கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.பி.சாரதி

9 கதைகள் கிடைத்துள்ளன.

மணல்

 

 மணல் நெருடியது மனத்தை. கீழே விழுந்த அந்தப் பேன்ட்டை மறுபடியும் கொடியில் போட்டே இருக்க வேண்டாம். உதிர்ந்தது மணல் மட்டுமா ? அவள் நம்பிக்கை… கோட்டை எல்லாமுந்தான், பின்னே என்ன ? அம்பத்தூரில் ஏதோ பாக்டரியில் அப்பரென்டீசாக இருப்பவனுக்கு பீச்சில் என்ன வேலை ? கேட்டுவிட முடியுமா ? அம்மாதான், என்றhலும் வயிற்று எஜமான் ஆயிற்றே. அப்பனைக் கொண்டு பிறந்துவிடவில்லை என்ற அற்ப சந்தோஷமும் போய் விட்டதா ? பாவி, ஆயிரம் ஆயிரமாய் சம்பாதித்தாலும் குடி, கூத்தி


சிவன் சொத்து!

 

 “கெட்டி மேளம் ! கெட்டி மேளம் !” குரல்கள் எதிரொலித்தன. “கொட்டாதே கெட்டி மேளம் ! நிறுத்து… நிறுத்து மேளத்தை !” குரலைத் தொடர்ந்து மேளக்காரக் கிழவன் கையிலிருந்த கொம்பையே பிடுங்கிக் கொண்டு ருத்திராகாரமாய் நின்றhள் அகிலாண்டம் ! ‘கொட்டாதே கெட்டி மேளம் !’ என்று மேளக்காரனுக்கு உத்தரவிட்ட நட்டோடு ‘கட்டாதே தாலியை‘ என்று மகனை நோக்கிப் பாய்ந்தாள். மாப்பிள்ளை கை நடுக்கத்தில் ஆடிக்கொண்டிருந்த தாலியையும் ‘லடக்’கென்று பிடிங்கிக் கொண்டு வீராங்கனையாக நின்று கொண்டிருந்தாள். தாலியை நோக்கி


மெமோ

 

 எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்தார் மேனேஜர் ஏகாம்பரம். அவர் எதிரே நடுங்கிக் கொண்டிருந்தான் டிரைவர் நடராஜன். “வண்டி என்ன உன் அப்பன் வீட்டு வண்டின்னு நெனைப்பா ?” “இல்லே சார். .. சின்னப்புள்ளே ரோடிலே மயக்கமா கெடந்துச்சு” “நீ இரக்கப்பட்டு நம்ம கம்பெனி வண்டியில ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தியாக்கும் ?. . அப்புறம் எங்கே போனே ?” “வேற எங்கேயும் போவலீங்க. வர்ற வழியிலே அந்தப் புள்ளையோட அம்மாவை ஆஸ்பத்திரியிலே கொண்டு விட்டுட்டு நேரே இங்கே தாங்க


வேலை கிடைத்தது

 

 “விற்பனையாகிறது குசேலர் எழுதிய குடும்பக் கட்டுப்பாடு நுhல்”. “வீட்டு வசதி யூனிட்டின் கிளைக்கு வசதியான வீடு தேவை” “பத்தே ரூபாய்த் தவணை, பத்தே ஆண்டுகள், சென்னைக் கடற்கரைக்குக் கிழக்கே பத்தே நிமிட விமானப் பயணம்.. மனைகள் விற்பனை.” விளம்பரப் பகுதிகளைப் படித்துக் கொண்டே வந்த சிங்காரம் திடீரென்று ஏறிக் குதித்தான். அவன் மட்டும் சற்று அதிக உயரம் உள்ளவனாக இருந்திருந்தாலோ, கூறை சற்று தாழ்ந்திருந்தாலோ நிச்சயம் தலை இடித்திருக்கும், அவனை அப்படி மகிழ்ச்சிக் குள்ளாக்கிய விஷயம் ஒரு


பெருமை

 

 ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அவள் கணவன் மீது, அம்மா மீது, அப்பா மீது, தங்கை மீது, அவள் மீதே கூட ! ‘அரைவிங் பை பிருந்தாவன் ‘ என்ற அவள் தங்கை கணவன் தந்தி அவள் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. சூட்டும் கோட்டுமாய் ஜம்மென்று வந்து நிற்கப் போகும் அவர் பக்கத்தில் ஜிப்பாவும் வேஷ்டியுமாய் அவள் கணவன். குமட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு. அதே ஜிப்பா வேஷ்டி கோலத்தில் தான் அவள் அவரை முதலில் பார்த்தாள். ஜிப்பாவோடும் பரிசு