கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.சூடாமணி

7 கதைகள் கிடைத்துள்ளன.

உருவத்தைத் தாண்டி

 

 ‘க்ளிக்!’ கறுப்புத் துணிக்குள்ளிருந்து தலையை வெளியே இழுத்த மாணிக்கம் நீண்டதொரு பெரு மூச்சு விட்டான். எதிரே பெரியவர்களும் குழந்தைகளுமாய் உட்கார்ந்திருந்த கூட்டம் எவ்வளவு தூரம் அவன் பொறுமையைச் சோதித்துவிட்ட தென்று அவனுக்கல்லவா தெரியும்! ஒரு நிமிஷம் அமைதியாய் உட்கார்ந்த கூட்டம் இப்போது சலசலத்துக் கலைந்தது. “படம் சரியாய் வந்திருக்குமில்லே?” என்றார் ஒரு நடுத்தர வயதினர் “அதைப் பத்திக் கவலையை விடுங்க!” “எப்போ கொடுப்பீங்க படத்தை?” இது ஒரு பெண் மணி. வேறு யார் இவ்வளவு அவசரப்படுவார்கள்! “நாளை


குழந்தையின் அழகு!

 

 “எங்க குழந்தை!” தம்மைத் தாண்டி வெளி வந்த சொற்கள் அந்த உதடுகளுக்கு இன்னமும் ஒரு புதிய ஒளி தான். இன்னமும் அதன் மகிழ்ச்சியில் அவை வியப்புற்று நின்றன. எதிர் முகத்தில் கேள்விக்குறி. “உங்க….?” “எங்க குழந்தை.” உதடுகளில் மலரும் புன்னகைப்பூ. நாவில் சுரக்கும் அதன் தேன். ராஜனை அவன் வசமின்றியே இன்பம் சிரிப்பாக ஆக்கிரமித்தது. எதிரே கல்லான மௌனம். சிரிப்பை நிறுத்திக் கொண்டு ராஜன் கேட்டான். ” என்ன அப்படித் திகைச்சுப் போயிட்டே வாசு? எங்க குழந்தை


கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி

 

 கிழவி தன் கறுப்பு நிற ப்ரீமியர் பத்மினியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாள். தனியாக இருந்தாள். கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காற்று வாங்கிக் கொண்டிருந்தாள். தண்ணீர் ஒற்றைக் காலடியில் வைத்திருந்தாள். மெரீனா கடற்கரையில் இன்று நல்ல காற்று. தினம் இப்படி இருக்கும் என்று நம்ப முடியாது. சில மாலை நேரங்களில் கதவடைத்த அறைபோல் கடற்கரையே புழுக்கமாயிருக்கும். வெளிறிய வானத்திலிருந்து காற்றுக்குப் பதில் அனல் இறங்கும். கழுத்தும் முகமும் வேர்வையாய்ப் பெருகும். ‘ராத்திரி மழை பெய்யப் போகுது’ என்று


சொந்த வீடு

 

 அரண்மனை மாதிரி வீடு என்பார்களே. அதுபோன்ற விசாலமான வீடு. பெரிய பெரிய அறைகள் இரண்டு கட்டு. முற்றம் கூடம் தாழ்வாரம் என்று தினம் ஒரு கல்யாணம் செய்யலாம். ஏன். அவர் பெரிய பெண்ணுக்கு நிஜமாகவே இந்த வீட்டில் வைத்துத்தான் கல்யாணம் நடந்தது. அரண்மனை ஆனால் வேறொருவரின் அரண்மனை விட்டுப் போகும் காலம் வந்துவிட்டது. சொந்தக்காரன் போகச் சொல்லிவிட்டான். அவன் எப்போதோ போகச் சொல்லியிருப்பான். கார்த்திகேயன் “நான் சொந்தமா *ப்ளாட் வாங்கப்போறேன் சார். வாங்கினதும் அங்க போயிடுவோம். சீக்கிரமே


இணைப் பறவை

 

 வாசலில் அரவம் கேட்டது. முன் அறை ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்த தாத்தா வேகமாகப் பின் கட்டுக்குச் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் ஸ்ரீமதி அவரைத் தேடிக்கொண்டு அங்கே வந்தாள். “யாரோல்லாம் வந்திருக்கா தாத்தா” “தெரியும்.” “அங்கே வரேளா?” “ம்ஹூம்.” “உங்களைப் பார்க்கத்தானே அவா….” “எனக்கு யாரையும் பார்க்கவேணாம். நீயே அவா சொல்றதையெல்லாம் கேட்டுண்டு அனுப்பிச்சுடு.” “உங்களைப் பார்க்காம போவாளா ?” “ஏதானும் காரணம் சொல்வேன். எனக்கு உடம்பு சரியாயில்லேன்னு சொல்லேன்” “நம்பவே மாட்டா” “அப்போ நான்