்தை அலைக்கழிக்க, இடதுகையால் அதைப் பிடித்தபடி லீவ் லெட்டரை எழுதி பியூனிடம் கொடுத்தேன். “அய்யாட்ட கொடுத்துரு. நான் போறேன்…” பியூன் ஆறுமுகம் போலியான பவ்யத்துடன் அதை வாங்கிக் கொண்டு “சரி சார். நீங்க கெளம்புங்க” என்றான். சைக்கிளில் ஏறி மிதிக்க ஆரம்பித்தேன்… -0- அந்தப் பள்ளித் தலைமையாசிரியரின் அறைக்குள் நான் நுழைந்தபோதே முதன்


சாட்சி

 

  ஏதோ ஒரு காலத்தில் குளமாக இருந்து இன்று ’அண்ணா பேருந்து நிலையமான’ பிறகும் ‘குளத்து பஸ் ஸ்டாண்டாகவே’ அழைக்கப்பட்ட அதன் கற்படிகள் கீழே கீழே சென்று அது குளமாக இருந்த போது எத்தனை பிரம்மாண்டமாக இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க மட்டுமே வைத்தன. காலை எட்டு மணிக்கே என்றாலும் பாக்கியத்துக்கு வெயில் சுளீரென தலையில் மௌடீகமான தலைவலியாக இடிக்க ஆரம்பித்தது. கற்படிகளில் காலை வைத்த போது அவள் உள்ளங்கால்கள் வலித்தன. இது வரை அறியாத புதிய


அமுதம்

 

  ”யோவ் பிரானே வெளியே வாருமைய்யா!” கர்ணகடூரமான அந்தக் குரல், கவண்கல் போல் அந்தக் காணியின் வெளியெங்கும் மோதியது. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த பறவைகளின் ஒலிகள் அடுத்த சில நொடிகளுக்கு நிசப்தமாகி மீண்டபோது அவை தாறுமாறான கீச்கீச்சுகளுடன் சிறகடிக்கும் படபடப்பொலிகளாக மாறியிருந்தன. பச்சை போர்த்த மர உச்சிகளின் மேல் இளநீல வெளியில் பறவைகள் விரிந்து சிதறின. காலை அப்போதுதான் மெதுவாகப் பரந்து கொண்டிருந்தது. ஆதியமலப் பிரானய்யங்கார் என்கிற திருவடிப்பிள்ளை ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்தக் காணியில் அமைந்திருந்த மண் குடிலின்


திருப்பலி

 

  “ஆமாம் உன் செவிகளில் பிரச்சினை இல்லை. ப்ராஜெக்ட் கத்தோலிக் ரமணர் என்றுதான் நான் சொன்னேன்…” ஃபாதரின் ஏற்கனவே சிவந்த முகத்தில் இன்னும் சிவப்பாக ரத்தம் அலைமோதி அடங்கியதைப் பார்த்தேன். ஃபாதர் திரும்பி தனது நடுங்கும் கரங்களால் அந்தச் சிறிய கோப்பையை மெது சிவப்பாக நிரப்பினார். “மன்னித்துக் கொள்; எனக்கு இது தேவைப்படுகிறது… தன் குழந்தையை வேண்டாம் என்று ஓர் அன்னை சொன்னால் அந்தக் குழந்தை என்ன பாடுபடும் தெரியுமா?” நான் அமைதியாக இருந்தேன். வெளியே இரவுப்பூச்சிகளின்


சுமைதாங்கி

 

  ”சரி ஃபாதர்” என்றேன் நான் உற்சாகமாக. வெளியே ஏற்கனவே தொடங்கியிருந்த கோடையின் வெப்பம் தெரியாதபடி இதமான ஏசி அறையை நிறைத்திருந்தது. நெல்லை தூய பிரிட்டோ தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறையின் அலுவலக அறையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார் ஃபாதர் வெற்றியரசன். வழக்கம் போலவே தும்பைப் பூவின் வெண்மையான அங்கியும் நன்றாக ஷேவ் செய்யப்பட்ட முகமுமாக இருந்தார். அவர் எதிரில் இருந்த மேசையில் புனித சவேரியார் கருப்பு அங்கியுடன், சிலுவையை உயரத் தூக்கிப் பிடித்தபடி, தன் கச்சித