கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.ரவிசங்கர்

8 கதைகள் கிடைத்துள்ளன.

வாடகை வீடு! – ஒரு பக்க கதை

 

  சென்னையிலிருந்து என்னை தர்மபுரிக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள். இன்னும் மனைவி சுமதி குழந்தைகளை அழைத்து வரவில்லை. ஒரு நல்ல வீடு பார்த்து அழைத்து வர வேண்டும். சில வீடுகள் பார்த்ததில் இரண்டு வீடு எனக்கு பிடித்திருக்கிறது.ஒரே மாதிரியான வசதிகள் கொண்ட அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒரு வீட்டின் வாடகை ஐயாயிரமும் மற்றது ஆறாயிரமும் சொல்கிறார்கள். இந்த ஐயாயிரம் சொல்லும் ஹவுஸ் ஓனர் மாடியில் அவர் குடும்பத்துடன் இருந்து கொண்டு கீழ்ப் போர்ஷனை வாடகைக்கு விடுகிறார்.


எளிமையான திருமணம் – ஒரு பக்க கதை

 

  நமச்சிவாயம் ஆசிரியர் கடந்த பத்து நாட்களாக நடைப்பயிற்சிக்கு வரவில்லை. இன்றுதான் வந்திருக்கிறார்.அவர் பையனுக்கு திருமணம்.அதனால்தான் வரவில்லை. ஆனால் எங்களுக்கு யாருக்குமே அழைப்பில்லை.அவர் நல்ல சம்பளம் வாங்குகிறார்.பையனும் ஐ.டி. கம்பெனியில் நன்றாக சம்பாதிக்கிறான்.ஆனாலும் இந்த கல்யாணத்தை மிக எளிமையாக நடத்தி இருக்கிறார் . கோவிலில் திருமணம்.அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பாடு.மொத்தமே நூற்றைம்பது பேர்தான்.அதனால் தானோ என்னவோ அவரோடு நடைப்பயிற்சி செய்யும் எங்களுக்கு அழைப்பில்லை.நாங்கள் ஒரு பத்து பேர் வழக்கமாக நடைப்பயிற்சி முடித்து அரைமணி நேரம் பேசிக் கொண்டிருப்போம்.


நல்ல விஷயங்கள் – ஒரு பக்க கதை

 

  அக்கா போன் சேய்தாள்! ” நந்தினி! எங்க வீடு வரைக்கும் வந்துட்டு போகிறாயா? மனசு சரி இல்லை! நீ வந்து பேசிட்டு போனா கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும்!” அக்கா இப்படித்தான் சின்ன விஷயத்துக்கெல்லாம் பயப்படுவாள். தன் ஒரே பையன் வினோத்தை கல்லூரி ஹாஸ்டலில் சேர்த்த இந்த இரண்டு மாதமாக ரொம்பவும் தனிமையில் கஷ்டப்படுகிறாள். மாமா காலை 9 மணிக்கு ஆபிஸுக்கு சென்றால் மாலை 6 மணிக்கு மேல்தான் வருவார்.அது வரை அவள் சும்மா இருந்தாலும் பரவாயில்லை.


யாரை நம்புவது? – ஒரு பக்க கதை

 

  அந்த. வக்கீல் ஆபிஸில் காத்திருந்தேன்.வக்கீல் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.அவர் போன பிறகு வக்கீலுக்கு எதிரே உள்ள சேரில் அமர்ந்தேன். “சொல்லுங்க சார் என்ன விஷயம்?” என்றார் வக்கீல்.அவருக்கு வயது அறுபத்தைந்துக்குள் இருக்கும்.கிட்டத்தட்ட என் வயது தான். “சார் எனக்கு இரண்டு மகன்கள்.கல்யாணமாகி சென்னையில் குடும்பத்தோடு இருக்கிறார்கள்.நானும் என் மனைவியும் இங்கே இருக்கிறோம். எனக்கு இரண்டு வீடு,ஒரு தோப்பு இருக்கிறது.இப்போதே சொத்தை மகன்கள் பெயரில் எழுதி விடலாமா? என்று உங்களிடம் ஆலோசனை கேட்க வந்திருக்கேன்.” வக்கீல் என்னை


பூர்வீக வீடு – ஒரு பக்க கதை

 

  தயாளன் எனக்கு ஷேர் மார்க்கெட் டிரேடிங் செய்யும் போது பழக்கம். சமீப காலமாய் அவரைப் பார்க்க முடிவதில்லை.ஷேர் மார்கட் பற்றி சரியாக தெரியாமல் இன்ட்டிரா டிரேட் செய்து நன்றாக சம்பாதிக்கலாம் என்று ஆசைப் பட்டு,நிறைய கடன் வாங்கி தற்போது சிக்கலில் இருப்பதாக கேள்விப் பட்டேன். நான் எப்போதாவது தான் டிரேட் செய்வேன். மார்க்கட் வீக்காக இருந்தால் அந்தப் பக்கமே போக மாட்டேன்.அதனால் கொஞ்சம் சேஃப் ஆக இருக்கிறேன்.நான் அப்படி இருப்பது தயாளனுக்கு ரொம்ப பிடிக்கும்.என்னிடம் ஏதாவது