கதையாசிரியர் தொகுப்பு: ஆர்னிகா நாசர்

15 கதைகள் கிடைத்துள்ளன.

தொடு உணர்ச்சி!

 

  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளானதால், மணி, 7:00 ஆகியும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை, செல்வனும், கவிதாவும்! தாலுகா அலுவலகத்தில், கிளார்க்காக பணிபுரிகிறான் செல்வன். அவன் மனைவி கவிதா, கிறிஸ்துவ மேனிலைப் பள்ளியில், பிளஸ் 2 ஆசிரியையாக பணிபுரிகிறாள். இருவருக்கும் இடையே படுத்திருந்த அவர்களின், ஐந்து வயது மகள் ஸ்பூர்த்தி, ”அம்மா… ஒன் பாத் ரூம் வருது,” என்றாள். ”அம்மாப்பா துக்கத்தை கெடுக்காதே; நீயே, பாத்ரூமுக்கு போய்ட்டு வந்திரு,” என்றாள் கவிதா. தலையாட்டியபடி, படுக்கையிலிருந்து உருண்டு எழுந்து, உள்ளாடையை


யாராலும் முடியும் தம்பி!

 

  “நிலா’ பத்திரிகையின், சேலம் பதிப்பு அலுவலக வளாகத்திற்குள் பிரவேசித்தது, எடிட்டர் சங்கரலிங்கத்தின், கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார். ஒட்டுனர் கதவைத் திறந்து கொண்டு சங்கரலிங்கம் இறங்க, நானும் இறங்கினேன். வயர்லெஸ் செட்டையும், இரு கைபேசிகளையும் எடுத்துக் கொண்டு நடந்தார். அலுவலக உதவியாளன், அவரது சூட்கேசை எடுத்துச் சென்றான். நான், ஒரு பத்தடி தூரம் விட்டு, அலுவலகத்தை நோட்டமிட்டபடியே நடந்தேன். எடிட்டரின் குளிர்பதன மூட்டப்பட்ட அறையில், அவரது இளைய சகோதரர்கள் இருவர், ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தனர்; வணங்கினேன்.


சும்மா கிடப்பதே மேல்!

 

  தூர்ந்து போயிருந்த ஏரிக்கரையை ஆக்ரமித்து, பல குடிசைகள் முளைத்திருந்தன. குடிசைகளை, கருவேலம் மரங்கள் சூழ்ந்திருந்தன. குடிசைகளின் பின்னிருந்து கிளம்பிய கழிவுநீர் சாக்கடைகள், குட்டை குட்டைகளாக தேங்கியிருந்தன. தேங்கியிருந்த கழிவுநீரில், பன்றிகள் குட்டிகளுடன் புரண்டு கொண்டிருந்தன. புரளும் சுகத்தில் அவை, “பர்க் பர்க்…’ என, குரல் எழுப்பின. மின் கம்பத்திலிருந்து, ஒற்றை பல்ப் கனக்ஷன், குடிசைக்குள் இழுக்கப்பட்டிருந்தது. பெயர்தான் ஒற்றை பல்ப் கனக்ஷன். ஆனால், மாதம், 500 யூனிட் மின்சாரம் அதன் வழி@ய திருடப்பட்டுக் கொண்டிருந்தது. குடிசையின்


கதாநாயகன் தேர்வு!

 

  செல்லாத்தா தேநீர் விடுதி. கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்தார் உரிமையாளர்; தேநீர் ஆற்றிக் கொண்டிருந்தார் மாஸ்டர். அவரின் அருகில் தட்டுக்களில் சுடச்சுட ஆமைவடை, உளுந்து வடை, சமோசாக்கள் குவிந்திருந்தன. மேஜை இழுப்பறையைத் திறந்து, ஒரு சீட்டை எடுத்தார் உரிமையாளர். அதில், “கிளவுட் பைவ் புரொடக்ஷன்ஸ்’ கடன் பாக்கி, 1,328 ரூபாய் என போடப்பட்டிருந்தது. கடையின் எடுபிடியாக புதியவன் ஒருவன் சேர்ந்திருந்தான். அவனை, அழைத்தார் உரிமையாளர் … “”கொடுக்காப்புள்ளி தானே உன் பேரு?” “”ஆமா!” “”எதிர்த்த கட்டடத்ல சினிமா


மீன் அங்காடி!

 

  ஆளுயரக் கண்ணாடி முன் நின்றான் மருதநாயகம். வழுக்கைத் தலையில், அறை விளக்கு வெளிச்சம் பட்டு, டாலடித்தது. பின்னந்தலை கேசத்தையும், இரு கிருதாக்களையும், பென்சில் மீசையையும் டை அடித்திருந்தான். பவர் கிளாஸ் கண்ணாடிக்குள்ளிருந்த இரு கண்கள், மனதில் நிறைவேறாத ஆசைகளை பிரதிபலித்தன. குண்டு மூக்கு. சற்றே தெற்றிய மேல்வரிசை பற்கள். “டக் இன்’ செய்த முழுக்கை சட்டை; ரெடிமேட் பேன்ட். அக்குளில், டியோடரன்ட் பீய்ச்சி கொண்டான். சட்டைப் பையில், இருநூறு ரூபாய் எடுத்து வைத்துக் கொண்டான். மஞ்சள்