கதையாசிரியர் தொகுப்பு: ஆனந்த் ராகவ்

14 கதைகள் கிடைத்துள்ளன.

கடைசிப் பயணம்

 

 அந்த ஹோண்டா சிட்டி சக்கரம் தேய, ஹாரன் அலறி நிற்க, ஒரு கோபமான முகம் கண்ணாடி இறக்கித் திட்டியது. காதில் விழாமல், விஜய் சாலையைக் கடந்து, விமான நிலையத்துக்குள் நுழைந்தார். அப்பா விபத்தில் இறந்து… உறவுக்காரனை நம்பி ஒப்படைத்த வியாபாரம் நொடித்து… நேசித்த மனைவி வேறு ஒருவனோடு ஓடிப்போய்… வாழ்க்கையே தலைகீழாகிப்போன கடந்த மாத நிகழ்வுகளுக்குப் பின்னர், உயிர் வாழும் ஆர்வம் அவருக்கு அவ்வளவாக மிஞ்சியிருக்கவில்லை. மும்பையிலிருந்து ஹாங்காங் செல்லும் விமானம் ஒரு மணி நேர தாமதத்துக்குப்


அந்தரங்கம்

 

 அலுவலக அறைக்குள் நுழைந்ததும், தன் இருக்கைக்கு எதிரே தீப்தி உட்கார்ந்திருந்ததை அவன் எதிர்பார்க்கவில்லை. அலுவலகத்துக்குப் போகாமல் அங்கே அவள் வந்த காரணம் என்ன? ”என்னாச்சு? ஏதாவது பிரச்னையா? இல்லே, உடம்பு கிடம்பு சரியில் லையா?” என்றான் கரிசனத்துடன். ”இல்ல நிக்கி, இந்தப் பக்கம் ஒரு க்ளையன்ட் மீட்டிங் இருந்தது…” சிரிப்பும் தவிப்புமாகச் சொன்னவளைச் சந்தே கம் தீராமல் பார்த்தான். ”மீட் பண்ண வேண்டிய க்ளையன்ட் வர கொஞ்சம் லேட்டாகும்போலிருந்தது. அதுவரைக்கும் இங்கே இருக்கலாமேனு வந்தேன்” என்றாள், அவன்


ஆறாவது அறிவு

 

 கழுத்துப் பட்டையை இறுக்கிக்கொண்டு இன்னொரு முறை கண்ணாடியில் முகம் பார்த்தார் டாக்டர் ராம்நாராயண். மோவாயில் நரை தொட்டு அடர்த்தியாகப் படர்ந்திருந்த தாடியையும், கொஞ்சமாக முன் பக்கம் வெற்று மண்டையைக் காட்டிவிட்டுச் சரிந்த கேசத்தையும் வாஞ்சையாகத் தடவினார். மூப்பின் அடையாளங்கள் துவங்கிய, ஆராய்ச்சி, பரிசோதனை என்று கழிந்த சுவாரஸ்யமற்ற வாழ்க்கைச் சுழற்சியில், எந்தப் பெண்ணும் ஆர்வம் காட்டாத அந்த முகத்தின் மேல் திடீரென்று பிரியம் வந்தவர் போல் பராமரித்தார். இன்னும் அரை மணியில் பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சி நிலையங்கள், செய்தி


மருந்து

 

 “டிரிங்க்ஸ் சாப்பிடும்போது கொறிக்க ஏதாவது பண்ணியிருக்கியா?” என்று சன்னமாக விசாரிக்கிறான் பிரபு. டிரிங்க்ஸ், அந்த வீட்டில் அவ்வப்போது புகும். கிருஷ்ணவேணிக்கு அது ஒவ்வாத ஒரு வழக்கம். அவள் அகராதியில் அதற்கு சாராயம் என்று பெயர். “காராசேவும் பக்கோடாவும் வாங்கி வெச்சிருக்கேன்…” கமறலும் புகையும் அடங்கி குக்கர் அமைதியாகி, புளியோதரையும் தயிர் வடையும் பாதி தயாரான இதரங்களுமாக சமயலறையில் மணம் கூடியது. இருட்டு கவிழ, அலுவலக நண்பர்கள் வந்தார்கள். குளிர்சாதனப் பெட்டியில் ஐஸ் கட்டிகள் உறைந்திருந்தன. தண்ணீர் பாட்டில்கள்,