கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.சங்கர்

2 கதைகள் கிடைத்துள்ளன.

தெற்றுப்பல் சிரித்தது…

 

  நான் சொல்லப் போகும் விஷயம் உங்களுக்கு கண்டிப்பாக, நம்புவதற்கு கடினமாகத் தான் இருக்கும். என்னை மனப்பிறழ்வு ஏற்பட்டவன் என்று கூட நீங்கள் நினைக்கலாம். அதற்காக நான் வருந்தப் போவதில்லை. இந்த கதையை வாசிக்கத் தொடங்கியதால், உங்களுக்கும் நம்புவதை தவிர வேறு வழியில்லை. தெற்றுப் பல் என்றதும் உங்களுக்கு தோன்றுவது என்ன? நடிகை சித்தாரா, பாவனா, போன்ற தெற்றுப் பல் அழகிகளின் புன்னகை தானே. ஆம், பெண்களுக்கு அழகாகத் தான் இருக்கிறது. எனக்கும் அவர்களைப் போல தெற்றுப்பல்


குப்பை

 

  “ம்ம்மா…, குப்பேய்…!” அடித்தொண்டையிலிருந்து கிளம்பிய குரல், இரண்டு பக்கமும் அப்பார்ட்மென்ட் கட்டடங்களும், மாடி வீடுகளும் நெருக்கியடித்து நின்றிருந்த அந்த வீதியின் தொடக்கத்திலிருந்து கேட்டது. குரலின் தொடர்ச்சியாக வீதிக்குள் திரும்பி கொண்டே, நுழைந்தது இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்ட, அடர்த்தியான பச்சை நிற குப்பை வண்டி. வண்டியின் உள்ளே இரண்டு பெரிய பிளாஸ்டிக் ட்ரம்கள். பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்களில், வெயிலில் வெளுத்துப் போய் கிட்டத்தட்ட பச்சையாகவும், சிவப்பாகவும் இருந்தன. வண்டியின் ஒரப்பகுதிகள், ட்ரம்களில் மாநகராட்சியின் பெயர், வெள்ளை