கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.பரிமளா ராஜேந்திரன்

29 கதைகள் கிடைத்துள்ளன.

தீவுகளாய் வாழ்க்கை..

 

  ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்த சந்திரன், கையில் காபியுடன் வாசலில் இருந்த சேரில் அமர்ந்தான். பக்கத்து வீட்டில் ஒரே சிரிப்பும், கலகலப்புமாக இருப்பதைப் பார்த்தான்… “”ரூபிணி… பக்கத்து வீட்டில் என்ன விசேஷம்?” என்று, அங்கு வந்த மனைவியை கேட்டான். “”அதுவா… அந்த வீட்லே இருக்காங்களே சிவகாமி அம்மா, அவங்களுக்கு, 60வது பிறந்தநாள் வருதாம். அதை கொண்டாட மூன்று மகன்கள், மருமகள்கள், பொண்ணு, மாப்பிள்ளையும், குழந்தைகளோடு ஊரிலிருந்து வந்திருக்காங்க; அதான் பாட்டும், சிரிப்புமாக இருக்கு,” என்றாள். “”ஆமாம்


தங்கமான மாப்பிள்ளை!

 

  தம்பி பெண்ணின் வளைகாப்பிற்கு மனைவியுடன் வந்திருந்தார் ராஜன். வளைகாப்பு வைபவம் முடிந்து, சாப்பாடு பந்தி நடக்க, சுறுசுறுப்பாக ஓடி, ஓடி பரிமாறும் தம்பி மாப்பிள்ளையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். “”என்னங்க… என்ன யோசனை? நம் பெண் லதாவுக்கு, இந்த மாதிரி விசேஷம் எப்ப வரப்போகுதுன்னு நினைச்சிட்டிருக்கீங்க தானே. கூடிய சீக்கிரம், அவளும், நல்ல சேதி சொல்லப் போறா பாருங்களேன்!” பார்வதி கணவனிடம் சொல்ல, “”அதில்லை பார்வதி… அங்க பாரு, தம்பி மாப்பிள்ளையை… மாமனார் வீடுன்னு இல்லாம, எல்லா


புரிந்து கொள்ளும் நேரம்!

 

  இரவு சாப்பாடு முடிந்து, நளினி அடுப்படியில் ஏதோ வேலையாக இருக்க, “டிவி’ பார்த்துக் கொண்டிருந்த மகன் அருகில் வந்தாள் தங்கம். “”பரணி… உன் பெரியம்மா, அவங்க சொந்தக்காரங்களோடு சேர்ந்து, ஷீரடி, பண்டரிபுரம் எல்லாம் அடுத்த மாதம் போகப் போறதாக சொன்னாங்க. நானும், அப்பாவும் அவங்களோடு போயிட்டு வரலாம்ன்னு பார்க்கிறோம். தகுந்த துணையோடுதான் அவ்வளவு தூரம் போக முடியும். ஏதோ கண் மூடறதுக்குள்ளே ஷீரடிக்கு போகணும்ன்னு எனக்கு ஆசை. என்னப்பா சொல்ற?” சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு,


மண(ன) முறிவு !

 

  பிரபல தனியார் மருத்துவமனையில், “ஏசி’ ரூமில், காலில் கட்டுடன் படுத்திருந்தாள் கல்பனா. கீழே விழுந்து, இடுப்பெலும்பு முறிந்து, பிளேட் வைத்து ஆபரேஷன் செய்து, இன்றோடு, மூன்று நாட்கள் முடிந்திருந்தது. “”அம்மா… இந்தாம்மா சாத்துக்குடி ஜூஸ்… குடிச்சுட்டு படுத்துக்குங்க.” மகள் ஆர்த்தி, படுத்திருந்த அம்மாவின் தலையை தூக்கி, டம்ளரில் இருந்த பழச் சாற்றை புகட்டினாள். “”ஆர்த்தி… நீயும் ஏம்மா என்னோடு சேர்ந்து கஷ்டப்படறே. நீ வீட்டில் ரெஸ்ட் எடு. வேலைக்காரி பாக்கியத்தை, ஆஸ்பத்திரியில் துணைக்கு வச்சிக்குறேன்னு சொன்னா,


எண்ணங்கள்

 

  ஹெட்கிளார்க் சுந்தரத்தின் டேபிள் மீது, பைலை பொத்தென்று வைத்தான் அட்டெண்டர். “”சார்… சாயந்திரம் டெஸ்பாட்சுக்கு அனுப்பணுமாம். மானேஜர் சொல்லச் சொன்னாரு.” தன் கடமை முடிந்தது என்று, அவன் வெளியேற, சுந்தரத்திற்கு ஆயாசமாக இருந்தது. இன்னும் இரண்டு மாதத்தில், ஓய்வு பெறப் போகிறார். பிறகு, வருமானமும் குறைந்துவிடும். ஆனால், வீட்டில் அதே செலவுதான் காத்துக் கொண்டிருக்கிறது. மகன் இன்ஜினியரிங் கடைசி வருஷம். கல்யாணத்துக்கு காத்து நிற்கும் மகள். மூன்று வருடமாக வரன் தேடுகிறார். எதுவும் முடிவுக்கு வந்தபாடில்லை.