கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.பரிமளா ராஜேந்திரன்

29 கதைகள் கிடைத்துள்ளன.

முடிவு உன் கையில்

 

  “”சுகந்தி சாப்பிட வாம்மா…” உள்ளிலிருந்து அம்மா கூப்பிட, ஹாலில் உட்கார்ந்து திருத்திக் கொண்டிருந்த பேப்பர் கட்டுகளை, மேஜை மேல் வைத்தவள் எழுந்து கொண்டாள். வளைந்த இடதுகாலை லேசாக சாய்த்து, சாய்த்து நடந்து உள்ளே சென்றவள், டைனிங் டேபிள் முன் அமர்ந்தாள். அவள் தட்டிலிருந்த சப்பாத்தியை குருமாவில் தொட்டு சாப்பிட ஆரம்பிக்க, உள்ளே படுத்திருக்கும் அப்பாவின் இருமல் சப்தம் கேட்டது. “”அம்மா… அப்பாவுக்கு மருந்து, மாத்திரை கொடுத்துட்டியா? இரண்டு நாளா இருமல் ஜாஸ்தியா இருக்கு. பாவம் ரொம்ப


மாரி ஆத்தா

 

  துபாயிலிருந்து பத்து நாள் விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் மகனிடம், காலில் கட்டுடன் விந்தி, விந்தி நடந்து வந்தாள் அகிலா. “”பரணி… என் மனசுக்கு நிம்மதியும், சந்தோஷமும் கிடைச்சுடுச்சிப்பா… வேலையில்லாம கஷ்டப்பட்ட உனக்கு, துபாயில் நல்ல வேலை கிடைச்சு, இந்த இரண்டு வருஷத்திலே கைநிறைய சம்பாதிச்சு ஊருக்கு வந்திருக்கே. எல்லாம் அந்த மாரி ஆத்தாவின் கருணை. “”கடம்பரான்பட்டி மாரி ஆத்தாவை தான், மனசார வேண்டிக்கிட்டேன். அவ உனக்கு, நல்ல வழியை கொடுத்திட்டா… நீ நாளைக்கு நம்ம கிராமத்துக்கு


நியாயம்

 

  கண்கள் சிவக்க, கோபமாக கத்திக் கொண்டிருந்தான் குமார். அவன் கோபமாக இருக்கும் போது, நெருங்கவே பயப்படுவாள் அனு. அடுக்களையில் அவளுக்கு வேலையே ஓடவில்லை. பாவம் சந்தீப்… பத்து வயது சிறுவன்; அவன் முன் அழுதபடி நின்றுக் கொண்டிருந்தான். இதற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல், உள் அறையில் உட்கார்ந்து சாமி ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருந்தாள் அனுவின் மாமியார் ஜெயலட்சுமி. “”இங்க பாரு சந்தீப்… உன்னோட நடவடிக்கை வரவர சரியில்லை. கொஞ்சமும் மனசில் பயமில்லை. கூட படிக்கிற


முடிவைத் தேடி

 

  பாத்திரங்கள் கடபுடவென்று உருள, அஞ்சலையை இழுத்துப் போட்டு அடித்து, காட்டு கத்தலில் கத்தினான் சொக்கன். பத்து வயது பெண்ணான ராசாத்தி, தன் இரண்டு தங்கைகளையும் தன்னோடு சேர்த்து அணைத்து, அப்பனுக்கு பயந்து குடிசை திண்ணையில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள். “”பொட்ட புள்ளைகளா பெத்து வச்சுக்கிட்டு, வாயா பேசற… இதபாரு… வேலைக்கு போயி நல்லாதானே சம்பாதிக்கிறே… வந்து காசு கேட்டா வாயை மூடிகிட்டு கொடுக்கிறதை விட்டுட்டு, திமிர்த்தனமா பேசற?” கீழே விழுந்தவளை, காலால் எட்டி உதைத்தான். “”நான் கஷ்டப்பட்டு