கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.குருமூர்த்தி

20 கதைகள் கிடைத்துள்ளன.

சாவிகள்

 

  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகவனுக்கு சோதனை நாள். அநேகமாக நரகம் தான். மற்ற நாட்களில் கஷ்டமில்லை, ஆபீஸ் போய் தப்பித்துவிடலாம். ஆனால், இன்றைக்கு அப்படி முடியாது. நிச்சயமாக வீட்டில் இருக்க வேண்டும். எல்லா அவஸ்தைகளையும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ள வேண்டும். எங்கோ போய்விட்டு கொஞ்ச நேர இடைவெளிக்குப் பின் வீட்டுக்குத் திரும்பிய போது பூரணி இன்னும் தணியவில்லை என்று தெரிந்து மனம் துணுக்குற்றான். பெரியவளுக்கு “தொம்” “தொம்” மென்று முதுகில் அடி விழ அவள்


பயங்கள்

 

  பயங்கள்…. பயங்கள்…. எத்தனைவிதமான பயங்கள்… எப்படியெல்லாம் பயங்கள்… மனிதர்களின் பயங்களுக்கு அளவே இருப்பதில்லை. இந்தப் பயங்கள் ஜம்புநாதனுக்கு எப்போதுமே வந்ததில்லை… பயங்கள் என்ன… அவரைப் பொறுத்தவரை அவரது வாழ்க்கை முறையே வேறு. பயங்கள் இல்லை: துக்கங்கள் இல்லை: பிரச்சனைகள் இல்லை: கவலைகள் இல்லை: எதுவுமே இல்லை: அப்பா இருந்தவரை எல்லாம் அவர்… அது முடிந்ததும் அம்மா அம்மா இருக்கிறபோதே ராஜலட்சுமி வந்து சேர்ந்துவிட்டாள்.. தன்னிடம் கட்டுப்பெட்டியாக வளர்ந்திருந்த மகனை அப்படியே ராஜலட்சுமியிடம் ஒப்படைத்தாள் தாய்…. அதற்கப்புறம்


வலி

 

  தகவல் கிடைத்த மூன்றாவது நிமிஷம் ராகவன் வீட்டின் முன் இருந்தான் “இருப்பா என்று ஆட்டோவை நிறுத்தி விட்டு உள்ளே பாய்ந்தான். கூட்டம் கசகசவென்று நிற்க நடுவில் வாணி மனகிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் “ஒன்னுமில்லையம்மா ஒன்னுமில்லை பயப்படாதே இது சாதாரண வலிதான்.” என்று அர்த்தமில்லாத ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, வாணி வலிமயக்கத்தில் முடிவெடுக்க முடியாமல் இருந்தாள். ராகவன் ஆத்திரத்துடன் எல்லோரையும் பார்த்தான். அங்கிருந்த எல்லோர் மேலேயும் கோபம் வந்தது. ஒரு எழவுக்கும் பிரயோஜனமில்லாத ஜனங்கள் எல்லாம் பிள்ளைப்


ராஜாராமனுக்கு சளி பிடித்த கதை

 

  ராஜாராமனுக்கு சளி பிடித்த கதை:1 ராஜாராமனுக்கு இப்பொழுதில் சளி பிடித்திருக்கிறது. சரி சளிதான் என்று ஒதுக்கி விடலாம் என்று யாரும் நினைக்கலாம். அது சடுதியில் நடக்காது. ஒரு சின்னத் தும்மல் ரிக்டர் அளவில் ஐந்தாகப் பதிவு ஆகும். “ஏண்டா கொஞ்சம் நிதானமாகத் தும்மக்கூடாது.. நீ தும்மினது அந்த கும்பகோணம் வரை கேக்கும்….” எரிச்சலுடன் தகப்பனை பார்த்தான் ராஜாராமன்….”ஏன் ஜார்ஜ் புஷ்ஷிக்கே கேட்கும்னு சொல்லிடறது.. அவனவன் படறது அவனவனுக்குத் தெரியும்…” “சளிக்குப் போய் எவனாவது இவ்வளவு படுத்துவானா


பிதா மகன்கள்

 

  அகிலா அப்பாவை நினைத்துக் கொண்டாள். அப்பாவின் அன்பு நினைத்துப் பார்க்கவும் இயலாதது. அவர் ஒருநாளும் தன் மனம் கோனவிட்டதில்லை. அது பிரச்சினையில்லை. தன் மனசில் இருப்பதைத் தெரிந்துதான் சந்தோசப்படும்படி அதை முடித்துத் தருவதில் அவரை மிஞ்ச இன்னொரு அப்பா என்று யாரும் கிடையாது… ஒரு நாள் அப்படித்தான் நடந்தது… வீட்டுக்கு எதிரில் ஒரு பொட்டல் மாதிரி இருக்கும். மார்கழிக் குளிரில் குடிசைகளில் இருக்கிற சின்னப் பையன்கள் குளிரைப் போக்க குப்பைகளை செத்தைகளை எரிக்கிறதை ஆர்வத்துடன் பார்த்துக்