கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.குருமூர்த்தி

20 கதைகள் கிடைத்துள்ளன.

வாட்ஸ் அப்பில் (லாக் அப்பில்) ராஜாராமன்

 

  ராஜாராமன் அம்மாஞ்சி என்று நினைத்தால் அது உங்கள் தப்பு. டிரைவிங் லைசென்ஸ் வாங்க எட்டு போட வேண்டும் என்று பாழாய்ப்போன அந்த RTO சொல்ல ஆரம்பித்தது வினை… “எட்டு தலை கீழாய்ப்போடுவேன்..”. என்றான். நம்ம ஆள் “எட்டை எப்படிப் போட்டாலும் எனக்கு ஒன்று தான்” என்று RTO சொல்லி விட்டான். பிடித்தது சனியன்… எட்டு எப்படி ஒன்றாகும் என்பது ராஜாராமன் கேள்வி. சரி அடுத்து ஒற்றைச் சக்கரத்தில் இவன் எட்டு போட அது எட்டு இல்லை…


சக மனுஷனுக்காக…

 

  எவ்வளவோ பேர் எத்தனை தடைவ சொல்லியும்கூட தன் சைக்கிளை விட்டுவிடவோ, விற்று விடவோ குமரவேலு பிரியப்பட்டதில்லை. இருபத்து ஐந்து வருஷம் முன்பு புதிதாக வாங்கின சைக்கிள் அது. இன்னமும் கூட சுத்தமாக வைத்திருந்தான். அதை விலையுயர்ந்த கார் மாதிரியோ, அல்லது மோட்டார் சைக்கிள் மாதிரியோ துடைத்து பராமரிப்பது அவன் முக்கியமான வேலைகளில் ஒன்று. ஏறி உட்கார்ந்தால் மெத்தென்று சொகுசாய் இருக்கும். வெண்ணெயில் கத்தி இறங்குகிற மாதிரி சல்லென்று சாலையில் வழுக்கிக் கொண்டு ஓடும். அந்த சைக்கிளுக்கு


கட்டிப்போடு….. கட்டிப்போடுடா….

 

  காபி உறிஞ்சும்போது கோடு கோடாய் சுருங்கிய சிவந்த உதடுகளை கண் கொட்டாமல் பார்த்துக் கிறஙகினான் ஜீவா. கழுத்துக்கு கொஞ்சமே இறங்கி சிக்கென்று கழுத்தைப் பிடித்திருந்த பனியன் மீது அவனுக்குக் கோபம் வந்தது.. கொஞ்சம் தளர்ந்தால் எவ்வளவு பரவசப்படலாம்.. இந்த பனியனுக்கு இரக்கமே கிடையாது… “யோவ் காப்பியைச் சாப்பிடு.. மேயறியே…” “இல்லடா… வேறு யோசனை…” “எல்லாம் தெரியும்… உடாத… காப்பியை எடு. உன் புத்தி எனக்கா தெரியாது.. கொறப்பார்வை.. இப்படியே பார்த்தே முட்டைக் கண்ணை அவிச்சிடுவேன்… வெட்கங்கெட்ட


இதெல்லாம் கலப்படமில்லீங்க….

 

  சீதாராமனுக்கு ஒரு ராசி. பொதுவாக அவன் நினைப்பது நடக்கும், மற்றவர்கள் மாதிரி கஷ்டப்பட வேண்டியதே இல்லை. மற்றவர்கள் நூறு மடங்கு கஷ்டப்பட்டால் அதை சுலபமாக அவன் செய்து விடுவான். அந்த மாதிரி ஜாதகம். ஆனால், அவன் மூன்று விஷயங்களுக்காக மட்டும் நினைப்பதுமில்லை. முயற்சி செய்வதுமில்லை என்று முடிவு செய்திருந்தான். முதலாவது அவன் அமெரிக்க ஜனாதிபதியாக வேண்டும் என்று விரும்பவில்லை. அதற்கு காரணம் இருந்தது. அமெரிக்காவில் நிமிடத்திற்கு மூன்று கற்பழிப்பு சம்பவங்கள் நடப்பதாக பத்திரிக்கை வாயிலாகப் படித்திருந்தான்.


ராஜாராமன் எலி பிடித்த கதை

 

  சாரங்கபாணி, கோவிந்தன், ராஜாராமன்; காலைப்பதிப்பை பிரித்து முதலில் பார்ப்பது “இன்றைக்கு நாள் எப்படி” என்கிற தலைப்பை மற்றபடி கோபன் வெறகன் விஷயத்தை ஒபாமாவும், மோடியும் பார்க்கட்டும் என்று விட்டு விடுகிறதில் அவனுக்கு எந்தவொரு சங்கடமும் கிடையாது. அன்றைய நாள் பலனில் இன்றைக்கு சிறு சண்டைகள் பெருங்குழப்பம என்று வந்திருந்தது. அது எப்படி சிறு சண்டை பெரிய குழப்பமாகும் என்று அவனுக்கு புரியவில்லை. தலையைச் சொறிந்து கொண்டான். ஒரு குகையில் இருந்து வருகிற நரிமாதிரி கோவிந்தன் குடுக்கென்று