கதையாசிரியர் தொகுப்பு: ஆனந்த சீனிவாசன்

1 கதை கிடைத்துள்ளன.

அந்திம கிரியை!

 

  டாக்டர் ராகவன் வீட்டு அழைப்பு மணியை, தபால்காரன் சிவா அழுத்தியவுடன், வாசலுக்கு வந்தவர், ”என்ன, போஸ்ட்மேன்… ஏதாவது ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கா,” என்றார். ”இல்ல சார்… சன்னிதி தெருவில் உள்ள நாடார் கடையிலே, ‘டெலிவரி’ பண்ணிட்டு இருக்கும்போது, ஒருவர் மயங்கி விழுந்துட்டாரு… நாடார், உங்களை அழைத்து வரச்சொன்னார்,” என்றார், சிவா. அடுத்த ஐந்தாவது நிமிடம், நாடார் கடையில் இருந்தார், டாக்டர். பெரு மூச்சு வாங்கிக் கொண்டிருந்த பெரியவரை பார்த்தவுடன், ‘ஸ்டெதாஸ்கோப்’பை வைத்து, மார்பில் இரண்டு கைகளாலும்