கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.பரிமளா ராஜேந்திரன்

29 கதைகள் கிடைத்துள்ளன.

குறையும், நிறையும்!

 

  தாழ்ப்பாள் போடாமல் கதவு மூடியிருக்க, கதவைத் திறந்து உள்ளே வந்தாள் அனு. சோபாவில் உட்கார்ந்திருந்த தேவகி மகளைப் பார்த்தாள்… “”அனு… பஸ்சிலே வர்றதாலே எப்படி வரப் போறீயோன்னு கவலைப்பட்டுட்டு இருந்தேன்; நல்லவேளை, சீக்கிரமாக வந்துட்டே.” “”என்னம்மா, நான் என்ன சின்ன குழந்தையா… ஸ்கூட்டியை சர்வீசுக்கு விட்டிருக்கேன். ஒரு நாள் தானே, பஸ்சில் அதிகம் கூட்டமில்லை. ஆபீசிலும் இன்னிக்கு சீக்கிரம் வேலை முடிஞ்சதாலே, மானேஜர் கிளம்பச் சொன்னது நல்லதாப் போச்சு.” “”சரிம்மா… போய் டிரஸ் மாத்திட்டு வா.


எண்ணங்களின் சுமைகள்

 

  வேலை முடிந்து திரும்பிய கணவன், முகம் சோர்ந்து வருவதை பார்த்தாள் மாலதி. “ஆபீசில் ஏதும் பிரச்னையா? எதுவாக இருந்தாலும், வந்ததும் கேட்க வேண்டாம்…’ என முடிவு செய்தவளாக, உள்ளே சென்று, சூடான காபியுடன், அவன் அருகில் வந்தாள்… “”இந்தாங்க… காபி குடிங்க.” சிறிது நேரம் மவுனமாக இருந்தவள், “”என்னங்க… உடம்பு சரியில்லையா; தலை வலிக்குதா; முகம் ஏன் வாட்டமா இருக்கு?” “”இல்லை மாலதி… வரும் போது, என் பிரண்ட் ரகு வீட்டுக்கு போயிட்டு வந்தேன்.” “”ஏன்,


வடிகால்

 

  மாலை நேரம் — வேலைக்கு சென்றவர்களும், பிள்ளைகளும் வீடு நோக்கி திரும்ப, வாழ்க்கையை வாழ்ந்து முடித்து, கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கும் அந்த முதியவர்கள், நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில், தெருவின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கிற திண்டில் அமர்ந்து கொண்டிருந்தனர். பரஸ்பரம், தினமும் அந்த இடத்தில், மாலை நேரத்தில் சந்திப்பவர்கள் என்பது, அவர்கள் பேச்சிலிருந்து வெளிப்பட்டது. “”என்ன தியாகு… நாம மூணு பேரும் வந்தாச்சு; தலைவரை இன்னும் காணோம்?” “”தலைவருக்கு கிளம்பும் போது என்ன வேலை வந்ததோ… எப்படியும்


மதங்களின் சங்கமம்!

 

  “”டாக்டர் சார்… கதவைத் திறங்க.” வாசற்கதவு படபடவென்று தட்டப்பட, சாப்பிட்டுக் கொண்டிருந்த வசந்தன், “”ஜோதி… வாசல்ல யாருன்னு பாரு.” கதவைத் திறந்தாள் ஜோதி. “”அன்வர்பாய், கையில் பேரனை தூக்கியபடி நிற்க, அவருடன் இன்னும், நாலைந்து பேர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். “”அம்மா… டாக்டரை சீக்கிரம் வரச் சொல்லுங்க. நல்லா விளையாடிட்டிருந்த பிள்ளை திடீரென்று கை, கால் வெட்டி, மயக்கமாக கீழே விழுந்துட்டான்.” கண்களில் கண்ணீர் வழிந்தோட, பதற்றத்துடன் கூறினார் அன்வர் பாய். அவசரமாக வெளியே வந்தான்


அன்று மாணவி; இன்று தாய்!

 

  கடைத் தெருவில் பிரதானமா இருந்த அந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தான் சுந்தரம். சோப், பேஸ்ட் என சில பொருட்கள், அவனுக்கு வாங்க வேண்டியிருந்தது. ஊரிலிருந்தால் இதெல்லாம் பிரபா பார்த்துக் கொள்வாள். சம்பாதிப்பதுடன் தன் கடமை முடிந்தது போல் நிம்மதியாக இருப்பான் சுந்தரம். ஆபிஸ் வேலையாக, 10 நாட்களாக கோயமுத்தூர் வந்து, மேன்சனில் தங்கியிருந்தான். ஓட்டல் சாப்பாடு, தனிமை என, அவனுக்கு பொழுதே போகவில்லை. தேவையான பொருட்களை எடுத்தவன், பில் போடும் இடத்தில், தன் முன் நின்றவளை