Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.மணிமாலா

5 கதைகள் கிடைத்துள்ளன.

தாம்பூலம்!

 

  ”மம்மி… சீக்கிரம் வாயேன்… டி.வி-யில டாடியக் காட்டறாங்க!” வெள்ளையில் நீலப்பூக்கள் சிதறிய மார்பிள் ஷிபான் சேலையைக் கட்டி ‘பின்’ பண்ணிக் கொண்டு இருந்த அருந்ததி.. அப்படியே ஓடி வந்தாள். டி.வி-யில் விநாயக்கின் முகத்தை க்ளோசப்பில் காட்ட ”ஹை.. டாடி!” என்று குதித்தாள் ஆறு வயது தீபிகா. விநாயக்கை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சினிமாவில் ஹீரோவின் அருகிலேயே ஆடும் அழகான டான்ஸர். பிரபலமான டான்ஸ் ட்ரூப்பில் எப்போதும் பிஸியாக இருப்பவன். இப்போது இரண்டு புதுப் படங்களுக்கு டான்ஸ்


சொல்லாமலே..

 

  அம்மா பரிமாறிய இட்லி குட்டி நிலவுகளைப் போன்றிருக்க, ரசனையுடன் ருசித்துச் சாப்பிட்டான் ராகேஷ். மங்களம் எதை சமைத்தாலும் அதில் அபரிமிதமான சுவை இருக்கும். காரணம், சமையலில் அன்பை சற்று தூக்கலாகவே கலப்பாள். ”சேர்ந்து சாப்பிடலாம்னு நினைச்சேன்.. அதுக்குள்ளே சாப்பிட்டே முடிச்சிட்டியாண்ணா!” என்றவாறே வீட்டுக்குள் நுழைந்த தங்கையைப் பார்த்து ராகேஷ் முகம் சுளித்தான். ”தீப்தி.. இங்கே வா!” ”என்னண்ணா?” ”என்ன இது?” ”துவரம் பருப்பும் சீரகமும் தீர்ந்து போச்சுனு அம்மாதான் வாங்கிட்டு வரச் சொன்னாங்க.. அதைத்தான் வாங்கிட்டு


மேற்கில் தோன்றிய உதயம்!

 

  கௌசல்யாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. உள்ளுக்கும் வாசலுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். இன்று ஞாயிற்றுக்கிழமை. அவள் கணவர் வீட்டுக்கு வரும் நாள்! சமையல்காரப் பெண்மணி எடுபிடி வேலை செய்ய.. சமையலில் மும்முரமாக இருந்த சைலஜா இவளைப் பார்த்துவிட்டு கேலியாக சிரித்தாள். ”பார்த்தியா அங்கே? மேடம், ஐயாவுக்காக பரபரன்னு இருக்கறதை? இந்த வயசிலேயும் அலையுதே!” ”ஆனா, அந்த ஐயா, இந்தம்மாவை கண்டுக்கறதே இல்லையே!” சின்னம்மாவே கேலி செய்வதால் தைரியமாக தன் கருத்தைச் சொன்னாள் சமையல்காரப் பெண் ருக்மணி. ”அவ்ளோ நல்லவங்க


நிம்மதி!

 

  ஆதவன் கிழக்கில் உதிக்க, ஈரக் கூந்தலை உலர்த்திய படி பால்கனியில் வந்து நின்றாள் வெண்மதி. பனிப் புகை முற்றி–லும் விலகாத நிலையிலும் மலை மேல் ஏறுபவர்களும், தரிசனம் முடிந்து கீழிறங்கு-பவர் களுமாக.. திருமலை சுறுசுறுப்பாக, பரவசமாக இருந்தது. பிரம்மோற்சவம் நெருங்கிக் கொண்டிருந்த தால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆன்லைன் மூலம் அவளின் தரிசன நேரம் இரவு பன்னிரண்டு மணி என்று குறிக்கப்பட்டிருந்தது. காற்றில் பரவிய நெய்வாசமும், சுப்ரபாதமும் அவளைப் பழைய நினைவுகளுக்கு இழுத்துச் சென்றன.


நெஞ்சாங்கூட்டில்

 

  வசுமதி சடக்கென்று பாம்பைப் போல் தலையை உயர்த்தி, தன் புத்தம் புது கணவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். ‘‘எ.. என்ன?” “நீ கல்யாணத்துக்கு முன்னாடி யாரை யாவது லவ் பண்ணியிருக்கியானு கேட்டேன்!’’ இயல்பாக, புன்னகை மாறாமல் கேட்ட பிரமோத் வசீகரமாக இருந்தான். ரூம் ஸ்ப்ரே, ஊதுபத்தி, மல்லிகை, ரோஜா, பால் சொம்பு, ஸ்வீட்ஸ், வசுமதி யின் அழகான அலங்காரம், எதிர்பார்ப்புடன் காத்திருந்த பிரமோத்.. என்று முதலிர வுக்கே உரிய தகுதிகள் அங்கு நிரம்பி இருந் தாலும், அவன்